MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Bigg Boss 10 : பிக் பாஸ் ஹோஸ்ட் திடீரென மாற்றம்... விஜய் சேதுபதிக்கு பதில் இவரா?

Bigg Boss 10 : பிக் பாஸ் ஹோஸ்ட் திடீரென மாற்றம்... விஜய் சேதுபதிக்கு பதில் இவரா?

Bigg Boss Tamil Season 10 Host Changed : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு ஒருவர் ஹோஸ்டாக களமிறங்க உள்ளார். அவர் யார் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 24 2026, 07:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Tamil Season 10 Host Changed
Image Credit : X

Bigg Boss Tamil Season 10 Host Changed

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 50 நாட்களை நெருங்கி வருகிறது. இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் பிக் பாஸில் தொகுப்பாளராக களமிறங்கும் மூன்றாவது சீசன் இது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் இருந்து விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்கு முன் முதல் 7 சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் சினிமாவில் பிசியானதால் பிக் பாஸை விட்டு விலகினார். அதன்பின்னர் அந்த பொறுப்பு விஜய் சேதுபதியிடம் சென்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஹோஸ்ட் மாற்றம்
Image Credit : x

ஹோஸ்ட் மாற்றம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ஸ்டைலும், விஜய் சேதுபதி தொகுத்து ஸ்டைலும் வெவ்வேறு விதமாக இருந்தது. கடந்த இரண்டு சீசன்களாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியதற்கும், இந்த சீசனை அவர் தொகுத்து வழங்கியதற்கும் பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. இதனால் ஹோஸ்டை மாற்ற வேண்டும் என்றெல்லாம் நெட்டிசன்கள் வலியுறுத்தி வந்தனர். அவர்கள் கேட்டபடியே பிக் பாஸ் டீம் தற்போது ஹோஸ்டை மாற்றி உள்ளனர். இந்த வாரம் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

35
விஜய் சேதுபதிக்கு பதில் யார்?
Image Credit : X

விஜய் சேதுபதிக்கு பதில் யார்?

அதன்படி விஜய் சேதுபதிக்கு பதிலாக இந்த வாரம் லேடி ஹோஸ்ட் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டு அதற்காக ஒரு புரோமோவும் வெளியிட்டுள்ளனர். அதில் அந்த லேடி யார் என்பதை ரிவீல் செய்யாமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். இருப்பினும் அந்த புரோமோவில் வரும் தோற்றத்தை பார்க்கும்போதே அது நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது. அதனால் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

45
ஹோஸ்ட் மாற்றப்பட்டது ஏன்?
Image Credit : jiohotstar

ஹோஸ்ட் மாற்றப்பட்டது ஏன்?

ஹோஸ்ட் மாற்றப்பட்டது சிலரின் எதிர்ப்பினால் அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். விஜய் சேதுபதி கடந்த இரு வாரங்களாக தொண்டை வலியுடன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த வாரமும் அவருக்கு தொண்டை வலி சரியாகாததால், மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பாத அவர், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுத்து வருவதால், அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணனை ஹோஸ்டாக தேர்வு செய்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு உடல்நிலை சரியானதும் அவர் மீண்டும் ஹோஸ்டாக களமிறங்குவார்.

55
5 சீசன்களுக்கு பின் வரும் ரம்யா கிருஷ்ணன்
Image Credit : jiohotstar

5 சீசன்களுக்கு பின் வரும் ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடைபெற்றபோது அப்போது தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு வாரம் மட்டும் கமல்ஹாசனுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருந்தார். சுமார் 5 சீசன்கள் கழித்து அவர் மீண்டும் பிக் பாஸ் தமிழில் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளதால் இந்த வார எபிசோடு நிச்சயம் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Thamarai Selvi : நாங்க பிரிஞ்சிட்டோம்... பிக் பாஸ் தாமரைச் செல்வியின் கணவர் போட்ட டைவர்ஸ் பதிவால் வெடித்த சர்ச்சை
Recommended image2
Bigg Boss : ரெட் டீமில் இருந்துகொண்டே ப்ளூ டீமுக்கு சப்போர்ட்.. ஜேசனின் டபுள் கேமால் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த பஞ்சாயத்து!
Recommended image3
Bigg Boss 10 : பிக் பாஸ் சர்வைவல் டாஸ்க்கில் செம ட்விஸ்ட்.. பலம் வாய்ந்த ரெட் டீமுக்கு தண்ணி காட்டும் ப்ளூ டீம்!
Related Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் சர்வைவல் டாஸ்க்கில் செம ட்விஸ்ட்.. பலம் வாய்ந்த ரெட் டீமுக்கு தண்ணி காட்டும் ப்ளூ டீம்!
Recommended image2
Bigg Boss : ரெட் டீமில் இருந்துகொண்டே ப்ளூ டீமுக்கு சப்போர்ட்.. ஜேசனின் டபுள் கேமால் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த பஞ்சாயத்து!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved