- Home
- Sports
- Sports Cricket
- Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Vaibhav Suryavanshi: நியூசிலாந்து டி20 தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி இளம் வீரர் 15 வயதான பாலகன் வைபவ் சூர்யவன்ஷிக்கு தாய் போன்று ஒரு ரசிகை செய்த அட்வைஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்
வெலிங்டனில் நடந்த இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டிக்கு பிறகு, இந்திய அணியின் இளம் வீரர் 15 வயதான பாலகன் வைபவ் சூர்யவன்ஷிக்கு தாய் போன்ற ஒரு ரசிகை ஸ்பெஷல் அட்வைஸ் கொடுத்துள்ளார். இந்த மேட்சில் ஓப்பனிங் இறங்கிய வைபவ், வெறும் 19 பந்துகளில் 45 ரன்களை விளாசினார்.
இந்திய அணி போட்டியையும் தொடரையும் வென்ற பிறகு, ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தார் வைபவ். அப்போது அங்கு வந்த ஒரு பெண், "ஹலோ வைபவ்! நாங்களும் பாலியா (Ballia) ஊர்க்காரங்க தான். இங்க ரொம்ப குளிரா இருக்கு. அதனால பச்சை தண்ணி குடிக்காத, சுடு தண்ணி மட்டும் குடிப்பா" என்று அன்பாக கூறினார். தனது சொந்த ஊரான பாலியாவின் பெயரைக் கேட்டதும் வைபவ் முகத்தில் பெரிய சிரிப்பு வந்தது. உடனே அவர், "சரிங்க, ஓகே" என்று கியூட்டாக பதில் அளித்தார்.
Girl to Vaibhav Suryavanshi :- “Don't drink cold water. Try to avoid it, otherwise, it might affect your health. 🥹
Then, at the 19-second mark, she gently places her hand on Vaibhav's head, blessing him like a big sister.
That's the kind of love and respect Vaibhav has earned at such a young age. 🥹🧡
— Cricketplusmeme 🧡 (@cricketplusmeme) October 27, 2026
அட்வைஸ் செய்த பெண்ணுக்கு குவியும் பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணி உலகத்தில் எந்த மூலைக்கு விளையாடப் போனாலும், அங்க நம்ம ரசிகர்களோட கூட்டம் கண்டிப்பாக இருக்கும். நியூசிலாந்து சுற்றுப்பயணமும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த டி20 தொடரில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த நிறைய ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். மேட்ச் முடிஞ்சதும் வீரர்களிடம் அவர்கள் பேசும் சின்ன சின்ன விஷயங்கள் கூட சில நேரங்களில் வைரலாகிவிடும்.
அப்படித் தான் வைபவ் சூர்யவன்ஷிக்கு அந்த பெண் ரசிகை கொடுத்த அட்வைஸ் இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. வெளிநாட்டில் விளையாடும் ஒரு இளம் வீரரை, தன் சொந்த ஊர் பையனாக நினைத்து அந்தப் பெண் கொடுத்த அட்வைஸ் நெட்டிசன்களின் மனதை வென்றுள்ளது. சோஷியல் மீடியாவில் இந்த வீடியோ பரவியதும், அந்தப் பெண்ணின் அன்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
வைபவின் அதிரடி பேட்டிங்
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மாவுடன் ஓப்பனிங் இறங்கிய வைபவ், 7.1 ஓவர்களில் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இவர் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்த ஓப்பனிங் ஜோடி வெறும் 5 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்து மிரட்டியது.
பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 118 ரன்களை இந்திய அணி குவித்தது. ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர் நாடுகளில், ஒரு டி20 போட்டியின் பவர்பிளேயில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். 199 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, வெறும் 13.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழந்து இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.





