MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • வாய்விட்டு மாட்டிக்கொண்ட விஜயா... ஸ்டாப் ஆன மனோஜின் 2ம் திருமணம் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

வாய்விட்டு மாட்டிக்கொண்ட விஜயா... ஸ்டாப் ஆன மனோஜின் 2ம் திருமணம் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து பெண் பார்த்திருந்த விஜயாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 14 2026, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கும் ரோகிணிக்கும் டைவர்ஸ் கேஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனிடையே டைவர்ஸ் கிடைக்கும் முன்னரே மனோஜுக்கு அடுத்த கல்யாணத்துக்கு பெண் பார்க்கும் வேலையை தொடங்கி இருக்கிறார் விஜயா. மனோஜ் ஏற்கனவே திருமணமானவர் என்பதை விஜயா பெண்வீட்டாரிடம் மறைத்தாலும், அவர்களிடம் அந்த உண்மையை அண்ணாமலை கூறிவிடுகி்றார். அவர்கள் தங்கள் பொண்ணுக்கு தோஷம் இருப்பதால் இதுபோன்ற வரன் ஓகே தான் என சொல்லிவிடுகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
பெண் பார்க்க செல்லும் மனோஜ்
Image Credit : jiohotstar

பெண் பார்க்க செல்லும் மனோஜ்

இதையடுத்து விஜயா நல்ல நேரம் பார்க்க கோவிலுக்கு வர, அங்கு மீனாவும், ஸ்ருதியும் இருக்கிறார்கள். அப்போது ஸ்ருதியிடம் பேசும் விஜயா, மனோஜுக்கு பெண் பார்க்கும் விஷயத்தை சொல்கிறார். பின்னர் மீனாவிடம் எதுவும் பேசாமல் கிளம்புகிறார். மீனாவிடம் ஏன் பேசவில்லை என ஸ்ருதி கேட்க, அவளை பார்க்கவே கூடாது என இருந்தேன் என மூஞ்சில் அடித்தார் போல் சொல்லிவிட்டு செல்கிறார். பின்னர் பெண் பார்க்க மனோஜும், விஜயாவும் மட்டும் செல்கிறார். அண்ணாமலைக்கு உடம்பு சரியில்லாததால் அவர் அங்கு செல்லவில்லை. பெண் வீட்டார் பொண்ணை அழைத்து மனோஜுக்கு காட்டுகிறார்கள்.

Related Articles

Related image1
ரோகிணிக்கு கொம்புசீவி விட்ட சிந்தாமணி... சத்யாவின் காதலுக்கு ஓகே சொன்னாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல்
Related image2
விஜயா மூடிமறைத்த உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை... பெண் வீட்டார் கொடுத்த ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை அப்டேட்
35
ஓகே சொன்ன பெண்
Image Credit : jiohotstar

ஓகே சொன்ன பெண்

அப்போது பெண் மிகவும் அழகாக இருந்ததால், பார்த்ததும் அப்படியே சிலை போல் ஆகிவிட்டார் மனோஜ். பின்னர் அவர் அனைவருக்கு காஃபி கொடுத்துவிட்டு எதிரே சென்று அமர்ந்த உடனே, மாப்பிள்ளை உடன் பேச வேண்டும் என கேட்க, மனோஜும் விறுவிறுவென எழுந்து சென்றுவிடுகிறார். பின்னர் இருவரும் தனியாக பேசுகிறார்கள். அப்போது மனோஜ் பற்றி கேட்டு தெரிந்துகொள்கிறார் அந்த பெண், பின்னர் மனோஜும் அவரிடம் என்ன படித்திருக்கிறார், எங்கு வேலை பார்க்கிறார் என்கிற விஷயங்களை கேட்டு தெரிந்துகொள்கிறார். இதையடுத்து இருவரும் கீழே வருகிறார்கள்.

45
ட்விஸ்ட் கொடுத்த தாத்தா
Image Credit : jiohotstar

ட்விஸ்ட் கொடுத்த தாத்தா

அங்கு இருவரும் பிடித்துவிட்டதாக சொல்ல, அந்த நேரத்தில் ஒரு முதியவர் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். அவர் மனோஜ் மற்றும் விஜயாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயாவிடம், எந்த ஊர் என கேட்கிறார். பின்னர் அவரின் அப்பா பெயரை கேட்டதும், அவர் எனக்கு தூரத்து சொந்தம் என சொல்கிறார். அந்த முறைப்படி பார்த்தால் நீங்களும் பொண்ணோட அம்மாவும் அக்கா, தங்கச்சி முறை வருகிறது. சொல்லப்போனால் இந்த பையன் பொண்ணுக்கு அண்ணன் முறை வருகிறார். அதனால் இந்த கல்யாணம் சரிப்பட்டு வராது என கூறிவிடுகிறார். இதைக்கேட்டு மனோஜ் ஷாக் ஆகிறார்.

55
சோகத்தில் மனோஜ்
Image Credit : jiohotstar

சோகத்தில் மனோஜ்

பின்னர் கல்யாணம் நின்றுபோன சோகத்தோடு மனோஜ் கிளம்ப, அப்போது அந்த பெண் மனோஜை அழைத்து டாடா அண்ணா என சொல்லி மேலும் வெறுப்பேற்றுகிறார். வீட்டுக்கு சென்றதும் மனோஜ் தன் தம்பிகள் முத்து, ரவி உடன் சேர்ந்து மொட்டை மாடியில் அமர்ந்து சரக்கடிக்கிறார். தன் கல்யாணம் நின்றுபோன சோகத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறார். அவரிடம் முத்து தனக்கு தெரிந்தவர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த கதையை சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜெயிலில் கம்பி எண்ணும் சந்திரகலா! துரோகம் செய்தாலும் பாசத்திற்காக அழும் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் உருக்கமான திருப்பம்!
Recommended image2
பாட்டியின் பிளானை கேட்டு அரண்டுபோன அரசி... கடும் அப்செட்டில் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
பூஜையால் வெடிக்கப்போகும் பூகம்பம்... குணசேகரன் நல்லவர் வேஷம் போட்டது இதுக்குத்தானா? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related Stories
Recommended image1
ரோகிணிக்கு கொம்புசீவி விட்ட சிந்தாமணி... சத்யாவின் காதலுக்கு ஓகே சொன்னாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல்
Recommended image2
விஜயா மூடிமறைத்த உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை... பெண் வீட்டார் கொடுத்த ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved