- Home
- Astrology
- Venus Transit : அஸ்த நட்சத்திரத்தில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் சுக்கிரன்... 7 ராசிகளுக்கு ராஜயோக பலன்கள் குவியப்போகுது..!
Venus Transit : அஸ்த நட்சத்திரத்தில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் சுக்கிரன்... 7 ராசிகளுக்கு ராஜயோக பலன்கள் குவியப்போகுது..!
Venus Transit to astha Nakshatra : சுக்கிரன் பெயர்ச்சியால் எந்தெந்த 7 ராசிகளுக்கு மிகவும் சுபமான மற்றும் நன்மை பயக்கும் பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.

Venus Transit
வேத ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், காதல், கலை, வசதி மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் முக்கிய கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றும் ஒவ்வொரு முறையும், அதன் தாக்கம் மனிதர்களின் பொருளாதார நிலை, தொழில், குடும்ப வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரதிபலிக்கும் என்று ஜோதிட நம்பிக்கை கூறுகிறது.
அந்த வகையில், 2026 ஆகஸ்ட் 11-ஆம் தேதி காலை 6.33 மணிக்கு, சுக்கிரன் உத்திர பல்குனி நட்சத்திரத்திலிருந்து சந்திரனின் ஆதிக்கத்தில் இருக்கும் அஸ்த நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும் நிதி வாய்ப்புகளையும் வழங்கும் என கூறப்படுகிறது. அவற்றில் அதிக பலன் பெறும் ஏழு ராசிகள் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும் வாய்ப்பு அதிகம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முன்னேற்றங்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அதிகரித்து, பொருளாதார நிலை வலுவடையும்.
கடன் சுமைகள் குறைய வாய்ப்புள்ளதுடன், தாமதமாக கிடைக்க வேண்டிய பணமும் கைக்கு வரக்கூடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது வருமான அதிகரிப்பு போன்ற நல்ல மாற்றங்களும் நிகழலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை தொடங்க ஏற்ற காலமாக இது அமையும். பணியிடத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்து, மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறலாம்.
வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. குடும்ப உறவுகள் வலுப்பெற்று, மனநிறைவை தரும் சூழ்நிலைகள் உருவாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும்.
இழந்த பணத்தை மீண்டும் பெறும் வாய்ப்பும் உருவாகலாம். முக்கியமான நபர்களின் அறிமுகம் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவியாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். பழைய முதலீடுகள் எதிர்பாராத லாபத்தை தரும் வாய்ப்பு உள்ளது. பண வரவு அதிகரிப்பதால் பொருளாதார நிலை வலுப்பெறும்.
கலை, ஊடகம், வடிவமைப்பு போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகலாம். சமூகத்தில் மரியாதை மற்றும் மதிப்பும் உயரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உருவாகும். வேலை மாற்றம் குறித்து யோசிப்பவர்களுக்கு இது ஏற்ற காலமாக இருக்கலாம். எதிர்காலத் திட்டங்களை செயல்படுத்த நல்ல சூழல் அமையும்.
அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையின் ஆதரவும், சமூகத்தில் நல்ல பெயரும் அதிகரிக்கும். வருமான வளர்ச்சிக்கும் வாய்ப்பு உள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகலாம். கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் லாபகரமான வாய்ப்புகள் உருவாகும்.
நிலம், வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகமும் அமையலாம். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல காலமாக அமையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக துணைநிற்கும் காலமாக இது அமையும். வருமானத்தை உயர்த்த புதிய வழிகள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவும், முக்கிய பொறுப்புகளும் கிடைக்கலாம்.
சுயதொழில் செய்பவர்களுக்கு தொழில் விரிவாக்க வாய்ப்புகள் உருவாகும். மன அழுத்தம் மற்றும் உடல்நலக் குறைகள் குறைந்து, புதிய நம்பிக்கையுடன் முன்னேறும் சூழல் உருவாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

