MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • RCB Wins IPL 2026 : ஐபிஎல் 2026 கோப்பையை தட்டித்தூக்கிய ஆர்சிபி! விராட் கோலி மாஸ்! பேக்‍ டூ பேக் சாம்பியனாகி சாதனை!

RCB Wins IPL 2026 : ஐபிஎல் 2026 கோப்பையை தட்டித்தூக்கிய ஆர்சிபி! விராட் கோலி மாஸ்! பேக்‍ டூ பேக் சாம்பியனாகி சாதனை!

RCB Wins IPL 2026: ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி அணி தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

2 Min read
Author : Rayar r
| Updated : May 31 2026, 11:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 2026 கோப்பையை வென்ற ஆர்சிபி
Image Credit : X@ipl

ஐபிஎல் 2026 கோப்பையை வென்ற ஆர்சிபி

ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடிய ஆர்சிபி அணி ஐபிஎல் 2026 கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரன் மெஷின்கள் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் பவர் பிளேவிலேயே தங்கள் விக்கெட்டை இழந்தனர். கேப்டன் சுப்மன் கில் (10 ரன்) ஜோஸ் ஹேசில்வுட் பந்தில் கேட்ச் ஆனார். சாய் சுதர்சனும் 12 ரன்னில் புவனேஷ்வர் குமார் பந்தில் வீழ்ந்தார். அதிரடி வீரர் ஜோஸ் படலரும் (19) குர்னால் பாண்ட்யா பந்தில் ஸ்டெம்பிங் ஆனார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆர்சிபி சூப்பர் பவுலிங்
Image Credit : X

ஆர்சிபி சூப்பர் பவுலிங்

ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த 37 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக இருந்தார். ஆர்சிபி அணியின் பாஸ்ட் பவுலர்கள் மிகச்சிறப்பாக பவுலிங் செய்தனர். ஆர்சிபி தரப்பில் ராசிக் சலாம் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். புவனேஷ்வர்குமார், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளும், குர்னால் பாண்ட்யா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

வெங்கடேஷ் ஐயர் அதிரடி

பின்பு எளிய இலக்கை நோக்கி ஆடிய ஆர்சிபி அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. விராட் கோலியும், வெங்கடேஷ் ஐயரும் அதிரடியில் வெளுத்துக் கட்டினார்கள். பவுண்டரியும், சிக்சருமாக விளாசிய வெங்கடேஷ் ஐயர் வெறும் 16 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து சிராஜ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 1 ரன்னில் கசிசோ ரபாடா பந்தில் கேட்ச் ஆனார். இதன்பிறகு வந்த கேப்டன் ரஜத் படிதாரும் (15 ரன்) தேவையில்லாமல் ரஷித் கான் பந்தில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆனார். அதே ஓவரில் குர்னால் பாண்ட்யாவும் (0) வெளியேறியதால் ஆர்சிபி 91/4 என பரிதவித்தது.

Related Articles

Related image1
IPL 2026: அதிக சிக்சர்கள் நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி! அதிவேக சதம், அரை சதம் விளாசியது யார் தெரியுமா?
34
விராட் கோலி அதிவேக அரை சதம்
Image Credit : ANI

விராட் கோலி அதிவேக அரை சதம்

ஒருக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி தனது டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் ரபாடா பந்தில் பவுண்டரி, சிக்சருமாக நொறுக்கி வெறும் 24 பந்துகளில் அரை சதம் விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஓரளவு சிறப்பாக விளையாடிய டிம் டேவிட் 17 பந்துகளில் 24 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ஆனால் கடைசி வரை அட்டகாசமாக விளையாடிய விராட் கோலி அணியை வெற்றி பெற வைத்தார். ஆர்சிபி அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழந்து 161 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 2026 கோப்பையை ஆர்சிபி தட்டிச் சென்றது.  விராட் கோலி 42 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

44
தொடர்ந்து 2வது முறையாக ஆர்சிபி சாம்பியன்
Image Credit : IPL MEDIA

தொடர்ந்து 2வது முறையாக ஆர்சிபி சாம்பியன்

ஆர்சிபி அணி கோப்பையை வென்றதும் விராட் கோலி குஜராத் கேப்டன் சுப்மன் கில் பாணியில் அதனை கொண்டாடினார். ஆர்சிபி வீரர்கள் அனைவரும் துள்ளிக்குதித்து இந்த வெற்றியை கொண்டாடினார்கள். சுமார் 17 ஆண்டு காலம் ஐபிஎல் கோப்பைக்காக ஏங்கித்தவித்து கொண்டிருந்த ஆர்சிபி கடந்த 2025 சீசனில் தான் முதல் கோப்பையை வென்றது. இப்போது தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்று மாஸ் காட்டியுள்ளது. இந்த தொடர் முழுவதும் ஆர்சிபி அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை தட்டித்தூக்கியுள்ளது. ஆர்சிபியின் இளம் கேப்டன் ரஜத் படிதார் தொடர்ந்து 2 முறை அணிக்கு கோப்பை பெற்றுக் கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
விராட் கோலி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ruturaj Gaikwad: இந்தியா A அணியின் துணை கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்..!
Recommended image2
RCB vs GT: பந்து தரையில் பட்டதா இல்லையா? ஐபிஎல் 2026 பைனலில் அம்பயரை அலறவிட்ட ரஜத் படிதார்!
Recommended image3
IPL 2026: அதிக சிக்சர்கள் நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி! அதிவேக சதம், அரை சதம் விளாசியது யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
IPL 2026: அதிக சிக்சர்கள் நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி! அதிவேக சதம், அரை சதம் விளாசியது யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved