பணத்தை கொடுங்க.. டபுளாக தாரேன்..தூத்துக்குடியில் கோடிக்கணக்கில் சுருட்டிய போலி முள்படுக்கை சாமியார்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் முள்படுக்கையில் படுத்து குறி சொல்லி வந்த சாமியார், பணம் கொடுத்தால் இரட்டிப்பாக தருவேன் என்று சொல்லி பல பேரிடம் கோடிக் கணக்கில் பண மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகாரையடுத்து போலி சாமியாரும், அவருக்கு மூளையாக செயல்பட்ட அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.