MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ரோகிணிக்கு கொம்புசீவி விட்ட சிந்தாமணி... சத்யாவின் காதலுக்கு ஓகே சொன்னாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல்

ரோகிணிக்கு கொம்புசீவி விட்ட சிந்தாமணி... சத்யாவின் காதலுக்கு ஓகே சொன்னாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு விஜயா பெண் பார்த்துள்ள விஷயத்தை ரோகிணியிடம் போட்டுடைத்துள்ளார் சிந்தாமணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 12 2026, 10:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், சிந்தாமணி, நேராக சென்று ரோகிணியிடம் விஜயா மனோஜுக்காக பெண் பார்த்துள்ள விஷயத்தை கூறுகிறார். அதைக்கேட்டதும் ரோகிணி செம டென்ஷன் ஆகிறார். இப்போவே போயி நான் ரெண்டுல ஒன்னு பார்த்துவிடுகிறேன் என சொல்கிறார் ரோகிணி, அப்போது அவரை தடுக்கும் சிந்தாமணி, கொஞ்சம் பொறுமையா இரு, உங்க அத்தை, மனோஜுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது என்கிற உண்மையை இன்னும் பொண்ணு வீட்டுல சொல்லவே இல்ல. அவங்க அதை சொன்னதுக்கு அப்புறமும், அவங்க கல்யாணத்துக்கு ஓகே சொன்னாங்கனா அதுக்கப்புறம் போய் பிரச்சனை பண்ணு என கூறுகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
குட் நியூஸ் சொன்ன முத்து
Image Credit : jiohotstar

குட் நியூஸ் சொன்ன முத்து

மறுபுறம் அண்ணாமலை வீட்டில் தனியாக இருக்கும் போது, முத்து, அப்பா... அப்பானு சொல்லிகிட்டே சந்தோஷமாக வீட்டுக்குள் வருகிறார். அதேநேரத்தில் விஜயாவும் என்னங்க... என்னங்க என அவரிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல ஓடி வருகிறார். பின்னர் அண்ணாமலை இருவரையும் உட்கார வைத்து விஷயத்தை கேட்கிறார். முதலில் முத்து, தான் புதிதாக வேன் வாங்க உள்ள விஷயத்தை சொல்கிறார். இந்த வேன் வாங்கினால் அபார்ட்மெண்டில் உள்ள ஆர்டர் எல்லாம் எனக்கு தான் கிடைக்கும், நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார். இதைக்கேட்ட அண்ணாமலை சந்தோஷப்படுகிறார்.

35
மனோஜுக்கு பொண்ணு பார்த்த விஷயத்தை சொல்லும் விஜயா
Image Credit : jiohotstar

மனோஜுக்கு பொண்ணு பார்த்த விஷயத்தை சொல்லும் விஜயா

இதையடுத்து பேசும் விஜயா, தான் சொல்ல வந்த விஷயத்தை கூறுகிறார். தான் மனோஜுக்கு பொண்ணு பார்த்திருப்பதாகவும், அது பணக்கார பெண் என்றும் கூறுகிறார். அம்மா சொன்னதைக் கேட்டதுமே மனோஜ் வலிய ஆரம்பிக்கிறார். எப்போ பொண்ணு பார்க்க போறோம் என நோண்டி நோண்டி கேட்கிறார் மனோஜ். அப்போது அண்ணாமலை, விஜயாவிடம், நீ மனோஜுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லிட்டியா என கேட்கிறார். இன்னும் சொல்லல என விஜயா சொன்னதும், இதை எப்படி நீ சொல்லாம இருந்த என அண்ணாமலை கேட்டதும், முதலில் அவர்கள் மனோஜை பார்க்கட்டும், அவங்களுக்கு கண்டிப்பா பிடிச்சிரும். அதுக்கப்புறம் உண்மையை சொல்றேன் என கூறுகிறார்.

45
சத்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்
Image Credit : jiohotstar

சத்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பெண் வீட்டார் நம் வீட்டுக்கு வரும் போது நானும் ரவியும் வீட்டில் இருக்க மாட்டோம் என முத்து சொல்கிறார். ஏன் என விஜயா கேட்க, அவங்களிடம் நாங்களே உண்மையை உலறிவிடுவோம். அதனால் நீங்களே பார்த்துக்கோங்க என சொல்கிறார். இதையடுத்து அங்கிருந்து கிளம்பி மீனாவின் அம்மா வீட்டுக்கு செல்கிறார் முத்து. அங்கு சத்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. சத்யாவின் அம்மா அதற்காக வீட்டில் சுட சுட கேசரி கிண்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு சிந்தாமணியின் மகள் ரேகா, கேக் மற்றும் டிரெஸ்ஸோடு அங்கு வருகின்றார்.

55
சத்யாவின் காதலுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்
Image Credit : jiohotstar

சத்யாவின் காதலுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்

அவர் வாங்கி வந்த டிரெஸ் ஒவ்வொன்றும், 5 ஆயிரம், 6 ஆயிரம் மதிப்பில் இருக்கிறது. அதன்பின்னர் கேக்கை வெட்டி, சத்யா ரேகாவுக்கு ஊட்ட, ரேகா சத்யாவுக்கு ஊட்ட என இருவரும் மாறி மாறி ஊட்டிக்கொள்கிறார்கள். அதன்பின்னர் கிளம்பும் முன், சத்யாவிடம் பேசும் ரேகா, நீ இன்னும் பதில் சொல்லவே இல்ல, உன்னுடைய பதிலை இன்னைக்கு நான் எதிர்பார்க்கிறேன் என சொல்லிவிட்டு செல்கிறார். இதைக்கேட்ட முத்து மற்றும் மீனா, சத்யாவிடம் என்னடா லவ் பண்றியா என கேட்க, அவரும் ஆமாம் என சொல்லிவிடுகிறார். முத்து சத்யாவின் காதலுக்கு ஓகே சொல்லிவிடுகிறார். ஆனால் அவர் பெரிய இடத்துப் பெண் என்பதால் மீனாவுக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... அவருக்கு பதில் இவரா?
Recommended image2
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் அதிரடி ட்விஸ்ட்... அக்‌ஷிதா – அவினாஷுக்கு செக் வைத்த அஸ்மிதா – பிரித்வி!
Recommended image3
Sun TV vs Vijay TV : சன் டிவியின் ரெக்கார்டை சல்லி சல்லியாய் உடைக்கும் விஜய் டிவி... இனி இந்த சீரியல் தான் நம்பர் 1
Related Stories
Recommended image1
பிளாப் ஆன மனோஜின் லவ் டிராமா... ரோகிணியின் சாட்டையடியால் கதறிய சந்தோஷ் - சிறகடிக்க ஆசை சீரியல்
Recommended image2
அடுத்த டார்கெட் விஜயா... ரோகிணியின் சகுனி வேலை ஸ்டார்ட் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved