46 இடங்களில் 9 கோடியே 6 லட்சம் மதிப்பில் புதிய பணிகள்! தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி !
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருணபுரம், வையாபுரி நகர், வேலுச்சாமி புரம் உள்ளிட்ட 46 இடங்களில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். புதிய சாலைகள், சிறு பாலங்கள், புதிய கழிவறை கட்டுமானப் பணிகள் என சுமார் 9 கோடி மதிப்பீட்டிலான பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மக்கள் பிரநிதிகள் கலந்து கொண்டனர்.