மோடியின் இந்த படத்தை பகிர்ந்த ஓபன் AI சி.இ.ஓ ! அதிர்ந்த இணைய உலகம் !
ஓபன் AI நிறுவனத்தின் புதிய இமேஜ் ஜெனரேஷன் டூல் சமூக வலைத்தளங்களில் ஒரு புதிய கலை புரட்சியை உருவாக்கியுள்ளது. ஸ்டுடியோ ஜிப்லி பாணியில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்கள் உருவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது. ஓபன் AI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், இந்திய அரசின் 'மை கவர்ன்மென்ட்' பதிவை பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் படங்கள், ஸ்டுடியோ ஜிப்லி பாணியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு, பல்வேறு தருணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் கைகுலுக்குவது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உடன் போஸ் கொடுப்பது, சிங்க குட்டிகளுடன் விளையாடுவது, அயோத்தியில் ராம் லல்லா கோயிலுக்கு செல்வது போன்ற படங்கள் ஜிப்லி பாணியில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.