Heart Disease : ஒரே ஒரு பழக்கத்தை கைவிட்டா போதும்!! இதய நோய்களே வராது
World Heart Day 2025 : இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். அதைப் போல ஒரு பழக்கத்தை கைவிடவும் வேண்டும் என இதய அறுவை சிகிச்சை விளக்குகிறார்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வெறும் உணவுகள் மட்டும் போதாது. நல்ல உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். ஆனால் நல்ல உடல் செயல்பாடுகள் தான் நீண்ட ஆயுளைத் தரும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த அதிக நேரம் உட்கார்ந்த நடத்தையைத் தவிர்க்க வேண்டும்.
நீண்ட நேரம் படுத்த நிலையில் இருக்கும் ஒரு நபருக்கு இதயத்தில் இரத்தம் பம் செய்யப்படுவதில் செயல்திறன் குறைவாகவே இருக்கும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதய வலிமையை அதிகரிக்கும். நாள் முழுக்க சுறுசுறுப்பாக இல்லாவிட்டாலும் அதிக நேரம் அமர்ந்தே இருப்பதை தவிர்க்க வேண்டும்.
அமர்ந்த வாழ்க்கை முறை அதிகமான உடல் செயல்பாடுகளைத் தவிர்க்கும். இதுவே இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பழக்கமாகும். ரொம்ப நேரம் அமர்ந்தே இருப்பவர்களுக்கு, இதயங்கள் விறைப்பாகிறது. இதனால் நெகிழ்ச்சித்தன்மை குறைகிறது. நாளடைவில் இதய நோய்களும், இறப்பு அபாயயும் அதிகரிக்கிறது.
நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது, அதிக நேரம் அமர்வதை தவிர்ப்பது இதய ஆரோக்கியத்திற்கு அவசியமானது. உடற்பயிற்சி செய்வது இதய செயல்பாட்டிற்கு நேரடியாக நன்மை செய்யக் கூடியது. இதய தசைகளை வலுப்படுத்துகிறது. தினசரி ஏரோபிக் உடற்பயிற்சிகள் இதய தசைக்கு நெகிழ்ச்சித்தன்மை, வலிமையை அளிக்கிறது. இதனால் ஆயுள் அதிகரிக்கிறது. உடல் செயல்பாடு இதயத்தில் நேர்மறையான பதிலை உருவாக்குகிறது, ஏனெனில் இது உடலின் முயற்சிகளுக்கு வெகுமதி அளிக்கிறது.
ஓர் ஆய்வில் அதிதீவிரம் உடற்பயிற்சிகளை வாரத்திற்கு 4 முதல் 5 முறை செய்த பங்கேற்பாளர்களின் இதயம் 20 வயதுக்குள் இருப்பவர்களின் செயல்திறனை ஒத்த இதய செயல்பாட்டு முடிவுகளை கொண்டிருந்தது தெரிய வந்தது. உடற்பயிற்சிகளே செய்யாதவர்கள் எந்த நேர்மறையான மாற்றங்களையும் காட்டவில்லை. உடற்பயிற்சிகள் செய்வது எந்த வயதிலும் இதயத்தை பராமரிக்க உதவும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தீவிரமான உடற்பயிற்சிகளை செய்ய தொடங்கும் முன் நடைபயிற்சி, சைக்கிளிங், நீச்சல் போன்ற ஆகிய மிதமான ஏரோபிக் செயல்பாடுகளை பழகலாம். பின்னர் தீவிர உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒரு நாளில் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் செய்தால் கூட போதும். வாரத்தில் ஒன்று முதல் இரண்டு உயர் தீவிர உடற்பயிற்சி அமர்வுகள் அவசியம்.
படிக்கட்டுகளில் ஏறுதல், குறுநடை என உட்கார்ந்த நேரத்தை உடைக்கும் எந்த இயக்கமும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. நீண்ட நேரம் அமரும் பழக்கத்தை மட்டும் கைவிடவேண்டும். ஒவ்வொரு 30 நிமிடங்கள் அல்லது ஒரு மணிநேரத்தில் எழுந்து 5 நிமிடங்கள் வேகமாக நடக்கலாம். இது இதய வலிமையைப் பராமரிக்க உதவும். இந்த ஒரு பழக்கத்தை பின்பற்றினால் இதயநோய்களே வராது.