- Home
- Sports
- Sports Cricket
- GT Bus Fire: குஜராத் டைட்டன்ஸ் அணி பேருந்தில் தீ விபத்து! பதறியடித்து இறங்கிய வீரர்கள்! என்ன நடந்தது?
GT Bus Fire: குஜராத் டைட்டன்ஸ் அணி பேருந்தில் தீ விபத்து! பதறியடித்து இறங்கிய வீரர்கள்! என்ன நடந்தது?
GT Bus Fire: குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் சென்ற பேருந்தில் திடீரென தீப்பிடித்தது. வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2026 கோப்பையை வென்ற ஆர்சிபி
ஐபிஎல் 2026 தொடரில் கோப்பை வென்று ஆர்சிபி அணி சாதனை படைத்தது. குஜராத் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை தட்டித்தூக்கி சாதனை படைத்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆர்சிபி பாஸ்ட் பவுலர்களின் அபார பந்துவீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. பின்பு ஆடிய ஆர்சிபி 18 ஓவரில் 5 விக்கெட் இழந்து வெற்றி இழக்கை எட்டியது. சேஸ் மாஸ்டர் விராட் கோலி 42 ப்ந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் விளாசி ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
குஜராத் டைட்டன்ஸ் பேருந்தில் தீ
இந்த நிலையில் ஐபிஎல் ஃபைனலில் தோல்வியடைந்த சோகத்தில் இருந்த சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. நேற்று இரவு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டி முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பும்போது, வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் பயணித்த பேருந்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
பெரிய அசம்பாதவிதம் தவிர்ப்பு
பேருந்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக வாகனம் நடுவழியிலேயே நின்றுள்ளது. இதைத் தொடர்ந்து பேருந்துக்குள் புகை சூழ்ந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புகையைக் கண்டதும் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பீதியடைந்தனர். உடனடியாக அனைவரும் பேருந்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் நல்ல வேளையாக வீரர்கள் அல்லது ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
குஜராத் அணி நிர்வாகம் அப்டேட்
பேருந்திலிருந்து இறங்கிய வீரர்கள் சிறிது நேரம் சாலையோரத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது. பின்னர், அதிகாரிகள் மாற்றுப் பேருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அந்தப் பேருந்தில் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் ஹோட்டலுக்குப் பயணத்தைத் தொடர்ந்தனர். பேருந்தில் புகை ஏற்பட்டதும் சரியான நேரத்தில் அனைவரும் கீழே இறக்கப்பட்டதால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது அணியில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

