MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • பார்ம் இல்லாமல் கதறி அழுதேன்.. உருக்கமாக பேசிய அபிஷேக் சர்மா.. வெற்றிக்கு பிறகு நெகிழ்ச்சி!

பார்ம் இல்லாமல் கதறி அழுதேன்.. உருக்கமாக பேசிய அபிஷேக் சர்மா.. வெற்றிக்கு பிறகு நெகிழ்ச்சி!

கேப்டனும், பயிற்சியாளரும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். நானே கூட என்னைச் சந்தேகப்பட்டேன். இதற்கு முன்பு நான் இப்படி ஒரு சூழலை எதிர்கொண்டதில்லை என்று அபிஷேக் சர்மா தெரிவித்தார்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 08 2026, 11:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்திய அணி சாம்பியன்
Image Credit : AFP

இந்திய அணி சாம்பியன்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. . இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 255 ரன்கள் குவித்தது. 

பின்பு இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி ரன்களுக்கு 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 96 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றார்.

24
அபிஷேக் சர்மா முக்கியமான அதிரடி ஆட்டம்
Image Credit : Getty

அபிஷேக் சர்மா முக்கியமான அதிரடி ஆட்டம்

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் வெறும் 46 பந்துகளில் 8 சிக்சர்கள், 5 பவுண்டரியுடன் 89 ரன்கள் விளாசி அசத்தினாலும் அபிஷேக் சர்மா 21 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 52 ரன்கள் அடித்து வெற்றிக்கு ஒரு காரணமாக விளங்கினார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் 3 டக் அவுட்கள் என மிக மோசமான பேட்டிங்கை அபிஷேக் சர்மா வெளிப்படுத்தினார். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

Related Articles

Related image1
வரலாறு படைத்தது இந்தியா.. 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை தட்டித் தூக்கி சாதனை!
Related image2
IND vs NZ: இது அடியா இல்ல இடியா.. கிவிஸ் பவுலர்களை கதற விட்ட அபிஷேக் சர்மா.. அரை சதத்தில் சாதனை!
34
உருக்கமாக பேசிய அபிஷேக் சர்மா
Image Credit : X@bcci

உருக்கமாக பேசிய அபிஷேக் சர்மா

இந்த நிலையில், இன்று இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய அபிஷேக் சர்மா பார்ம் இல்லாமல் தறி அழுததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''கேப்டனும் பயிற்சியாளரும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். நானே கூட என்னைச் சந்தேகப்பட்டேன். 

இதற்கு முன்பு நான் இப்படி ஒரு சூழலை எதிர்கொண்டதில்லை, இது ஒரு கடினமான தொடராக இருந்தது. நான் எனது பயிற்சியைத் தொடர்ந்து செய்துகொண்டே, ஒவ்வொரு போட்டியாகக் கவனம் செலுத்தி வந்தேன், ஆனால் அது எளிதாக இருக்கவில்லை.

44
கேப்டன், பயிற்சியாளர் நம்பிக்கை
Image Credit : Getty

கேப்டன், பயிற்சியாளர் நம்பிக்கை

ஆனால் அணியும் நிர்வாகமும் என் மீது காட்டிய நம்பிக்கை அளப்பரியது. தொடரின் இடையில் நான் உணர்ச்சிவசப்பட்டேன். பார்ம் இல்லாமல் இரவுகளில் தூங்காமல் அழுதேன். கேப்டனிடமும் பயிற்சியாளரிடமும் பேச விரும்பினேன். அப்போது அவர்கள் முக்கியமான போட்டிகளில் நீயே எங்களை வெற்றி பெற செய்வாய் என்று கூறினார்கள். அது எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்தது'' என்று தெரிவித்தார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
வரலாறு படைத்தது இந்தியா.. 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை தட்டித் தூக்கி சாதனை!
Recommended image2
எங்களுக்கு பயம் இல்ல.. ரன் மெஷின் இந்தியா.. டி20 உலககோப்பையில் பிரம்மாண்டமான சாதனை!
Recommended image3
ஆத்தாடி! என்னா அடி! மோடி மைதானத்தில் சேட்டனின் சம்பவம்.. கோலி சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
Related Stories
Recommended image1
வரலாறு படைத்தது இந்தியா.. 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை தட்டித் தூக்கி சாதனை!
Recommended image2
IND vs NZ: இது அடியா இல்ல இடியா.. கிவிஸ் பவுலர்களை கதற விட்ட அபிஷேக் சர்மா.. அரை சதத்தில் சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved