- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- Bigg Boss : பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆன ஃபேமிலி... ஜேசனிடம் வினோத் பாபு மகன் கேட்ட நறுக் கேள்வி...!
Bigg Boss : பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆன ஃபேமிலி... ஜேசனிடம் வினோத் பாபு மகன் கேட்ட நறுக் கேள்வி...!
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃபேமிலி வீக் என்பதால், வினோத் பாபுவின் குடும்பத்தார் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 10
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. கடந்த செப்டம்பர் 6, அன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தொடக்கம் முதலே பல்வேறு சண்டைகள், வாக்குவாதங்கள், உணர்ச்சிகரமான தருணங்கள் என விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது 12-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி நிறைவடைய உள்ளதால், போட்டியாளர்களுக்கு இடையேயான போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் குடும்ப வாரமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வீட்டிற்குள் வருகை தந்து அவர்களைச் சந்திக்க உள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களது அன்புக்குரியவர்களைச் சந்திக்கும் போட்டியாளர்களின் உணர்ச்சிகரமான தருணங்களைக் காண ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வினோத் பாபுவின் குடும்பம்!
குடும்ப வாரத்தின் முதல் வருகையாக போட்டியாளர் வினோத் பாபுவின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். அவரது அம்மா, மனைவி மற்றும் மகன் ஆகியோர் வீட்டிற்குள் நுழையும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் இடம்பெற்றுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினரைப் பார்த்த வினோத் பாபுவுக்கு இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.
இதற்கிடையே, வினோத் பாபுவின் மனைவி அவருக்கு வழங்கிய அறிவுரைதான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீட்டிற்குள் இருக்கும் போட்டி, மற்ற போட்டியாளர்களின் விமர்சனங்கள் மற்றும் மன அழுத்தம் குறித்து அவர் தனது கணவருக்கு சில முக்கியமான விஷயங்களை எடுத்துக் கூறியுள்ளார்.
வினோத் பாபு மனைவி கொடுத்த அட்வைஸ்!
புரோமோவில் வினோத் பாபுவிடம் பேசிய அவரது மனைவி, பிக் பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்களை மனதளவில் எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டாக அணுக வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
அவர் கூறியதாவது, "எமோஷனலாக இல்லாமல் இதை ஒரு கேமாக பாருங்க. இந்த கேமில் இப்படித்தான் ஹர்ட் பண்ணுவாங்க, இப்படித்தான் ட்ரிகர் பண்ணுவாங்க. சில நேரங்களில் குற்றவாளி மாதிரி உன்னை அக்யூஸ் பண்ணுவாங்க. இதெல்லாம் இந்த விளையாட்டின் இயல்புதான். இதையெல்லாம் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது அல்லவா? அதை நீ டார்கெட் செய்தால், சக போட்டியாளர்கள் பேசும் வார்த்தைகளுக்கெல்லாம் நீ விழவே மாட்ட" என்று தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
மனைவியின் இந்த அறிவுரை வினோத் பாபுவுக்கு மட்டுமின்றி, பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்களிடையேயும் கவனம் பெற்றுள்ளது. அதேபோல் வினோத் பாபுவின் மகன் ஜேசனிடம் சென்று, ஏன் நீங்க எப்பவுமே அப்பா கூட சண்டை போடுறீங்க என கேட்க, அதற்கு ஜேசன், உங்க அப்பா மட்டும் என்ன நோண்டிகிட்டே இருப்பாரு, நான் சும்மா இருக்கணுமா என்று நக்கலாக கேட்டிருக்கிறார்.
இறுதிக்கட்டத்தில் 8 போட்டியாளர்கள்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டிற்குள் டிடிஎஃப் வாசன், தன்யா பல்லத், ஜேசன், வினோத் பாபு, லட்சுமி பிரியா, முனியம்மாள், பிருத்வி மற்றும் அன்சர் என மொத்தம் 8 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து டபுள் எவிக்ஷன் நடைபெற்றதால் போட்டியின் விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. இதனால் இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குடும்பத்தினரின் வருகை ஒருபுறம், எவிக்ஷன் குறித்த பரபரப்பு மறுபுறம் என பிக் பாஸ் வீடு தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. குடும்ப வாரத்தில் வெளியாகவுள்ள அடுத்தடுத்த புரோமோக்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.















