MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2026: அதிக சிக்சர்கள் நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி! அதிவேக சதம், அரை சதம் விளாசியது யார் தெரியுமா?

IPL 2026: அதிக சிக்சர்கள் நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி! அதிவேக சதம், அரை சதம் விளாசியது யார் தெரியுமா?

IPL 2026: ஐபிஎல் 2026 தொடரில் 15 வயதான இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி அதிக சிக்சர்கள் பறக்க விட்டுள்ளார். அதிவேக சதம், அரை சதம் விளாசியது யார் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 31 2026, 08:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 2026 பைனல்
Image Credit : Vaibhav Suryavanshi Instagram

ஐபிஎல் 2026 பைனல்

ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்கள் விளாசியது யார் ? அதிவேக சதம் மற்றும் அதிவேக அரை சதம் விளாசியது யார்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதிக சிக்சர்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி

முதலில் அதிக சிக்சர்கள் பறக்க விட்டது யார் என்று கேட்டால் இது 15 வயதான பாலகன் வைபவ் சூர்யவன்ஷி என்று சின்ன குழந்தை கூட சொல்லி விடும். ஏனெனில் ஐபிஎல் 2026 தொடரில் 700க்கும் அதிகமான ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்து பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி அதிக சிக்சர்கள் நொறுக்கியர்கள் பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் சிக்சர் அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல, ஆனால் இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி எதிர்கொண்ட 327 பந்துகளில் 72 சிக்சர்களை பறக்கவிட்டு மெகா சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அபிஷேக் சர்மா, ரஜத் படிதார்
Image Credit : X

அபிஷேக் சர்மா, ரஜத் படிதார்

வைபவ் சூர்யவன்ஷி 16 போட்டிகளில் 72 சிக்சர்களுடன் 776 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 237.30 ஆகும். அதிக சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா 15 போட்டிகளில் 43 சிக்சர்கள் விளாசி 2வது இடத்தில் உள்ளார். ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் 14 போட்டிகளில் 41 சிக்சர்கள் விளாசி 3வது இடத்தில் உள்ளார்.

Related Articles

Related image1
Vaibhav Suryavanshi: ஆத்தாடி! 15 வயதில் இத்தனை கோடிகள் சொத்தா? சொத்து மதிப்பிலும் சிக்சர் அடிக்கும் வைபவ் சூர்யவன்ஷி!
Related image2
RR vs GT: பவர்பிளேயில் மட்டும் 500+ ரன்கள்! அன்கேப்டு வீரராக வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை!
34
உர்வில் படேல் அதிவேக அரை சதம்
Image Credit : X@IPL

உர்வில் படேல் அதிவேக அரை சதம்

அதிவேக அரைசதம் அடித்தவர்கள் குறித்து பார்த்தோம் என்றால் சிஎஸ்கே வீரர் உர்வில் படேல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ) வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் வரலாற்றின் அதிவேக சாதனையை சமன் செய்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா சிஎஸ்கேவுக்கு எதிராக ஹைதராபாத் மைதானத்தில் 15 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த பட்டியலிலும் உள்ள வைபவ் சூர்யவன்ஷி ஆர்சிபிக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்து 3வது இடத்தில் உள்ளார்.

44
அதிவேக சதம் வைபவ் சூர்யவன்ஷி டாப்
Image Credit : ANI

அதிவேக சதம் வைபவ் சூர்யவன்ஷி டாப்

அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் அனைவரும் எதிர்பார்த்தபடி 15 வயதான இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி தான் முதலிடத்தில் வீற்றிருக்கிறார். வைபவ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஜெய்ப்பூர் மைதானத்தில் வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி இந்த சீசனின் அதிவேக சத சாதனையை படைத்தார். மும்பை இந்தியன்ஸ் வீரர் ரியான் ரிக்கல்டன் ஹைதராபாத் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் 44 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் 45 பந்துகளில் சதம் அடித்தார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026 Final: கில் vs பாட்டீதார்... கோப்பையை தீர்மானிக்கும் 6 ஸ்டார் பிளேயர்ஸ்!
Recommended image2
IPL 2026 Prize Money: ஐபிஎல்லில் பரிசு மழை! சாம்பியன் அணிக்கு இத்தனை கோடிகளா? அடேங்கப்பா!
Recommended image3
Kohli vs Gill: ஐபிஎல் ஃபைனல்.. விராட் கோலி, ஷுப்மன் கில் அடித்த ரன்கள் எவ்வளவு? இதோ முழு விவரம்!
Related Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: ஆத்தாடி! 15 வயதில் இத்தனை கோடிகள் சொத்தா? சொத்து மதிப்பிலும் சிக்சர் அடிக்கும் வைபவ் சூர்யவன்ஷி!
Recommended image2
RR vs GT: பவர்பிளேயில் மட்டும் 500+ ரன்கள்! அன்கேப்டு வீரராக வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved