MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • RCB: செம வைப்! மனைவி அனுஷ்கா, ஆர்சிபி வீரர்களுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி! வீடியோ பாருங்க!

RCB: செம வைப்! மனைவி அனுஷ்கா, ஆர்சிபி வீரர்களுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி! வீடியோ பாருங்க!

RCB: ஆர்சிபி அணி தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டித் தூக்கிய நிலையில், மனைவி அனுஷகா சர்மா மற்றும் ஆர்சிபி வீரர்களுடன் விராட் கோலி குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Rayar r
Published : Jun 01 2026, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 2026; ஆர்சிபி சாம்பியன்
Image Credit : Asianet News

ஐபிஎல் 2026; ஆர்சிபி சாம்பியன்

ஐபிஎல் 2026 தொடரில் கோப்பை வென்று ஆர்சிபி அணி அசத்தியுள்ளது. குஜராத் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை தட்டித்தூக்கி சாதனை படைத்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆர்சிபி பாஸ்ட் பவுலர்களின் அபார பந்துவீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. பின்பு ஆடிய ஆர்சிபி 18 ஓவரில் 5 விக்கெட் இழந்து வெற்றி இழக்கை எட்டியது. சேஸ் மாஸ்டர் விராட் கோலி 42 ப்ந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் விளாசி ஆட்டநாயகான ஜொலித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அனுஷ்கா, ஆர்சிபி வீரர்களுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி
Image Credit : X

அனுஷ்கா, ஆர்சிபி வீரர்களுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி

சுமார் 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்காக ஏங்கித் தவித்த ஆர்சிபி அணி கடந்த 2025 சீசனில் தான் முதல் கோப்பையை கையில் ஏந்தியது. இப்போது தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை தட்டித்தூக்கியதால் ஆர்சிபி வீரர்கள் குஷியடைந்துள்ளனர். ஆர்சிபி வீரர்கள், பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாப் அனைவரும் டிரஸ்ஸிங் ரூமில் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர். இந்த நிலையில், ஆர்சிபி தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்ற உற்சாகத்தில் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் ஆர்சிபி வீரர்களுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Related Articles

Related image1
Vaibhav Suryavanshi:15 வயதில் லட்சக்கணக்கில் பரிசுத்தொகை + சொகுசு கார்! 5 விருதுகளை தட்டித்தூக்கி வைபவ் சூர்யவன்ஷி சாதனை
Related image2
RCB Wins IPL 2026 : ஐபிஎல் 2026 கோப்பையை தட்டித்தூக்கிய ஆர்சிபி! விராட் கோலி மாஸ்! பேக்‍ டூ பேக் சாம்பியனாகி சாதனை!
34
விராட் கோலி ஆட்டம் போட்ட வீடியோ இதோ
Image Credit : X@ipl

விராட் கோலி ஆட்டம் போட்ட வீடியோ இதோ

இது தொடர்பாக ஆர்சிபி அணி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில், விராட் கோலி மனைவி அனுஷ்காவுடன் ஆட்டம் போடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. தனி வைப்பில் மனைவியுடன் ஆடும் விராட் கோலி, சக வீரர்கள் மற்றும் பேட்டிங் பயிற்சியாளரும், ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து ஸ்பெஷல் ஸ்டெப் போட்டு ஆடுவதும் வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை வெளியிட்ட ஆர்சிபி அணி 'டான்ஸ் ஃப்ளோரில் 'கிங்' கோலியின் மாஸ்டர்கிளாஸ்! முழுக்க முழுக்க பாசிட்டிவ் வைப்ஸ். மனசுக்கு நிறைவான தருணம். இன்னும் பல உணர்வுகள் கலந்தது. ஆரம்ப நாள் (Day 1) முதலே எங்களுடன் இருப்பதற்கு நன்றி அனுஷ்கா சர்மா' என்று தெரிவித்துள்ளது.

𝗞𝗶𝗻𝗴 𝗞𝗼𝗵𝗹𝗶’𝘀 𝗺𝗮𝘀𝘁𝗲𝗿𝗰𝗹𝗮𝘀𝘀 𝗼𝗻 𝘁𝗵𝗲 𝗱𝗮𝗻𝗰𝗲 𝗳𝗹𝗼𝗼𝗿 😉

Pure vibes. Wholesome. And so much more. Anushka Sharma, thank you for being our Day 1. ❤️ pic.twitter.com/7Qmxxv6QtG

— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 1, 2026

44
விராட் கோலியின் மாஸ் சாதனை
Image Credit : IPL MEDIA

விராட் கோலியின் மாஸ் சாதனை

ரன்களை சேஸ் செய்ய வேண்டும் அதுவும் பைனலில் சேஸ் செய்ய வேண்டும் என்றால் விராட் கோலி முதல் ஆளாக நிற்பார். இதுவரை 9 T20 தொடர் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 59.25 என்ற அபாரமான சராசரியில் 419 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 77. T20 தொடர் இறுதிப் போட்டிகளில் நான்கு அரைசதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர் கோலிதான். மேலும், 300 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் அதிக பேட்டிங் சராசரி வைத்திருப்பதும் அவர்தான். ஐபிஎல் 2026 தொடரில் 16 இன்னிங்ஸ்களில் 675 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் கோலி நான்காவது இடத்தைப் பிடித்தார். அவரது சராசரி 56.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 165.84. இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விராட் கோலி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐபிஎல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi:15 வயதில் லட்சக்கணக்கில் பரிசுத்தொகை + சொகுசு கார்! 5 விருதுகளை தட்டித்தூக்கி வைபவ் சூர்யவன்ஷி சாதனை
Recommended image2
RCB Wins IPL 2026 : ஐபிஎல் 2026 கோப்பையை தட்டித்தூக்கிய ஆர்சிபி! விராட் கோலி மாஸ்! பேக்‍ டூ பேக் சாம்பியனாகி சாதனை!
Recommended image3
Ruturaj Gaikwad: இந்தியா A அணியின் துணை கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்..!
Related Stories
Recommended image1
Vaibhav Suryavanshi:15 வயதில் லட்சக்கணக்கில் பரிசுத்தொகை + சொகுசு கார்! 5 விருதுகளை தட்டித்தூக்கி வைபவ் சூர்யவன்ஷி சாதனை
Recommended image2
RCB Wins IPL 2026 : ஐபிஎல் 2026 கோப்பையை தட்டித்தூக்கிய ஆர்சிபி! விராட் கோலி மாஸ்! பேக்‍ டூ பேக் சாம்பியனாகி சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved