MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உங்களை சுற்றி இருக்கும் இந்த நபர்களால் முதுமை தோற்றம் வருமாம்.! இவர்களிடம் எச்சரிக்கையா இருங்க.!

உங்களை சுற்றி இருக்கும் இந்த நபர்களால் முதுமை தோற்றம் வருமாம்.! இவர்களிடம் எச்சரிக்கையா இருங்க.!

Stress and Biological Aging : நம்மை சுற்றி இருக்கும் நபர்கள் நம் வயதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 11 2026, 03:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விரைவில் முதுமையடைச் செய்யும் மனிதர்கள்
Image Credit : stockPhoto

விரைவில் முதுமையடைச் செய்யும் மனிதர்கள்

வருடங்கள் செல்ல செல்ல மனிதர்களுக்கு வயதாவது இயல்புதான். இந்த பூமியில் ஜீவராசிகளாக பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாள் மரணித்தே தீர வேண்டும். ஒரு மனிதனோ அல்லது விலங்கோ முதுமையை அடைந்த பிறகு மரணிக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் முதுமை என்பது சிலருக்கு முன்கூட்டியே வந்துவிடுவதாக சமீபத்திய ஆய்வு கட்டுரை ஒன்று கூறுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் நபர்களால் நாம் விரைவாக முதுமை அடையக்கூடும் என்று அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
சர்வதேச ஆய்வு முடிவுகள்
Image Credit : stockPhoto

சர்வதேச ஆய்வு முடிவுகள்

இந்த கண்டுபிடிப்புகள் தேசிய அறிவியல் அகாடமியின் (PNAS) சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழான Proceedings இல் வெளியிடப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் 2,600 நபர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, ஒருவருடைய வாழ்க்கையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அல்லது நச்சுத்தன்மை கொண்டவர்கள் இருந்தால் அது அவர்களின் உயிரியல் முதுமையை துரிதப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய நபர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் அதே வயதுடைய மற்றவர்களை விட சராசரியாக 9 மாதங்கள் கூடுதலாக முதுமையடைந்து காணப்படுகிறார்கள்.

Related Articles

Related image1
குடிநீரில் TDS குறைந்தால் உயிருக்கே ஆபத்தா? RO வாட்டர் பற்றி மருத்துவர்கள் சொல்லும் 'சீக்ரெட்'!
Related image2
ஸ்ட்ரோக் வராம இருக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் வழி.. 15 நிமிடம் போதும்
35
‘ஹஸ்லர்ஸ்’
Image Credit : Twitter

‘ஹஸ்லர்ஸ்’

இந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துபவர்களை ஆராய்ச்சியாளர்கள் ‘ஹஸ்லர்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து மற்றவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம் அல்லது உணர்ச்சி ரீதியான அழுத்தத்தை உருவாக்குவார்கள். ஒவ்வொரு கூடுதல் அழுத்தமான உறவும் ஒருவரது உயிரியல் முதுமையை சுமார் 1.5% வேகப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தம் காரணமாக உடலில் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் தொடர்ந்து சுரப்பதாகவும், இது டிஎன்ஏவில் உள்ள டெலோமியார்ஸ் எனப்படும் பாதுகாப்பு உறைகளைக் குறைத்து செல்கள் விரைவாக முதுமையடைய காரணமாகிறது.

45
நிபுணர்களின் ஆலோசனை
Image Credit : Getty

நிபுணர்களின் ஆலோசனை

மேலும் இதன் காரணமாக உடலில் மாற்றங்கள், உள் உறுப்புகளில் வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு, ரத்த நாளங்கள் பாதிப்பு, அதிக உடல் எடை, கவலை, மனச்சோர்வு ஆகியவற்றையும் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. நிபுணர்களின் ஆலோசனைப்படி உறவுகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தொடர்ந்து எதிர்மறை எண்ணங்களை பரப்புபவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. முழுமையாக விலக முடியாத குடும்பச் சூழலில் மாட்டிக் கொண்டவர்கள், தகுந்த இடைவெளியைப் பேணுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

55
சரியான மனிதர்களை தேர்ந்தெடுங்கள்
Image Credit : our own

சரியான மனிதர்களை தேர்ந்தெடுங்கள்

மன அழுத்தத்தை தரும் மனிதர்கள் உங்கள் மனதை மட்டும் அல்ல, உங்கள் உடலின் செல்களையும் முதுமைடையச் செய்கிறார்கள். எனவே ஆரோக்கியமான நேர்மறையான சமூக வட்டத்தை அமைத்துக் கொள்வது நீண்ட ஆயுளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் இளமையான தோற்றத்தையும் தக்க வைப்பதற்கு உதவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
கேஸ் இல்லாமல் சமையல் செய்யலாம்..! இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்.!
Recommended image2
விலை ஏறுனா என்ன..? நம்ம கேஸ் குறையாது.. இல்லத்தரசிகளுக்கான 7 மேஜிக் டிப்ஸ் இதோ..!
Recommended image3
குடிநீரில் TDS குறைந்தால் உயிருக்கே ஆபத்தா? RO வாட்டர் பற்றி மருத்துவர்கள் சொல்லும் 'சீக்ரெட்'!
Related Stories
Recommended image1
குடிநீரில் TDS குறைந்தால் உயிருக்கே ஆபத்தா? RO வாட்டர் பற்றி மருத்துவர்கள் சொல்லும் 'சீக்ரெட்'!
Recommended image2
ஸ்ட்ரோக் வராம இருக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் வழி.. 15 நிமிடம் போதும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved