- Home
- Astrology
- Guru Peyarchi 2026 : 12 வருடங்களுக்குப் பிறகு மிதுனத்தில் குரு நேரடி பயணம்.! கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Guru Peyarchi 2026 : 12 வருடங்களுக்குப் பிறகு மிதுனத்தில் குரு நேரடி பயணம்.! கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Guru Peyarchi 2026 Palangal : மார்ச் 11, 2026 அன்று குரு பகவான் மிதுன ராசியில் நேரடி பயணத்தை தொடங்க இருக்கிறார். அவரது இந்த மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Guru Peyarchi 2026 Palangal
ஜோதிடத்தில் குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவர் அறிவு, செல்வம், திருமணம், உயர் கல்வி, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் வக்ர நிலையில் (அதாவது பின்னோக்கி செல்வது போன்ற தோற்றம்) பயணித்து வருகிறார். வரும் மார்ச் 11ஆம் தேதி அவர் மீண்டும் நேரடி பயணத்தை தொடங்க இருக்கிறார். 12 வருடங்களுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்வு நடைபெற இருக்கிறது.
வருகிற மார்ச் 11, 2026 குரு பகவான் மிதுன ராசியில் வக்ர இயக்கத்தை முடித்து நேரடி இயக்கத்தை தொடங்குகிறார். குரு பகவானின் அடுத்த ராசி மாற்றம் ஜூன் 2 2026 அன்று நிகழ இருக்கிறது. மிதுன ராசியிலிருந்து வெளியேறும் குரு பகவான் கடக ராசிக்குள் நுழைய இருக்கிறார். கடக ராசி அவரது உச்ச ராசியாக கருதப்படுவதால், மார்ச் 11 தொடங்கி அடுத்த சில வருடங்களுக்கு குரு பகவான் நன்மைகளை வாரி வழங்க இருக்கிறார்.
மேஷம்
குரு பகவானின் நேரடி இயக்கத்தால் மேஷ ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை பெற இருக்கின்றனர். குரு மேஷ ராசியின் மூன்றாவது வீட்டில் சஞ்சரித்து நேரடி பயணத்தைத் தொடங்குகிறார். இது வீடு, தைரியம் மற்றும் உடன்பிறப்புகளை குறிக்கும் இடமாகும். இதன் விளைவாக தைரியம், வீரம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். குரு பகவான் வேலையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வருவார்.
அவரின் ஒன்பதாவது பார்வை பதினோராவது வீட்டில் விழுவதால் புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். நிதிநிலைமை மேம்படும். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபத்தை எதிர்பார்க்கலாம். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உயர்கல்வி மாணவர்கள் பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: மஞ்சள் துணியில் கடலை பருப்பை மூட்டையாக கட்டி விஷ்ணு கோவிலில் காணிக்கையாக செலுத்தவும். வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.
ரிஷபம்
குரு பகவானின் நேரடி இயக்கம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். இந்த ராசியின் செல்வ ஸ்தானமான இரண்டாம் வீட்டில் குரு பகவான் பயணிக்க இருக்கிறார். இதன் காரணமாக பொருளாதார நிலை உயரும். வீட்டில் பொன், பொருள், ஆபரணங்களின் சேர்க்கை நடைபெறும். தொழில் செய்து வருபவர்கள் தொழிலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
வாகனங்கள் வாங்கும் யோகம் கைகூடும். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முன்பு சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக மாறும். மாணவர்களுக்கும் நன்மை கிடைக்கும். இந்த ராசியில் பிறந்தவர்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் உயர் கல்வியில் வெற்றிகளைப் பெறுவார்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து பசு மாட்டிற்கு உணவாக கொடுப்பது சுப பலன்களைத் தரும்.
மிதுனம்
குரு பகவான் மிதுன ராசியின் லக்ன வீட்டில் நேரடி பயணத்தைத் தொடங்குகிறார். எனவே மிதுன ராசிக்காரர்களுக்கு பல பகுதிகளில் நன்மை கிடைக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதோடு நேர்மறை ஆற்றல் பிறக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். குழந்தைகள் விஷயத்தில் நல்லது நடக்கும்.
புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்புகள் கிடைக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறுவீர்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

