ஜாக்கிரதை.! ராத்திரியில இந்த 7 பழங்களை மறந்தும் சாப்பிடாதீங்க!
பழங்கள் உடம்புக்கு ரொம்ப நல்லதுதான். ஆனா, சில பழங்களை ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, அது செரிமானத்தையும் தூக்கத்தையும் கெடுக்கலாம். அப்படி ராத்திரியில சாப்பிடக் கூடாத சில பழங்கள் என்னென்னனு பார்க்கலாம் வாங்க.
18

Image Credit : Getty
ராத்திரியில் வேண்டாம் மக்களே
தூங்கப் போறதுக்கு முன்னாடி சில பழங்களைச் சாப்பிட்டா, அது உங்க தூக்கத்தையும் செரிமானத்தையும் பாதிக்கலாம். அது என்னென்ன பழங்கள்னு இந்த போட்டோ கேலரியில பார்க்கலாம் வாங்க.
28
Image Credit : stockPhoto
ஆரஞ்சு, சாத்துக்கு, எலுமிச்சை
ஆரஞ்சு, சாத்துக்குடி மாதிரி சிட்ரஸ் பழங்களை நீங்க ராத்திரி சாப்பிட்டா, நெஞ்செரிச்சல், அசிடிட்டி மாதிரியான பிரச்னைகள் வர அதிக வாய்ப்பிருக்கு.
38
Image Credit : Getty
வாழைப்பழம்
நீங்க ராத்திரி வாழைப்பழம் சாப்பிட்டா, அது கேஸ் மாதிரி செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கலாம். ரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்க வாய்ப்பிருக்கு.
48
Image Credit : Getty
திராட்சை
திராட்சையில சர்க்கரை அளவு ரொம்ப அதிகம். இத ராத்திரி சாப்பிடும்போது, உங்க ரத்த சர்க்கரை அளவு திடீர்னு அதிகமாகலாம்.
58
Image Credit : Getty
அன்னாசிப் பழம்
அன்னாசிப் பழத்துலயும் அமிலம் இருக்கு. அதனால, இதையும் ராத்திரி சாப்பிட்டா சிலருக்கு நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்னை வரலாம்.
68
Image Credit : Getty
பப்பாளி பழம்
பப்பாளி பழத்தை ராத்திரி சாப்பிட்டா, சிலருக்கு செரிமானப் பிரச்னைகள் ஏற்படலாம். உங்களுக்கு அப்படி ஒரு பிரச்னை இருந்தா, ராத்திரியில பப்பாளி சாப்பிடறத தவிர்த்திடுங்க.
78
Image Credit : Asianet News
மாம்பழம்
தூங்கப் போறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி மாம்பழம் சாப்பிட்டா, ரத்த சர்க்கரை அளவு அதிகமாக வாய்ப்பிருக்கு. சர்க்கரை நோயாளிகள் ரொம்ப கவனமா இருக்கணும்.
88
Image Credit : Getty
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்துல நார்ச்சத்து அதிகமா இருக்கு. இதனால, ராத்திரி நேரத்துல சாப்பிடும்போது சிலருக்கு செரிமானப் பிரச்னைகள் வரலாம்.
Latest Videos

