MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சஞ்சு சாம்சனை மறைத்தாரா சுப்மன் கில்? டி20 உலகக்கோப்பை படத்தால் சர்ச்சை.. சிஎஸ்கே ரசிகர்கள் ஆவேசம்!

சஞ்சு சாம்சனை மறைத்தாரா சுப்மன் கில்? டி20 உலகக்கோப்பை படத்தால் சர்ச்சை.. சிஎஸ்கே ரசிகர்கள் ஆவேசம்!

டி20 உலகக்கோப்பையின் குரூப் போட்டிகளில் சஞ்சு சாம்சன் சரியாக விளையாடவில்லை என்றாலும், சூப்பர் 8 சுற்றிலிருந்து கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்து, இந்தியா கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

1 Min read
Author : Rayar r
Published : Mar 12 2026, 10:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 சுப்மன் கில் பகிர்ந்த போட்டோ
Image Credit : Instagram

சுப்மன் கில் பகிர்ந்த போட்டோ

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் போட்டோ ஒன்றை, இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார். அது இப்போது பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது கேப்டன் சூர்யகுமார் யாதவ், சக வீரர்களுடன் கோப்பையை உயர்த்திப் பிடிக்கும் அந்த போட்டோவைதான் கில் பகிர்ந்திருந்தார்.

24
கில் இந்த போட்டோவை தேர்வு செய்தது ஏன்?
Image Credit : Getty

கில் இந்த போட்டோவை தேர்வு செய்தது ஏன்?

ஆனால், அந்த போட்டோவில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிங்கு சிங்கின் முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் பின்னால் மறைந்துவிட்டனர். எல்லா வீரர்களின் முகமும் தெளிவாகத் தெரியும் எத்தனையோ போட்டோக்கள் இருக்கும்போது, கில் ஏன் இந்த போட்டோவை தேர்ந்தெடுத்துப் போட்டார்? என்று ரசிகர்கள் கமென்ட் பாக்ஸில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Articles

Related image1
சச்சின் சொன்ன 'அந்த' அட்வைஸ்.. சஞ்சு சாம்சன் பார்முக்கு திரும்ப கைகொடுத்த கிரிக்கெட்டின் கடவுள்!
Related image2
ஆத்தாடி! என்னா அடி! மோடி மைதானத்தில் சேட்டனின் சம்பவம்.. கோலி சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
34
கில் நீக்கத்தால் இடம்பிடித்த சஞ்சு சாம்சன்
Image Credit : ChatGpt

கில் நீக்கத்தால் இடம்பிடித்த சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பைக்கு முன்பு வரை, இந்திய டி20 அணியின் ஓப்பனராகவும், துணை கேப்டனாகவும் இருந்தவர் கில். அவருக்காக சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டார். ஆசிய கோப்பையிலும் இது தொடர்ந்தது. பின்னர், சஞ்சுவுக்கு ப்ளேயிங் லெவனில் இடமே கிடைக்கவில்லை. ஆனால், கில் சரியாக விளையாடாததால், உலகக்கோப்பைக்கு சற்று முன்பு அவர் துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பையில் சஞ்சு மீண்டும் ஓப்பனராக களமிறக்கப்பட்டார்.

44
சுப்மன் கில்லின் தவறில்லை
Image Credit : Getty

சுப்மன் கில்லின் தவறில்லை

உலகக்கோப்பையின் குரூப் போட்டிகளில் சஞ்சு சரியாக விளையாடவில்லை என்றாலும், சூப்பர் 8 சுற்றிலிருந்து கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்து, இந்தியா கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். தொடர் நாயகன் விருதையும் வென்றார். சுப்மன் கில் இதை வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார் என்றாலும், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சன் தெளிவாகத் தெரியும் பல போட்டோக்கள் இருந்தும், இந்த குறிப்பிட்ட போட்டோவை கில் பகிர்ந்ததுதான் ரசிகர்களின் கோபத்திற்குக் காரணம். ஆனால் சிலர் 'கில் இதையெல்லாம் கவனித்திருக்க மாட்டார். சஞ்சு அந்த போட்டோவில் பின்னால் இருக்கிறார் அல்லவா?' என்று கில்லுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
சஞ்சு சாம்சன்
ஷுப்மன் கில்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தேசியக் கொடியை அவமதித்தாரா ஹர்திக் பாண்ட்யா?.. போலீசில் புகார்.. சட்டம் சொல்வது என்ன?
Recommended image2
வெறும் கால்களில் 14 கிமீ..! அண்ணாமலையாருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய இந்திய அணி வீரர்கள்..
Recommended image3
டி20 ரேங்கில் அபிஷேக் சர்மா ராஜ்ஜியம்.. முதலிடத்தை இழந்த 'மிஸ்டரி' ஸ்பின்னர்.. பும்ரா ரேங்க் என்ன?
Related Stories
Recommended image1
சச்சின் சொன்ன 'அந்த' அட்வைஸ்.. சஞ்சு சாம்சன் பார்முக்கு திரும்ப கைகொடுத்த கிரிக்கெட்டின் கடவுள்!
Recommended image2
ஆத்தாடி! என்னா அடி! மோடி மைதானத்தில் சேட்டனின் சம்பவம்.. கோலி சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved