MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • 100 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் நடக்கும் மேஜிக்.! அடுத்த 7 நாட்களில் 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.!

100 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் நடக்கும் மேஜிக்.! அடுத்த 7 நாட்களில் 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.!

Chaturgrahi Yoga 2026 : மீன ராசியில் நடக்கப் போகும் நான்கு கிரகங்களின் சேர்க்கை காரணமாக மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புது வசந்தம் வீச இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 12 2026, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Chaturgrahi Yoga 2026 in Pisces Lucky Zodiac Signs
Image Credit : Asianet News

Chaturgrahi Yoga 2026 in Pisces Lucky Zodiac Signs

வேத ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் மார்ச் 18 அன்று குரு பகவானின் சொந்த ராசியான மீன ராசியில் சூரியன், சந்திரன், சனி, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இது சதுர்கிரக யோகத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக மார்ச் 18 முதல் 21 வரை அடுத்த ஏழு நாட்களுக்கு சில ராசிக்காரர்கள் ராஜயோகத்தைப் பெற இருக்கின்றனர். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

25
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

சதுர்கிரக யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அடுத்த ஏழு நாட்கள் பொற்காலமாக அமையக்கூடும். ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் வருமானம், வருமானத்தில் எதிர்பாராத உயர்வு கிடைக்கும். தொழில் செய்து வருபவர்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தவும், புதிய முதலீடுகளை செய்யவும் சாதகமான சூழல் உருவாகும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், ஊக்கத்தொகை போன்றவை கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் தேடி வரும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த கடன் அல்லது பண உதவி உங்கள் கைக்கு வந்து சேரும்.

Related Articles

Related image1
மிதுன ராசியில் வக்ர நிவர்த்தியடைந்த குரு பகவான்.! இன்று முதல் 4 ராசிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.! கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.!
Related image2
ராகு கேது உருவாகும் கால சர்ப்ப யோகம்.! மார்ச் 26 வரை இந்த ராசிகளுக்கு டபுள் ராஜயோகம்.!
35
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சதுர்கிரக யோகம் காரணமாக சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்கள் முடிக்க முடியாமல் இருந்து வந்த பணிகள் முடிவதையும். சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இதனால் புதிய சொத்துக்கள், நிலம், மனை, தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். தேவைக்கு அதிகமான பணம் கைக்கு வரும். உபரி வருமானத்தால் பொருளாதார நிலை மேம்படும். செலவுகள் குறைந்து, சேமிப்பு உயரும்.

45
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

சதுர்கிரக யோகம் மீன ராசியிலேயே உருவாவதால் மீன ராசிக்காரர்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். மீன ராசிக்காரர்களின் வாழ்வில் இதுவரை நிலவி வந்த கஷ்டங்கள் முடிவுக்கு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள புதிர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில், கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும். நேர்காணல் முடித்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு வேலைக்கான அழைப்புகள் வரலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

55
குரு வழிபாடு
Image Credit : Asianet News

குரு வழிபாடு

குரு பகவானின் சொந்த ராசியான மீன ராசியில் கிரகங்களின் சேர்க்கை நடைபெறுவதால் நற்பலன்களை முழுமையாக பல குரு பகவானை வழிபட வேண்டும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிறப் பொருட்கள் தானம் செய்வது, குரு பகவானுக்கு மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பித்து, தீபம் ஏற்றி வழிபடுவது ஆகியவை சிறப்பு. மேலும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது, குரு பகவானுக்குரிய மந்திரங்களை உச்சரிப்பது ஆகியவற்றின் மூலம் இந்த சதுர்கிரக யோகத்தின் பலன்களை முழுமையாகப் பெற முடியும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மிதுன ராசியில் வக்ர நிவர்த்தியடைந்த குரு பகவான்.! இன்று முதல் 4 ராசிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.! கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.!
Recommended image2
ராகு கேது உருவாகும் கால சர்ப்ப யோகம்.! மார்ச் 26 வரை இந்த ராசிகளுக்கு டபுள் ராஜயோகம்.!
Recommended image3
2026 பரபாவ ஆண்டு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தரும்? மேஷம் to மீனம் வரை, 12 ராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்.!
Related Stories
Recommended image1
மிதுன ராசியில் வக்ர நிவர்த்தியடைந்த குரு பகவான்.! இன்று முதல் 4 ராசிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.! கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.!
Recommended image2
ராகு கேது உருவாகும் கால சர்ப்ப யோகம்.! மார்ச் 26 வரை இந்த ராசிகளுக்கு டபுள் ராஜயோகம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved