MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • RCB ரசிகர்களின் வெறிச்செயல்: அடித்து நொறுக்கப்பட்ட போலீஸ் பேரிகேடுகள்! வைரலாகும் வீடியோக்கள்!

RCB ரசிகர்களின் வெறிச்செயல்: அடித்து நொறுக்கப்பட்ட போலீஸ் பேரிகேடுகள்! வைரலாகும் வீடியோக்கள்!

RCB வெற்றியைக் கொண்டாடும் பெயரில் ஹைதராபாத், கர்னூல் போன்ற நகரங்களில் ரசிகர்கள் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தி, போக்குவரத்தை முடக்கியதால், போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 01 2026, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
வரலாற்று வெற்றியும், ரசிகர்களின் வெறிச்செயலும்
Image Credit : GEMINI AI

வரலாற்று வெற்றியும், ரசிகர்களின் வெறிச்செயலும்

ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. 18 ஆண்டுகளாக ஒரு கோப்பை கூட வெல்லவில்லை என்று கிண்டல் செய்யப்பட்ட ஒரு அணி, இப்போது அடுத்தடுத்து இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்று மாபெரும் சரித்திரத்தை எழுதியிருப்பது ரசிகர்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும், இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் சில ரசிகர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
பெங்களூரு முதல் தெலுங்கு மாநிலங்கள் வரை
Image Credit : X/@karnatakaportf (Screen Grab)

பெங்களூரு முதல் தெலுங்கு மாநிலங்கள் வரை

கடந்த 2025-ஆம் ஆண்டு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede) எதிர்பாராதவிதமாக 11 பேர் உயிரிழந்தனர். இந்த சோகமான சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு கர்நாடக அரசு கொண்டாட்டங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்திருந்தது.

ஆனால், அரசின் உத்தரவுகளையும் மீறி பெங்களூரு நகரின் பல பகுதிகளில் நள்ளிரவில் ரசிகர்கள் கட்டுப்பாடின்றி வீதிகளில் இறங்கினர். இந்த வெறித்தனமான கொண்டாட்டம் கர்நாடகாவோடு மட்டும் நின்றுவிடாமல், அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் எதிரொலித்தது.

33
ஹைதராபாத் மற்றும கர்னூலில் நடந்த அராஜகம்
Image Credit : Getty

ஹைதராபாத் மற்றும கர்னூலில் நடந்த அராஜகம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆர்சிபி ரசிகர்களின் கொண்டாட்டம் மிக மோசமான அராஜகமாக மாறியது. நகரின் முக்கியப் பகுதிகளான செக்ரட்டேரியட் (தலைமைச் செயலகம்), எஸ்.ஆர் நகர் மற்றும் கூகட்பள்ளி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நள்ளிரவில் திரண்டனர். அவர்கள் சாலையின் நடுவே ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்ததோடு, சாலையில் சென்ற வாகனங்களின் மீது ஏறி நின்று கூச்சலிட்டு, போக்குவரத்தை முற்றிலும் முடக்கினர். மேலும், அரசுப் பேருந்துகள் மற்றும் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புகளை (Barricades) அடித்து உடைத்து சேதப்படுத்தினர். 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by mid-day (@middayindia)

🚨🇮🇳 Paris-type scenes in Hyderabad after RCB's IPL victory.

Videos from Tank Bund show sections of the crowd allegedly vandalizing property and causing damage during what began as celebrations.

A cricket trophy should bring joy, not destruction.

🎥 Tank Bund, Hyderabad… https://t.co/3BTiU2BGOF pic.twitter.com/3qnbMnsMW9

— Global Pulse (@Globalpulse04) June 1, 2026

இதேபோல், கர்னூல் நகரிலும் அவர்களின் வெறிச்செயல் கட்டுக்கடங்காமல் போக, அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by My City-KURNOOL (@mycity_kurnool)

நள்ளிரவில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் கடும் அச்சுறுத்தலாக மாறிய இந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஹைதராபாத் காவல்துறை தீவிர முயற்சி எடுத்தது. நிலைமை எல்லை மீறிச் சென்றதால், கூட்டத்தைக் கலைத்து போக்குவரத்தைச் சீரமைக்கப் போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Issu🐈 (@iismail__55)

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஐபிஎல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
தெலுங்கானா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Recommended image2
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!
Recommended image3
IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா.. சுந்தருக்கு ரூ.75 லட்சம் பரிசு..
Related Stories
Recommended image1
RCB: செம வைப்! மனைவி அனுஷ்கா, ஆர்சிபி வீரர்களுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி! வீடியோ பாருங்க!
Recommended image2
RCB Wins IPL 2026 : ஐபிஎல் 2026 கோப்பையை தட்டித்தூக்கிய ஆர்சிபி! விராட் கோலி மாஸ்! பேக்‍ டூ பேக் சாம்பியனாகி சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved