MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கன்னியாகுமாரி
  • கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! நவீன 3 புதிய பயணிகள் படகு.! என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?

கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! நவீன 3 புதிய பயணிகள் படகு.! என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?

கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல மூன்று புதிய படகுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 04 2026, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் கன்னியாகுமரி
Image Credit : Asianet News

புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் கன்னியாகுமரி

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் அற்புதக் காட்சிகள் அமைந்துள்ளது. மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி நடைபாலத்தை சுற்றுலாப் படகில் சென்று நேரில் கண்டு ரசிக்கவும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். வார விடுமுறை தினத்தில் கூட்டம் அலைமோதும். தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் இந்த படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படகு பயணத்திற்கு சாதாரண கட்டணம், சிறப்பு நுழைவு கட்டணம் என இரு வகை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் குமரியில் இருந்து திருவள்ளுவர் சிலையை சென்று காணும் வகையில் மூன்று புதிய பயணிகள் படகுகள் கொண்டு வரப்பட உள்ளது.

24
படகு சவாரி வசதிகள்
Image Credit : Asianet News

படகு சவாரி வசதிகள்

இந்நிலையில் கடந்த டிசம்பர் 30ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் “முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் இருந்து அய்யன் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்குச் சுற்றுலாப் பயணிகள் எளிதாக சென்றடையும் வகையில், படகு சவாரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மூன்று புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும்” என அறிவித்தார். இந்த மூன்று படகுகளுக்கும் பெருந்தலைவர் காமராசர், மார்சல் நேசமணி, ஜி.யு. போப் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படும் என்றும், முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

Related Articles

Related image1
தாட்கோ கடனுதவி திட்டம்! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அட்டகாசமான குட்நியூஸ்.!
Related image2
ஜனவரியில் குஷியில் இருந்த மாணவர்களுக்கு பிப்ரவரியில் அதிர்ச்சி! வெளியான முக்கிய அறிவிப்பு!
34
கோவாவில் கப்பல் கட்டும் தளம்
Image Credit : Asianet News

கோவாவில் கப்பல் கட்டும் தளம்

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் நிதியில் மூன்று புதிய பயணிகள் படகுகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கோவா கப்பல் கட்டும் தளத்திற்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் (Synergy Shipyard, Goa) படகு கட்டுமானப் பணிகளை களஆய்வு செய்தார்கள்.

44
தமிழ்நாடு கடல்சார் வாரியம்
Image Credit : Asianet News

தமிழ்நாடு கடல்சார் வாரியம்

முதலாவதாக, பெருந்தலைவர் காமராசர் பெயரிடப்பட்ட பயணியர் படகு கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இதற்கான வெள்ளோட்டம் மற்றும் சோதனை ஓட்டம் (Sea Trial) நடைபெற இருக்கிறது. 2026 பிப்ரவரி மாத இறுதிக்குள் கன்னியாகுமரி துறைமுகத்தில், தமிழ்நாடு கடல்சார் வாரியத்திடம் பெருந்தலைவர் காமராசர் பெயரிட்ட முதல் பயணியர் படகினை ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

மீதமுள்ள “மார்சல் நேசமணி, ஜி.யு.போப்“ ஆகிய இரண்டு படகு கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்துதருமாறு கட்டுமான நிறுவன அலுவலர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
சுற்றுலாக்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்.. கிறிஸ்மஸ்க்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிப்பு
Recommended image2
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்: 50+ பாடங்கள், தேர்வு முறை, முக்கிய தேதிகள்- முழுவிவரம்
Recommended image3
ஷாக்கிங் நியூஸ்! ரயிலை கவிழ்க்க சதி! பல உயிர்களை காப்பாற்றிய லோகோ பைலட்! நடந்தது என்ன?
Related Stories
Recommended image1
தாட்கோ கடனுதவி திட்டம்! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அட்டகாசமான குட்நியூஸ்.!
Recommended image2
ஜனவரியில் குஷியில் இருந்த மாணவர்களுக்கு பிப்ரவரியில் அதிர்ச்சி! வெளியான முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved