Ford EcoSport : இதுவே கடைசி கார்! - இதோடு தயாரிப்பு நிறுத்தம்!
போஃர்டு நிறுவனம் இந்தியாவின் தன் தயாரிப்பை நிறுத்திக்கொண்டதைத் தொடர்ந்து, அதன் கடைசி இந்திய தயாரிப்பு கார் இன்று நிறைவு பெற்றது.
போர்டு நிறுவனம் இந்தியாவில் தன் தயாரிப்பை நிறுத்திக்கொள்வதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, பெற்றுக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், அனைத்து ஒப்பந்தமும் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள போஃர்டு கார் தயாரிப்பு நிறுவனத்தில் அதன் கடைசி கார் நிறைவு பெற்றது.