MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ராகு கேது உருவாகும் கால சர்ப்ப யோகம்.! மார்ச் 26 வரை இந்த ராசிகளுக்கு டபுள் ராஜயோகம்.!

ராகு கேது உருவாகும் கால சர்ப்ப யோகம்.! மார்ச் 26 வரை இந்த ராசிகளுக்கு டபுள் ராஜயோகம்.!

Kaal Sarpa Yog 2026 Lucky Zodiac Signs : ஜோதிடத்தின்படி மார்ச் மாதத்தில் உருவாகும் கால சர்ப்ப யோகம் சில ராசிகளுக்கு சுப பலன்களை அளிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 11 2026, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kaal Sarpa Yog 2026 Lucky Zodiac Signs
Image Credit : Asianet News

Kaal Sarpa Yog 2026 Lucky Zodiac Signs

2026 மார்ச் மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதம் ராகு பகவான் மகா பாக்ய ராசியான கும்பத்திலும், கேது சிம்மத்திலும் பெயர்ச்சி அடைவார்கள் இந்த காலகட்டத்தில் மற்ற அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேதுவின் அச்சிற்குள் வரும் பொழுது கால சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப யோகம் உருவாகிறது.

கால சர்ப்ப யோகமானது தடைகளையும், தாமதங்களையும் குறிக்கும் என்று பயப்படத் தேவையில்லை. கிரகங்களின் நிலையைப் பொறுத்து இது மிகப்பெரிய ராஜயோகத்தை வழங்க வல்லது. அந்த வகையில் மார்ச் 2026 இல் உருவாகும் கால சர்ப்ப யோகத்தால் பின்வரும் ராசிகள் சிறப்பான பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

24
துலாம்
Image Credit : AI Generated

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு கால்சர்ப்ப யோகம் சுப பலன்களை அளிக்கக்கூடும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் காரிய சித்தி உண்டாகும். இந்த காலகட்டத்தில் பிற கிரகங்களின் நிலையால் துலாம் ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களை அனுபவிப்பீர்கள். வெளிநாடு தொடர்புடைய வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்கும். 

உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு விரைவில் பணியில் சேர்வதற்கான அழைப்புகள் வரும். உங்கள் பேச்சு மற்றும் நிதி சார்ந்த முடிவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Related Articles

Related image1
2026 பரபாவ ஆண்டு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தரும்? மேஷம் to மீனம் வரை, 12 ராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்.!
Related image2
ஒரே நாளில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு தரமான சம்பவம் லோடிங்.! பிளாஸ்ட்டு, பிளாஸ்ட்டு தான்.!
34
தனுசு
Image Credit : AI Generated

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு கால சர்ப்ப யோகம் சில சிரமங்களை கொடுத்தாலும், வாழ்க்கையில் புதிய மாற்றங்களையும், ஏற்றங்களையும் அளிக்கும். தனுசு ராசிக்காரர்கள் இலக்கை நோக்கிய பயணம் வேகம் எடுக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய லாபங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். 

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீட்டிற்கு குடியேறுவீர்கள். குருவின் பார்வை இருப்பதால் பேச்சில் சற்று நிதானம் தேவை. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

44
மீனம்
Image Credit : AI Generated

மீனம்

கால சர்ப்ப யோகத்தால் மீன ராசிக்காரர்கள் சற்று பிரச்சனைகளை சந்தித்தாலும் அதை திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெறும் வல்லமை கிடைக்கும். மார்ச் 11 குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதன் காரணமாக தொழில் மற்றும் கல்வியில் சிறப்பான பலன்கள் கிடைக்கக்கூடும். வெளிநாடு சென்று வேலை பார்க்க விரும்புபவர்களின் கனவு நனவாகும். 

தொழிலில் இருக்கும் மந்த நிலை நீங்கும். போட்டி பொறாமைகள் குறையும். வணிகர்கள் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள். வசதி வாய்ப்புகள் உருவாகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
2026 பரபாவ ஆண்டு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தரும்? மேஷம் to மீனம் வரை, 12 ராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்.!
Recommended image2
மறந்துகூட இந்த விரல்களில் தங்க மோதிரம் அணியாதீங்க.! சனி பகவான் கோபத்திற்கு ஆளாவீங்க.! தோஷம் பிடிக்கும்.!
Recommended image3
புதன் சதயம் நட்சத்திரப் பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்கள் கவனம்.. யார் எல்லாம் தெரியுமா?
Related Stories
Recommended image1
2026 பரபாவ ஆண்டு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தரும்? மேஷம் to மீனம் வரை, 12 ராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்.!
Recommended image2
ஒரே நாளில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு தரமான சம்பவம் லோடிங்.! பிளாஸ்ட்டு, பிளாஸ்ட்டு தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved