MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Bigg Boss Shama : எலிமினேட் ஆன ஷமாவுக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bigg Boss Shama : எலிமினேட் ஆன ஷமாவுக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bigg Boss Shama Salary : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன ஷமாவிற்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 26 2026, 09:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Shama Salary
Image Credit : jiohotstar

Bigg Boss Shama Salary

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் கடந்த வாரத்திற்கான வீக் எண்ட் எபிசோடை மட்டும் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதுவே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்த நிலையில், நேற்று நடைபெற்ற எவிக்‌ஷன் அதைவிட ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஷமா எலிமினேட் ஆனார். அவரின் எவிக்‌ஷன் யாருமே எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்
Image Credit : jiohotstar

எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற டாஸ்கின் போது 3 எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் நல்லா விளையாடும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை முதன்முதலில் வென்ற போட்டியாளர் என்றால் அது ஷமா தான். எஞ்சியுள்ள இரண்டு பாஸ்களையும் ஜேசன் மற்றும் டிடிஎஃப் வாசன் ஆகியோர் வென்றனர். இந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் 70 நாள்கள் வரை தான் செல்லுபடியாகும். அதற்குள் ஒரு முறை நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

35
ஷமாவின் தவறான முடிவு
Image Credit : jiohotstar

ஷமாவின் தவறான முடிவு

அப்படி இருக்கையில் கடந்த வாரம் நாமினேஷனில் சிக்கியிருந்த ஷமா, தான் எலிமினேட் ஆக மாட்டேன் என்கிற ஓவர் கான்பிடன்ஸால் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்தாமலேயே எலிமினேட் ஆகி இருக்கிறார். ஷமா உடன் முத்தழகி, அக்‌ஷிதா, அஸ்மிதா ஆகியோர் டேஞ்சர் ஜோனில் இருந்த நிலையில், ரம்யா கிருஷ்ணன், ஷமாவிடம் உங்களிடம் இருக்கும் நாமினேஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்தப் போகிறீர்களா என்று கேட்க, அதற்கு ஷமா நோ சொல்லிவிட்டார். தான் எலிமினேட் ஆக மாட்டேன் என்கிற நம்பிக்கையில் ஷமா இப்படி சொல்லி இருந்தார்.

45
எலிமினேட் ஆன ஷமா
Image Credit : jiohotstar

எலிமினேட் ஆன ஷமா

ஆனால் அவர் தான் எடுத்த இந்த முடிவு மிகவும் தவறானது என யோசிக்கும் வகையில் ரிசல்ட் வந்தது. கம்மியான வாக்குகள் வாங்கியிருந்த ஷமா இந்த வாரம் எலிமினேட் ஆவதாக அறிவிக்கப்பட்டார். பிக் பாஸ் வரலாற்றிலேயே எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் வென்றும் அதை பயன்படுத்தாமல் எலிமினேட் ஆன முதல் போட்டியாளர் ஷமா தான். அவரின் எவிக்‌ஷன் அறிவிக்கப்பட்டதும் அனைவருமே ஷாக் ஆனார்கள். ஏனெனில் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் முத்தழகி தான் எலிமினேட் ஆவார் என யூகித்தனர். அவர்கள் யாருமே ஷமாவின் பெயரை குறிப்பிடவில்லை.

55
ஷமாவின் சம்பளம்
Image Credit : jiohotstar

ஷமாவின் சம்பளம்

பிக் பாஸ் காமன்மேன் ஷோவில் இருந்து வந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஷமா, 50 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. ஷமாவிற்கு ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால், அவர் மொத்தமாக பிக் பாஸ் வீட்டில் இருந்த 50 நாட்களுக்கு ரூ.5 லட்சம் சம்பளமாக வாங்கி இருக்கிறார். ஷமா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானதோடு, பிக் பாஸிடம் இருந்தும் பாராட்டையும் பெற்று எலிமினேட் ஆகி இருக்கிறார்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chef Damu : மறைந்த செஃப் தாமுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அவரது குடும்பமும் மற்ற விவரங்களும்!
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் ஹோஸ்ட் திடீரென மாற்றம்... விஜய் சேதுபதிக்கு பதில் இவரா?
Recommended image3
Bigg Boss Thamarai Selvi : நாங்க பிரிஞ்சிட்டோம்... பிக் பாஸ் தாமரைச் செல்வியின் கணவர் போட்ட டைவர்ஸ் பதிவால் வெடித்த சர்ச்சை
Related Stories
Recommended image1
Bigg Boss Thamarai Selvi : நாங்க பிரிஞ்சிட்டோம்... பிக் பாஸ் தாமரைச் செல்வியின் கணவர் போட்ட டைவர்ஸ் பதிவால் வெடித்த சர்ச்சை
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் ஹோஸ்ட் திடீரென மாற்றம்... விஜய் சேதுபதிக்கு பதில் இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved