- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- Bigg Boss 10 : வினோத் பாபு, முனியம்மாள், அன்சரை தொடர்ந்து அடுத்த ஜூனியர் பிக் பாஸ் யார்? பிக் பாஸ் வீட்டில் வெடித்த பஞ்சாயத்து
Bigg Boss 10 : வினோத் பாபு, முனியம்மாள், அன்சரை தொடர்ந்து அடுத்த ஜூனியர் பிக் பாஸ் யார்? பிக் பாஸ் வீட்டில் வெடித்த பஞ்சாயத்து
Who Will Become the Next Junior Bigg Boss? பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஜூனியர் பிக் பாஸ் ஆக போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

யார் அடுத்த ஜூனியர் பிக் பாஸ்?
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தமிழ் இருந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதுவரை 9 சீசன்களைக் கடந்து, தற்போது 10-வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 10, நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடனும் விறுவிறுப்பான போட்டிகளுடனும் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் வித்தியாசமான டாஸ்க்குகளும் போட்டியாளர்களுக்கு இடையிலான மோதல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அதிலும் இந்த சீசனில் பிக்பாஸின் வழக்கமான குரல் இல்லாமல் நிகழ்ச்சி நடைபெறுவது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பிற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலிருந்து மாறுபட்ட இந்த முயற்சி, வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவருக்கும் புதுவித அனுபவமாக அமைந்துள்ளது.
பிக்பாஸுக்கு பதிலாக வந்த ஜூனியர் பிக் பாஸ்!
பிக்பாஸின் வழக்கமான அறிவுறுத்தல்களுக்குப் பதிலாக, வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவரையே ஜூனியர் பிக்பாஸாக நியமித்து மற்றவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கச் செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் யார் அந்தப் பொறுப்புக்கு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் போட்டியாளர்களிடையே உருவானது.
முதலில் வினோத் பாபு ஜூனியர் பிக்பாஸாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பொறுப்புடன் அவருக்குக் கிடைக்கும் சலுகைகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து மற்ற போட்டியாளர்கள் அறிந்ததும், அவரை அந்தப் பதவியில் தொடர்ந்து இருக்க விடாமல் மாற்றினர். இதையடுத்து முனியம்மாள் இரண்டாவது ஜூனியர் பிக்பாஸாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து அன்சர் மூன்றாவது ஜூனியர் பிக்பாஸாகப் பொறுப்பேற்றார்.
மீண்டும் மாறப்போகும் ஜூனியர் பிக் பாஸ்?
இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் 67-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் அடுத்ததாக யாரை ஜூனியர் பிக்பாஸாகத் தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாகப் போட்டியாளர்களிடையே விவாதம் எழுகிறது.
ஏற்கனவே மூன்று பேர் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், நான்காவது ஜூனியர் பிக்பாஸாக யார் வரப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்தப் பதவிக்கான தேர்வின்போது தன்யா மற்றும் ஜேசன் இடையே கருத்து வேறுபாடுகளும் சலசலப்பும் ஏற்படுவது புரோமோவில் கவனம் பெற்றுள்ளது. இதில் தன்யாவுக்கு சப்போர்டாக வரும் ஷாதிகா, ஜேசன் உடன் சண்டைபோடுகிறார்.
இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது?
ஜூனியர் பிக் பாஸ் பதவிக்கான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள், அடுத்ததாக யாருக்கு அதிகாரம் வழங்கப்படும், அந்தப் பொறுப்பை மற்ற போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கான விடை இன்றைய முழு எபிசோடில்தான் தெரியவரும்.
ஏற்கனவே பிக்பாஸின் குரல் இல்லாத வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்து வரும் இந்த சீசனில், ஜூனியர் பிக் பாஸ் பதவியைச் சுற்றி மீண்டும் உருவாகியுள்ள பரபரப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது 67-வது நாள் புரோமோ வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.













