MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • தோனியின் ஒரே ஒரு வார்த்தை.. சிஎஸ்கேவில் ஜாஹீருக்கு கிடைத்த ‘தல’ பதவி! நட்புக்கு ரிட்டர்ன் கிஃப்ட்?

தோனியின் ஒரே ஒரு வார்த்தை.. சிஎஸ்கேவில் ஜாஹீருக்கு கிடைத்த ‘தல’ பதவி! நட்புக்கு ரிட்டர்ன் கிஃப்ட்?

சிஎஸ்கே அணியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தோனியுடன் புதிய கூட்டணியாக ஜாகீர் கான் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

3 Min read
Author : Velmurugan s
Published : Sep 21 2026, 09:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
CSKவின் பயிற்சியாளரான ஜாகீர் கான்
Image Credit : Asianet News

CSKவின் பயிற்சியாளரான ஜாகீர் கான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 18 ஆண்டுகால சாகசத்துக்குப் பிறகு புதிய மாற்றம் அரங்கேறியுள்ளது. ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் இடத்தை இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜஹீர் கான் பிடித்துள்ளார். இந்த புதிய நியமனத்தின் பின்னணியில் எம்.எஸ். தோனியின் பங்கு முக்கியமானதாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிஎஸ்கேவில் தொடங்கியது ‘ஜாகீர்’ சகாப்தம்!

ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ளது. நீண்ட காலமாக அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜஹீர் கான் புதிய ஹெட் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2009-ம் ஆண்டு முதல் சிஎஸ்கேவுடன் இணைந்திருந்த ஃப்ளெமிங்கின் நீண்ட பயணத்துக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவரது இடத்தை ஜஹீர் பிடித்திருப்பது, அணியின் அடுத்த கட்ட மாற்றத்திற்கான முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜாகீரை தேர்வு செய்ய தோனியின் பங்கு?
Image Credit : Asianet News

ஜாகீரை தேர்வு செய்ய தோனியின் பங்கு?

புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் எம்.எஸ். தோனிக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. குறிப்பாக, சிஎஸ்கேவுக்கு இந்திய பயிற்சியாளர் ஒருவர் தேவை என்ற அணுகுமுறைக்கு தோனி ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் கூறின. இறுதியில் அந்த தேடல் ஜஹீர் கானிடம் வந்து நின்றது.

ஜஹீரின் அமைதியான அணுகுமுறை, கிரிக்கெட் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் இளம் வீரர்களுடன் பணியாற்றிய அனுபவம் ஆகியவை அவரை சிஎஸ்கே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த காரணிகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

2011 உலகக் கோப்பையில் உருவான புரிதல்!

தோனி – ஜஹீர் கூட்டணி என்பது இன்று உருவானது அல்ல. இந்திய அணிக்காக இருவரும் இணைந்து செயல்பட்ட காலத்திலேயே இவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.

குறிப்பாக, 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஜஹீர் கான் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கினார். அந்தத் தொடரில் இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக ஜஹீர் 21 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராகவும் அவர் முக்கியமான பந்துவீச்சை வழங்கினார்.

அந்த உலகக் கோப்பை அணிக்கு தோனிதான் கேப்டனாக இருந்தார். ஒருபுறம் கேப்டனாக தோனி அணியை வழிநடத்த, மறுபுறம் பந்துவீச்சுத் தாக்குதலில் ஜஹீர் முக்கிய ஆயுதமாக இருந்தார்.

34
‘ஜாக்’ முதல் சிஎஸ்கே ஹெட் கோச் வரை!
Image Credit : Asianet News

‘ஜாக்’ முதல் சிஎஸ்கே ஹெட் கோச் வரை!

ஜஹீர் கானை இந்திய கிரிக்கெட்டில் தோனி மிகுந்த நம்பிக்கையுடன் பயன்படுத்திய காலம் ரசிகர்களின் நினைவில் இன்னும் உள்ளது.

களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப பந்துவீச்சை மாற்றும் திறன், பேட்ஸ்மேனின் பலவீனத்தை உடனடியாக கண்டறியும் திறன், அழுத்தமான நேரங்களில் முடிவெடுக்கும் திறன் ஆகியவை ஜஹீரின் முக்கிய பலங்களாக இருந்தன.

இதே கிரிக்கெட் அறிவுதான் தற்போது சிஎஸ்கேவின் பயிற்சியாளர் பொறுப்பிலும் அவருக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
சிஎஸ்கேவுக்கு ஏன் ஜஹீர் முக்கியம்?
Image Credit : Asianet News

சிஎஸ்கேவுக்கு ஏன் ஜஹீர் முக்கியம்?

சிஎஸ்கே தற்போது மாற்றத்தின் கட்டத்தில் உள்ளது. இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து அடுத்த தலைமுறை அணியை உருவாக்க வேண்டிய சூழல் உள்ளது.

அந்த நிலையில், வீரர்களின் திறனை அடையாளம் காண்பது, பந்துவீச்சாளர்களை மேம்படுத்துவது, போட்டி சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை உருவாக்குவது போன்ற பணிகளில் ஜஹீரின் அனுபவம் சிஎஸ்கேவுக்கு உதவக்கூடும்.

ஜஹீர் ஏற்கனவே ஐபிஎல் அணிகளுடன் நிர்வாக மற்றும் ஆலோசனைப் பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுடனான அவரது அனுபவமும் புதிய பொறுப்பில் முக்கியமானதாக இருக்கும்.

மீண்டும் இணையும் பழைய கூட்டணி!

ஒரு காலத்தில் இந்திய அணிக்காக ஒரே டிரெஸ்ஸிங் ரூமில் இணைந்து செயல்பட்ட தோனி – ஜஹீர் கூட்டணி, இப்போது சிஎஸ்கேவின் டிரெஸ்ஸிங் ரூமில் புதிய வடிவில் களமிறங்குகிறது.

இதில் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தோனி அடுத்த சீசனில் வீரராக தொடர்வாரா என்பது தனியாக கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. 2026 சீசனில் அவர் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை என்றாலும், சிஎஸ்கே நிர்வாகம் அணியுடனான அவரது தொடர்பை தொடர்ந்து முக்கியமானதாகக் கருதியது.

இந்நிலையில், ஜஹீர் தலைமைப் பயிற்சியாளராகவும், தோனி அணியின் முக்கியமான அனுபவமிக்க முகமாகவும் இருக்கும் சூழல் உருவானால், சிஎஸ்கேவின் அடுத்த தலைமுறை கட்டமைப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

18 ஆண்டுகால ஃப்ளெமிங் அத்தியாயம் முடிந்து, தற்போது சிஎஸ்கேவில் ஜஹீர் கான் அத்தியாயம் தொடங்கியுள்ளது. தோனியின் அனுபவமும், ஜஹீரின் கிரிக்கெட் அறிவும் ஒரே அணியில் மீண்டும் இணைவது அடுத்த ஐபிஎல் சீசனின் கவனம் ஈர்க்கும் அம்சங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Recommended image2
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!
Recommended image3
IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா.. சுந்தருக்கு ரூ.75 லட்சம் பரிசு..
Related Stories
Recommended image1
CSK downfall: தோனிக்குப் பிறகு சிதறும் CSK.. இன்னும் 5 வருசத்துக்கு கப் மேல கையே வைக்க முடியாது..?
Recommended image2
Most Educated Cricketer: தோனி, கோலி, ரோகித் இல்ல.. அதிகம் ப‌டித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved