Tamil

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் மீன் வகைகள்

மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், வைட்டமின் டி மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியம் முதல் மூளை வளர்ச்சி வரை மீன் உணவுகள் பல நன்மைகளைத் தருகின்றன.

Tamil

சால்மன்/கிழாங்கு மீன் (Salmon)

EPA & DHA போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்பு அளவை குறைப்பதால் மாரடைப்பு வராமல் தடுக்கிறது. இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Image credits: stockPhoto
Tamil

கானாங்கெளுத்தி மீன் (Mackerel)

ஒமேகா-3 & வைட்டமின் டி நிறைந்துள்ளது. இந்த மீன்களை தொடர்ந்து சாப்பிட்டால் எலும்புகளை வலுவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.

Image credits: stockPhoto
Tamil

மத்தி மீன் (Sardines)

ஒமேகா-3, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. எலும்பு, பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது.

Image credits: stockPhoto
Tamil

நெத்திலி மீன் (Anchovies)

ஒமேகா -3, கால்சியம் நிறைந்தது. இதில் உள்ள வைட்டமின் பி3(நியாசின்) உடலில் ஆற்றலை அதிகரிக்கவும், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் உதவும். கண்கள், எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image credits: stockPhoto
Tamil

சூரை மீன் (Tuna)

ஒமேகா-3 & புரதம் நிறைந்தது. தசைகளை வலுவாக்கும். எடை குறைப்பிற்கு உதவும். இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டால் கருப்பை பலப்படும். ஆண்களுக்கு விந்துவின் தரம் அதிகரிக்கும்.

Image credits: stockPhoto
Tamil

வஞ்சிரம் மற்றும் சங்கரா மீன்

புரதச்சத்து அதிகம். வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. இந்த மீன்களை தொடர்ந்து சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் வலுவாகும். இதய ஆரோக்கியம் மேம்படும். உடல் எடை குறைப்பிற்கு உதவும்.

Image credits: stockPhoto
Tamil

முரல் மற்றும் விரால் மீன்

முரல் மற்றும் விரால் மீன்களில் புரதச்சத்து அதிகம். வைட்டமின் பி12 நிறைந்தது. தசைகளை வலுவாக்கும். நரம்பு மண்டலம் வலப்பெறும்.

Image credits: stockPhoto

இதய நோய் ஆபத்தை தடுக்கும் '7' உணவுகள்

முடி உதிர்தலை நிறுத்த '6' சிறந்த வழிகள்

அதிகமாக சாப்பிட்டாலும் எடையை கூட்டாத 8 உணவுகள்

கண் பார்வையை கூர்மையாக்கும் 7 மலிவான அற்புத உணவுகள்