- Home
- Business
- Tour: கடன் வாங்காமல் சுற்றுலா போகலாம்... இதோ சிம்பிள் சீக்ரெட்ஸ்! சம்மர் டூருக்கு இப்போதே 'ரூட்' போடுங்க!
Tour: கடன் வாங்காமல் சுற்றுலா போகலாம்... இதோ சிம்பிள் சீக்ரெட்ஸ்! சம்மர் டூருக்கு இப்போதே 'ரூட்' போடுங்க!
கோடை விடுமுறைக்கு கடன் வாங்கி அவதிப்படுவதைத் தவிர்க்க, முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். பயணம் மற்றும் தங்குமிடத்தை 60-90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்வதன் மூலமும், பட்ஜெட் போட்டு செலவுகளை நிர்வகிப்பதன் மூலம் சுற்றுலா சென்று வரலாம் ஜாலியா.

பக்கா பிளான் உங்களுக்கு கைகொடுக்கும்
கோடை விடுமுறை என்றாலே குதூகலம் தான். ஆனால், பல நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு அந்த குதூகலத்தைத் தாண்டி "செலவு அதிகமாகிவிடுமோ?" என்கிற கவலைதான் முந்திக்கொண்டு வரும். இந்தக் கவலையினால் பலரும் கடைசி நேரத்தில் அவசர அவசரமாகத் திட்டமிட்டு, அதிக வட்டிக்குக் கடன் வாங்கியோ அல்லது கிரெடிட் கார்டு மூலமோ செலவு செய்துவிட்டு, சுற்றுலா முடிந்து வந்தபின் மாதக்கணக்கில் இஎம்ஐ (EMI) கட்டிக் அவதிப்படுகிறார்கள். உண்மையில், ஒரு பக்கா பிளானிங் இருந்தால் உங்கள் சேமிப்பைச் சிதைக்காமல், கடன் வாங்காமல் மகிழ்ச்சியாகச் சுற்றுலா சென்று வர முடியும்.
முன்கூட்டிய திட்டமிடலே முதற்படி
சுற்றுலா செலவுகளில் சிங்கம் போன்றது பயணச் செலவுதான். கோடை சீஸனில் கடைசி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால் 30% முதல் 50% வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க, 60 முதல் 90 நாட்களுக்கு முன்பே ரயில் அல்லது பேருந்து டிக்கெட்டுகளை உறுதி செய்வது அவசியம். அதேபோல், நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர்த்துவிட்டு, நம்பகமான ஹோம்-ஸ்டே அல்லது சர்வீஸ் அப்பார்ட்மென்ட்களை ஆன்லைன் மூலம் முன்கூட்டியே புக் செய்வது உங்கள் தங்குமிடச் செலவை 40% வரை குறைக்கும்.
ஸ்மார்ட் சேமிப்பு மற்றும் செலவு
சுற்றுலாவுக்கென ஒரு பட்ஜெட்டை இப்போதே நிர்ணயித்து, அதை உணவு, பயணம், ஷாப்பிங் எனப் பிரித்துக்கொள்ளுங்கள். உள்ளூர் சுற்றலாவுக்குத் தனியாக கார் வாடகைக்கு எடுப்பதற்குப் பதிலாக, அந்த ஊரின் பொதுப் போக்குவரத்து அல்லது சுற்றுலாப் பேருந்துகளைப் பயன்படுத்துவது சிக்கனமானது. எல்லாவற்றிற்கும் மேலாக, அடுத்த ஆண்டு சுற்றுலாவுக்காக இப்போதே ஒரு 'சுற்றுலா சேமிப்புத் திட்டத்தை' தொடங்கி, மாதம் ஒரு சிறு தொகையைச் சேமிக்கத் தொடங்குங்கள்.
உங்கள் பட்ஜெட் டூருக்கு 'ரூட்' போடுங்க!
திட்டமிட்டுச் செயல்பட்டால், உங்கள் கோடை விடுமுறை பணக்கஷ்டம் இல்லாத, இனிமையான நினைவுகளின் தொகுப்பாக மாறும். இப்போதே உங்கள் பட்ஜெட் டூருக்கு 'ரூட்' போடுங்க!
ஜாலியா டிரெயினிங் போவலாம்
மத்திய பட்ஜெட்டில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய தலங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு பாலி சிறந்த பட்ஜெட் இடமாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 'TravelSpend' போன்ற செயலிகள் செலவைக் கண்காணிக்க உதவுகின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

