2026 ஐபிஎல் இறுதிப் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக, ஆர்சிபி அணியின் டிம் டேவிட்டுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 50% அபராதமும், இரண்டு தகுதிக்குறைப்புப் புள்ளிகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஐந்து தகுதிக்குறைப்புப் புள்ளிகள் குவிந்துள்ளதால், அவர் அடுத்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விளையாட மாட்டார்.
RCB வெற்றியைக் கொண்டாடும் பெயரில் ஹைதராபாத், கர்னூல் போன்ற நகரங்களில் ரசிகர்கள் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தி, போக்குவரத்தை முடக்கியதால், போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் ஆர்சிபி மற்றும் ஜிடி அணிகள் மோதுகின்றன. கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை தீர்மானிக்கும் ஆறு முக்கிய வீரர்கள் யார்? இரு அணிகளின் பிளேயிங் 11 விவரங்கள் இங்கே.
நடப்பு சாம்பியன் RCB அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத்தில் நடக்கும் IPL 2026 இறுதிப் போட்டியில் மோதுகின்றன. RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லக் காத்திருக்கிறது. சொந்த மண்ணில் GT அணி பதிலடி கொடுக்கத் துடிக்கிறது.
ஐபிஎல் 2026 ஆரஞ்சு கேப் ரேஸ் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வைபவ் முதலிடத்தில் இருக்கிறார். கில் மற்றும் சாய் சுதர்சன் இறுதிப்போட்டியில் அவரது சாதனையை முறியடிக்க தயாராகி வருகின்றனர். ஒரு சீசனில் 3 வீரர்கள் 700+ ரன்கள் குவிப்பது இதுவே முதல் முறை
Gujarat Titans vs Rajasthan Royals : ஐபிஎல் குவாலிஃபையர்-2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஃபைனல் டிக்கெட்டுக்காக மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்கொள்ளும்.
ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படுதோல்வி அடைந்தது. வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால், அணி உரிமையாளர் காவ்யா மாறன் மைதானத்திலேயே கண்ணீர் விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
IPL 2026 எலிமினேட்டர் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 15 வயது வீரர் வைபவ் சூரியவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் அடித்து மிரட்டினார். இவரது அதிரடி ஆட்டத்தால் பல T20 சாதனைகளை முறியடித்துள்ளார். ஆண்ட்ரே ரஸல், சனத் ஜெயசூர்யா போன்ற ஜாம்பவான்கள் இவரைப் பாராட்டியுள்ளனர்.
ஐதராபாத் அணிக்கு எதிரான முதலாவது எலிமினேட்டர் போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான ஆட்டத்தால் இமாலய இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
SRH vs RR: ஐபிஎல் 2026 தொடரில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சாதனைகளை மழையாய் பொழிந்து வருகிறார். SRHக்கு எதிரான முக்கியமான பிளேஆஃப் போட்டியில், இவர் வானவேடிக்கை காட்டி பல சாதனைகளை உடைத்தெறிந்துள்ளார். அந்த சாதனைகளின் பட்டியல் இதோ.
IPL News Tamil - Catch all the action from the Indian Premier League (IPL) including live scores, match schedules, team news, and player updates on Asianet News Tamil. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள், அணிகள், செய்திகள்.