இலவசமாக துபாயை சுற்றிப் பார்க்கலாம்! மார்ச் மாத ஸ்பெஷல் ஆஃபர்களை வாரி வழங்கும் அமீரகம்
போர் பதற்றத்தால் துபாய் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டுள்ளதா? இதன் காரணமாக, துபாயின் வாட்டர்பார்க் மிராக்கிள் கார்டன் போன்ற இடங்களில் இலவச நுழைவு மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பா? முழு விவரம் இங்கே.
111

Image Credit : X
வெளிநாட்ட சுற்றி பார்க்க போவோம்
ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம் துபாய் சுற்றுலாவை பாதித்துள்ளது. இதனால், அங்குள்ள ஹோட்டல்கள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் இலவச நுழைவு மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. பிராந்திய பதற்றம் மற்றும் விமானப் பயணத் தடைகளால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளதே இதற்குக் காரணம்.
211
Image Credit : X
ஆஃபரோ ஆஃபர்
மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் பல விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வான்வெளி மூடப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது. இதை ஈடுகட்ட, துபாய் ஹோட்டல்கள் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவர இந்த ஆஃபர்களை வழங்குகின்றன.
311
Image Credit : X
உங்களுக்கு சிறப்பு சலுகைகளை்
துபாயின் முக்கிய சுற்றுலாத் தலங்களான அக்வாவென்ச்சர் வாட்டர்பார்க் (Aquaventure Waterpark), தி லாஸ்ட் சேம்பர்ஸ் அக்வாரியம் (The Lost Chambers Aquarium), ஹவுஸ் ஆஃப் ஹைப் (House of Hype), துபாய் மிராக்கிள் கார்டன் (Dubai Miracle Garden) ஆகியவை சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.
411
Image Credit : X
நான்கு இலவச டிக்கெட்டுகள் கிடைக்கும்
மார்ச் 22 வரை, அட்லாண்டிஸ், தி பாம் (Atlantis, The Palm) ஹோட்டலில் உள்ள அக்வாவென்ச்சர் வேர்ல்ட் மற்றும் லாஸ்ட் சேம்பர்ஸ் அக்வாரியம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் ஒரு புக்கிங்கிற்கு நான்கு இலவச டிக்கெட்டுகள் கிடைக்கும்.
511
Image Credit : X
4 ஆயிரம் ரூபாய்தான்
பொதுவாக, இந்த இடங்களுக்கான ஒரு நாள் டிக்கெட் விலை சுமார் AED 175 (இந்திய மதிப்பில் ₹4,393). இந்த இலவச நுழைவுச் சலுகை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பெரிய சேமிப்பாக இருக்கும்.
611
Image Credit : X
இலவச நுழைவு உண்டு
மார்ச் 15 முதல் மார்ச் 31 வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு துபாய் மிராக்கிள் கார்டனில் இலவச நுழைவு உண்டு. இதற்கு, முறையான எமிரேட்ஸ் ஐடியை (Emirates ID) காட்ட வேண்டும். இதன் சாதாரண டிக்கெட் விலை AED 100 (₹2,500).
711
Image Credit : X
சுற்றுலாவை பாதிக்கும் போர்
மத்திய கிழக்கில் நடக்கும் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா மோதல் காரணமாக, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளன. இது துபாய்க்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை நேரடியாகப் பாதிக்கிறது.
811
Image Credit : X
மாஸ் காட்டும் துபாயின் சுற்றுலாத்துறை
பொதுவாக ரம்ஜான் மாதத்தில் துபாயின் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறை மிகவும் பிஸியாக இருக்கும். தற்போதைய சூழலில், இந்த இலவச நுழைவு மற்றும் தள்ளுபடிகள் மூலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முயற்சி செய்கிறார்கள்.
911
Image Credit : X
உள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட்
துபாய் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் குறுகிய காலத்திற்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. இதன் மூலம் உள்ளூர் மக்கள் நகரத்தின் பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க முடியும்.
1011
Image Credit : X
தள்ளுபடி டிக்கெட்டுகள்
இந்த இலவச நுழைவு, தள்ளுபடி டிக்கெட்டுகள் மற்றும் சலுகைகள் மூலம், குடும்பங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குறைந்த செலவில் துபாயின் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியும்.
1111
Image Credit : X
இதெல்லாம் கட்டாயம்
போர் பதற்றம் மற்றும் விமானப் பயணங்களில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, துபாய்க்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிலையற்றதாக உள்ளது. இந்த ஆஃபர்கள் உள்ளூர் சுற்றுலாவை ஆதரிக்கின்றன. பெரும்பாலான சலுகைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கானது. இதற்கு முறையான அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

