தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், வருகிற 2ஆம் தேதி புயலாக உருபெரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.