- Home
- Astrology
- ரேவதி நட்சத்திரத்தில் சுக்கிரன்.! 5 ராசிகளுக்கு இழப்புகளையும், அவமானங்களையும் சந்திக்கப் போறீங்க.!
ரேவதி நட்சத்திரத்தில் சுக்கிரன்.! 5 ராசிகளுக்கு இழப்புகளையும், அவமானங்களையும் சந்திக்கப் போறீங்க.!
Sukra Peyarchi 2026: 2026 அன்று சுக்கிர பகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு சவால்களையும், நிதி நெருக்கடியையும் தர இருப்பதாக கருதப்படுகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.

Sukra Peyarchi 2026 in Revathi Natchathiram
வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவர் செல்வம், ஆடம்பரம், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றை அள்ளித் தரும் கிரகமாகமாவார். இவர் ஒரு நட்சத்திரத்தில் நுழையும் பொழுது அது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் மார்ச் 15, 2026 சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்திற்கு இடம்பெறுகிறார். புதன் ஆளும் ரேவதி நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழைவது சில ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடிகளையும், சவால்களையும் தர இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து இங்கு காணலாம்.
மேஷம்
சுக்கிர பகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாவது மேஷ ராசிக்காரர்களுக்கு சுபமானதாக கருதப்படவில்லை. திடீர் செலவுகள் உங்கள் சேமிப்பை கரைக்கலாம். நிதி சார்ந்த விஷயங்களில் இழப்புகள் ஏற்படலாம். ஆடம்பரப் பொருட்களுக்கு அதிகமாக செலவு செய்ய நேரிடலாம். வீட்டின் வரவு, செலவு திட்டங்கள் சீர்குலையலாம். நிதி சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதையும் தற்போதைக்கு ஒத்தி வைப்பது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் அதிர்ஷ்டத்தை பாதிக்க இருக்கிறது. வேலையில் திடீர் தடைகள் ஏற்படக்கூடும். நன்றாக போய்க் கொண்டிருந்த வேலைகள் கடைசி நேரத்தில் தடைபடலாம். இதனால் நிதி இழப்புகள் ஏற்படலாம். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வராமல் போகலாம். எந்த ஒரு ஆவணத்தையும், நிதி சார்ந்த விஷயங்களையும் எடுப்பதற்கு முன்னர் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. ஆவணங்களை ஒரு முறைக்கு இருமுறை படித்து பார்ப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ரேவதி நட்சத்திரப் பெயர்ச்சி எட்டாம் வீட்டில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக எதிர்பாராத தடைகள் உருவாகக் கூடும். வேலையில் உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம். எதிரிகளால் வியாபாரத்தில் இழப்புகளை சந்திக்க நேரலாம். உங்கள் உடல் நலத்திற்காக பணத்தை செலவு செய்யும் வாய்ப்புகள் உருவாகும். இந்த காலகட்டத்தில் பிறருக்கு கடன் கொடுப்பதையோ, கடன் வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் கொடுத்த கடனை திரும்ப பெறுவது மிகவும் கடினமாக மாறிவிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திரம் மாற்றத்தால் வீடு மராமத்து மற்றும் வாகன பழுது தொடர்பான செலவுகள் அதிகரிக்கக்கூடும். சொத்து தொடர்பான விஷயங்களில் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கலாம். குடும்பத்தில் ஏற்படும் மோதல்கள் உங்கள் செயல் திறனை பாதிக்கும். உங்கள் வருமானமும் கணிசமாக குறையக்கூடும். வீட்டை புதுப்பித்தல் அல்லது புதிய முதலீடுகளில் இறங்குவதற்கு முன்பு ஆலோசனை செய்து அதன் பிறகு இறங்குவது நல்லது.
மீனம்
மீன ராசியில் ரேவதி நட்சத்திரம் வருவதால் சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சுமாரான பலன்களையேத் தரும். உங்களிடம் இருக்கும் மதிப்பு மிக்க பொருட்களை இழந்து விடுவோமோ அல்லது திருடப்படுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். ஆடம்பரப் பொருட்களால் உங்கள் நிதி நிலைமை சீர் குலையலாம். உங்கள் உடைமைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. நீங்கள் எடுக்கும் நிதி சார்ந்த விஷயங்களுக்கு முன்பு நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நிதி இழப்புகளில் இருந்து உங்களை தடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

