- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- Bigg Boss 10 : பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனா? தீபாவளி-க்காக விஜய் சேதுபதி கொடுத்த செம ட்விஸ்ட்
Bigg Boss 10 : பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனா? தீபாவளி-க்காக விஜய் சேதுபதி கொடுத்த செம ட்விஸ்ட்
Bigg Boss Tamil : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொகுப்பாளர் விஜய் சேதுபதி செம ட்விஸ்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் எவிக்ஷன் அப்டேட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இடையே நடைபெறும் மோதல்கள், சவால்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
நிகழ்ச்சி தொடங்கி 62 நாட்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது 9-வது வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளன. ஒவ்வொரு வார இறுதியிலும் வீட்டில் நடைபெற்ற சம்பவங்களை அலசும் விஜய் சேதுபதி, இந்த வாரமும் போட்டியாளர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற BB திருந்துங்கடா அகடமி டாஸ்க்!
இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு BB திருந்துங்கடா அகடமி என்ற வித்தியாசமான டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று விளையாட வேண்டியிருந்தது. சில போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் முழுமையாக மூழ்கி சிறப்பாக விளையாடினர். ஆனால், இன்னும் சிலர் அவ்வப்போது கதாபாத்திரத்திலிருந்து வெளியே வந்து தங்களுடைய இயல்பான குணத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் டாஸ்க் முழுவதும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன. போட்டியாளர்களின் நடிப்பையும், அவர்கள் கதாபாத்திரங்களை கையாளும் விதத்தையும் ரசிகர்கள் கவனித்து வந்தனர்.
கொலையாளியை கண்டுபிடிக்க நடந்த சீக்ரெட் டாஸ்க்!
BB திருந்துங்கடா அகடமி டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிக்பாஸ் வீட்டில் மற்றொரு சுவாரஸ்யமான சீக்ரெட் டாஸ்க்கும் வழங்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் அஸ்மிதா மற்றும் ஜேசன் ஆகியோர் ரகசிய கொலையாளியாக செயல்பட்டனர். வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் யார் கொலையாளி என்பதை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு டிடிஎஃப் வாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவர் சரியான நபர்களை அடையாளம் காண முடியாமல் போனதால் போட்டியாளர்களுக்கு யார் கொலையாளி என்பதே தெரியாமல் இருந்தது. இதனால் வீக் எண்டில் விஜய் சேதுபதி முன்னிலையில் அதனை ரிவீல் செய்ய உள்ளனர்.
குழந்தை முகத்தில் கொலைகாரி... விஜய் சேதுபதியின் கமெண்ட்!
இந்நிலையில், விஜய் சேதுபதி, சீக்ரெட் டாஸ்க்கில் யார் கொலையாளியாக செயல்பட்டார்கள் என்பதை போட்டியாளர்களிடம் கேட்கிறார். அப்போதும் யாரென்று தெரியவில்லை. இதனால் வேறுவழியின்றி விஜய் சேதுபதி, உண்மையான கொலையாளிகள் யார் என்பதை அவர்களே முன்வந்து தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, அஸ்மிதா தானாக முன்வந்து இந்த ரகசியத்தை வெளிப்படுத்துகிறார். அவர் கொலையாளியாக செயல்பட்டதை தெரிவிக்கும் தருணத்தில், மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அஸ்மிதா கொலையாளி என்பதை வெளிப்படுத்தியதை தொடர்ந்து, விஜய் சேதுபதி அவரைப் பார்த்து வியப்புடன் கருத்து தெரிவித்தார். குழந்தை போன்ற முகத்துடன் இருக்கும் அஸ்மிதா, கொலையாளியாக செயல்பட்டதை குறிப்பிட்டு அவர் கூறிய கருத்து தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்குகள், சீக்ரெட் கொலைகாரர்களின் அடையாளம் மற்றும் விஜய் சேதுபதியின் கேள்விகள் என பிக்பாஸ் வீக் எண்ட் எபிசோடு கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்றுள்ளது.
டபுள் எவிக்ஷனா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் எவிக்ஷன் நடைபெறும். தற்போது 15 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளதால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி ஒரு எதிர்பாரா ட்விஸ்ட் கொடுத்துள்ளார். அது என்னவென்றால் இந்த வாரம் நோ எவிக்ஷன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வாரம் தீபாவளி பண்டிகை வருவதால், எவிக்ஷனில் யாரையும் வெளியேற்ற வேண்டாம் என முடிவெடுத்து இந்த வாரம் நோ எவிக்ஷன் என அறிவித்திருக்கிறார்களாம். அநேகமாக அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்க வாய்ப்புள்ளது.













