- Home
- Astrology
- ஒரே நாளில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு தரமான சம்பவம் லோடிங்.! பிளாஸ்ட்டு, பிளாஸ்ட்டு தான்.!
ஒரே நாளில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு தரமான சம்பவம் லோடிங்.! பிளாஸ்ட்டு, பிளாஸ்ட்டு தான்.!
Rahu Ketu Peyarchi 2026 : ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்களும் ஒரே நாளில் தங்களது நட்சத்திரத்தை மாற்ற இருக்கின்றன. இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Rahu Ketu Peyarchi 2026
ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களும் நிழல் கிரகங்களாக அறியப்படுகின்றன. இவை திடீர் மாற்றங்கள், எதிர்பாராத நிகழ்வுகள், மாயைகளின் கிரகங்களாக அறியப்படுகின்றன. இந்த கிரகங்கள் பெரும்பாலான நேரங்களில் அசுப பலன்களை தருவதாக கருதினாலும், சில நேரங்களில் சுப பலன்களையும் தருகின்றன. அந்த வகையில் மார்ச் 29 கேது பகவான் மக நட்சத்திரத்திலும், ராகு பகவான் சதய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். இதன் காரணமாக நான்கு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெற உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
ஒரே நாளில் நடக்கும் ராகு கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணவரவு கிடைக்கும். செலவுகள் குறையும். உங்களை வாட்டி வதைத்து வந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் நீங்கும். உங்களின் பேச்சு அனைவரையும் கவரும். திடீர் பயணங்களால் லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.
மிதுனம்
ராகு கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெற இருக்கின்றனர். மார்ச் இறுதியில் உங்கள் நிதி நிலைமை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். சொத்து வாங்க அல்லது விற்க சாதகமான சூழல்கள் உருவாகும். நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து இருப்பவர்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். தடைபட்டு நின்ற வேலைகள் மீண்டும் தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்து சென்ற தம்பதிகள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டு. தந்தை மற்றும் தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் நட்சத்திரம் மாற்றம் மிகவும் சாதகமான சூழலை உருவாக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை விலகும். தொழில் போட்டியாளர்கள் விலகுவதால் உங்களின் தொழில் சிறக்கும். எதிரிகளை எளிதாக வென்று சாதனை படைப்பீர்கள். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும். உபரி வருமானம் திறக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணத்தில் முடியும். ஆரோக்கியம் மேம்படும். சேமிப்பு மற்றும் முதலீடுகளில் கவனம் செலுத்துவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி காரணமாக செல்வம் பெருகும். பணம் ஈட்டுவதற்கான புதிய வழிகளை கண்டறிவீர்கள். கடன் மற்றும் கஷ்டங்கள் குறையத் தொடங்கும். செலவுகள் குறைவதால் வங்கி இருப்பு கணிசமாக உயரும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வருமானம் உயர்வதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். சொத்து அல்லது வீடு வாங்க வாய்ப்பு உள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

