MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சச்சின் சொன்ன 'அந்த' அட்வைஸ்.. சஞ்சு சாம்சன் பார்முக்கு திரும்ப கைகொடுத்த கிரிக்கெட்டின் கடவுள்!

சச்சின் சொன்ன 'அந்த' அட்வைஸ்.. சஞ்சு சாம்சன் பார்முக்கு திரும்ப கைகொடுத்த கிரிக்கெட்டின் கடவுள்!

நியூசிலாந்து தொடருக்குப் பிறகு நான் மனதளவில் உடைந்து போயிருந்தேன். என் கனவுகள் சிதறிப்போனதாக உணர்ந்தேன். அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன் என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Mar 09 2026, 12:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சஞ்சு சாம்சன் தொடர் நாயகன்
Image Credit : Asianet News

சஞ்சு சாம்சன் தொடர் நாயகன்

டி20 உலகக்கோப்பை 2026 பைனலில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சஞ்சு சாம்சன் வெறும் 46 பந்துகளில் 8 சிக்சர்கள், 5 பவுண்டரியுடன் 89 ரன்கள் என அதிரடி அரைசதம் அடித்து அசத்தினார். 

சூப்பர் 8 சூற்றில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முக்கியமான 97 ரன்கள் விளாசிய அவர், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் அரை சதம் விளாசி இருந்தார். இப்போது இறுதிப்போட்டியிலும் அரை சதம் விளாசி மொத்தமாக 321 ரன்கள் அடித்து தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கடினமாக உழைத்தேன்
Image Credit : Getty

கடினமாக உழைத்தேன்

தொடக்கத்தில் பார்ம் இன்றி தவித்த சஞ்சு சாம்சன் மீண்டும் பார்முக்கு திரும்பி மாஸ் காட்டியுள்ளார். இந்த நிலையில், தான் பார்முக்கு திரும்ப சச்சின் டெண்டுல்கர் உதவினார் என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''உண்மையைச் சொல்லப்போனால், இது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. 

2024 உலகக் கோப்பை அணியில் நான் இருந்தபோது, எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், நான் தொடர்ந்து கற்பனை செய்து பார்த்தேன், கடினமாக உழைத்தேன்; நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

34
சச்சின் எனக்கு உதவினார்
Image Credit : Getty

சச்சின் எனக்கு உதவினார்

நியூசிலாந்து தொடருக்குப் பிறகு நான் மனதளவில் உடைந்து போயிருந்தேன், என் கனவுகள் சிதறிப்போனதாக உணர்ந்தேன். அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் கடவுளுக்கு வேறு திட்டங்கள் இருந்தன. கனவு காண்பதற்கான துணிச்சல் என்னிடம் இருந்ததால் எனக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது. பல முன்னாள் வீரர்கள் என்னைத் தொடர்பு கொண்டு உதவினார்கள்.

கடந்த சில மாதங்களாக நான் சச்சின் சாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். நான் அவரிடம் பேசி நீண்ட உரையாடல்களை நடத்தினேன். அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவதை விட வேறு என்ன பெரிய விஷயம் இருக்க முடியும்? எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

44
பல சாதனைகளை படைத்த சஞ்சு சாம்சன்
Image Credit : ANI

பல சாதனைகளை படைத்த சஞ்சு சாம்சன்

டி20 உலகக் கோப்பையின் ஒரே தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் வெறும் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடிய சஞ்சு சாம்சன் மொத்தம் 24 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஒரே உலகக் கோப்பை தொடரில் வேறு எந்த வீரரும் இத்தனை சிக்ஸர்களை அடித்ததில்லை.

இதுமட்டுமின்றி, டி20 உலகக் கோப்பையின் ஒரே தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் சஞ்சு தன்வசப்படுத்தியுள்ளார். இதன் மூலம், விராட் கோலியின் 12 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்துள்ளார். சஞ்சு வெறும் ஐந்து போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சஞ்சு சாம்சன்
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Recommended image2
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
Recommended image3
IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
Related Stories
Recommended image1
வரலாறு படைத்தது இந்தியா.. 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை தட்டித் தூக்கி சாதனை!
Recommended image2
பார்ம் இல்லாமல் கதறி அழுதேன்.. உருக்கமாக பேசிய அபிஷேக் சர்மா.. வெற்றிக்கு பிறகு நெகிழ்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved