- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- Bigg Boss : ஜெயிலுக்கு போகிறாரா ஜேசன்? முனியம்மாளுக்கு எதிராக திரும்பிய டிடிஎஃப் - பிக் பாஸில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்
Bigg Boss : ஜெயிலுக்கு போகிறாரா ஜேசன்? முனியம்மாளுக்கு எதிராக திரும்பிய டிடிஎஃப் - பிக் பாஸில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் மோசமாக விளையாடிய போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Bigg Boss Tamil Season 10
தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி, கடந்த செப்டம்பர் 6-ம் தேதி பிரம்மாண்டமாகத் தொடங்கியது. நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் 19 போட்டியாளர்களுடன் களமிறங்கிய இந்த சீசனில், அடுத்தடுத்த வெளியேற்றங்களுக்குப் பிறகு தற்போது 12 பேர் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகள், போட்டியாளர்களுக்கு இடையிலான மோதல்கள் என விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வாரம் சற்று மந்தமாகவே இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, வழக்கமாக ஒலிக்கும் பிக் பாஸின் குரலுக்குப் பதிலாக, போட்டியாளர்கள் ஜூனியர் பிக் பாஸ்களாக மாறி டாஸ்க்குகளை முன்னெடுத்தனர். இதனால் இந்த வார நிகழ்ச்சியில் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யம் இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
ஜேசனால் ஏற்பட்ட சர்ச்சைகள்!
இதற்கிடையே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஜேசனைச் சுற்றி பல்வேறு விவாதங்களும் குழப்பங்களும் உருவாகின. இந்நிலையில், வாரத்தின் மோசமான போட்டியாளர்கள் யார் என்பதைத் தேர்வு செய்யும் டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டது. இதில் ஜேசன் மற்றும் முனியம்மாளின் பெயர்களை சக போட்டியாளர்கள் பலரும் முன்வைத்துள்ளனர். இது தொடர்பான புதிய புரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முனியம்மாள் மற்றும் ஜேசனுக்கு எதிராகப் புகார் கூறிய போட்டியாளர்கள்!
வெளியான புரோமோவில் முதலில் எழுந்த டிடிஎஃப் வாசன், முனியம்மாளின் பேச்சு மற்றும் வார்த்தைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விமர்சித்தார். இதனை வெளிப்படுத்தும் விதமாக அவரது வாயில் ஒட்டுவதற்காக டேப்பையும் வழங்கினார். தொடர்ந்து சாதிகாவும் முனியம்மாளைப் பற்றி தனது கருத்துகளைத் தெரிவித்து அவருக்கு டேப் கொடுத்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக முனியம்மாளும் ஜேசனைச் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு விஷயத்தையும் பேசிவிட்டு, பின்னர் அப்படிச் சொல்லவில்லை என்று மறுக்கும் அவரது அணுகுமுறை தனக்குப் பிடிக்கவில்லை எனக் கூறி ஜேசனுக்கு டேப் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து முத்தழகி எழுந்து சாதிகாவைப் பற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அடுத்ததாக வந்த தன்யா மற்றும் வினோத் பாபு இருவரும் ஜேசனின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்தனர். இந்த வாரத்தின் மோசமான போட்டியாளர்களில் ஒருவராக ஜேசனைத் தேர்வு செய்த அவர்கள், அவருக்கு வாத்து பொம்மையை வழங்கினர்.
வீக் எண்டு எபிசோடுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்குகள் மற்றும் பிக் பாஸின் அறிவிப்புகள் மூலம் பரபரப்பு அதிகரிக்கும். ஆனால் இந்த வாரம் போட்டியாளர்களே ஜூனியர் பிக் பாஸ்களாகச் செயல்பட்டதால், நிகழ்ச்சியின் வழக்கமான விறுவிறுப்பு குறைந்ததாகப் பல ரசிகர்கள் கருதுகின்றனர். கடந்த வாரங்களில் ஒவ்வொரு டாஸ்க்கும் சுவாரஸ்யமான திருப்பங்களைக் கொண்டிருந்த நிலையில், இந்த வாரம் அந்த அளவுக்கு ஈர்ப்பு இல்லை என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில், வார இறுதியில் நிகழ்ச்சிக்கு வரவுள்ள விஜய் சேதுபதி, இந்த வாரம் வீட்டில் நடந்த சம்பவங்கள் மற்றும் போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஜேசன் மற்றும் முனியம்மாள் தொடர்பான விவகாரங்களை அவர் கேள்வி எழுப்புவாரா என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.













