MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs NZ: இது அடியா இல்ல இடியா.. கிவிஸ் பவுலர்களை கதற விட்ட அபிஷேக் சர்மா.. அரை சதத்தில் சாதனை!

IND vs NZ: இது அடியா இல்ல இடியா.. கிவிஸ் பவுலர்களை கதற விட்ட அபிஷேக் சர்மா.. அரை சதத்தில் சாதனை!

நியூசிலாந்து பாஸ்ட் பவுலர்களை ஓட விட்ட அபிஷேக் சர்மா வெறும் 18 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் அரை சதம் விளாசினார்.

1 Min read
Author : Rayar A
Published : Mar 08 2026, 07:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்தியா, நியூசிலாந்து பைனல்
Image Credit : Getty

இந்தியா, நியூசிலாந்து பைனல்

டி20 உலகக்கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
அபிஷேக் சர்மா சிக்சர் மழை
Image Credit : ANI

அபிஷேக் சர்மா சிக்சர் மழை

தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் அதிரடியில் வெளுத்துக் கட்டினார்கள். சஞ்சு சாம்சன் வழக்கம்போல் கிளாசிக் ஷாட்களை ஆட, மறுமுனையில் மோசமான பார்மில் இருந்த அபிஷேக் சர்மாவும் பார்முக்கு திரும்பி சிக்சர் மழை பொழிந்தார். இந்திய அணி 5 ஓவரில் 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து நியூசிலாந்து பாஸ்ட் பவுலர்களை ஓட விட்ட அபிஷேக் சர்மா வெறும் 18 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் அரை சதம் விளாசினார்.

33
அதிவேக அரை சதம்
Image Credit : ANI

அதிவேக அரை சதம்

21 பந்தில் 52 ரன்கள் எடுத்து ரச்சின் ரவீந்திரா பந்தில் கேட்ச் ஆனார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஒரு வீரரின் அதிவேக அரை சதம் இதுதான். அத்துடன் டி20 உலகக்கோப்பையில் இந்திய வீரர் ஒருவரின் அதிவேக அரை சதமும் இதுதான். நடப்பு உலகக்கோப்பை தொடரில் பார்ம் இன்றி தவித்த அபிஷேக் சர்மா 3 போட்டிகளில் டக் அவுட் ஆனார். ஆனாலும் அவர் திறமை மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்திருந்தது. அந்த நம்பிக்கையை காப்பாற்றி இன்று முக்கியமான போட்டியில் இந்திய அணிக்கு கைகொடுத்து உதவி இருக்கிறார் அபிஷேக் சர்மா.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Recommended image2
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
Recommended image3
IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
Related Stories
Recommended image1
டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அடேங்கப்பா! சாம்பியன் அணிக்கு இத்தனை கோடிகளா? முழு விவரம்!
Recommended image2
ஏற்கனவே 3 டக் அவுட் – அபிஷேக் சர்மாவிற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved