MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Bigg Boss Thamarai Selvi : நாங்க பிரிஞ்சிட்டோம்... பிக் பாஸ் தாமரைச் செல்வியின் கணவர் போட்ட டைவர்ஸ் பதிவால் வெடித்த சர்ச்சை

Bigg Boss Thamarai Selvi : நாங்க பிரிஞ்சிட்டோம்... பிக் பாஸ் தாமரைச் செல்வியின் கணவர் போட்ட டைவர்ஸ் பதிவால் வெடித்த சர்ச்சை

Bigg Boss Thamarai Selvi Divorce Rumors : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஃபேமஸ் ஆன தாமரைச் செல்வியின் கணவர் பார்த்தசாரதி தாங்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

3 Min read
Author : Ganesh A
Published : Oct 23 2026, 08:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Bigg Boss Thamarai Selvi Divorce Rumors
Image Credit : instagram

Bigg Boss Thamarai Selvi Divorce Rumors

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தாமரைச் செல்வி. மேடை நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் சின்னத்திரையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த இவர், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்தியால் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். தாமரைச் செல்வியின் கணவர் பார்த்தசாரதி, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மேடை நாடகத்திலிருந்து பிக் பாஸ் வரை!
Image Credit : our own

மேடை நாடகத்திலிருந்து பிக் பாஸ் வரை!

கிராமப்புறங்களில் நடைபெறும் விழாக்களில் பாரம்பரிய நடனம் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவர் தாமரைச் செல்வி. தனது இயல்பான நடிப்புத் திறமையால் படிப்படியாகக் கவனம் பெற்ற இவருக்கு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பிக் பாஸ் வீட்டில் சுமார் 90 நாட்கள் பயணித்த தாமரைச் செல்வி, தனது வெளிப்படையான பேச்சு, வெகுளித்தனமான நடவடிக்கைகள் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களால் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்குச் சின்னத்திரையிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. குறிப்பாக பாரதி கண்ணம்மா 2, சின்ன மருமகள் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.

36
சின்ன மருமகள் சீரியலில் இருந்து விலகிய தாமரை!
Image Credit : our own

சின்ன மருமகள் சீரியலில் இருந்து விலகிய தாமரை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' தொடரில் கதாநாயகியின் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் தாமரைச் செல்வி நடித்து வந்தார். ஆனால், தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் அவருக்குப் பதிலாக வேறொரு நடிகை நடித்து வருகிறார். இதற்கிடையே, அதே தொடரில் நடித்த நடிகை ஸ்வேதாவின் கணவர் தொடர்பாக தாமரைச் செல்வி வெளியிட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னிடமிருந்து மூன்று பவுன் தங்கச் சங்கிலியை வாங்கி அடகு வைத்ததாகவும், அதனைத் திருப்பித் தர மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் அப்போது சின்னத்திரை வட்டாரத்தில் பேசுபொருளானது.

46
கணவருடன் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பு!
Image Credit : our own

கணவருடன் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பு!

தாமரைச் செல்வியின் முதல் திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடுகளால் முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. முதல் திருமணத்தின் மூலம் அவருக்கு ஒரு மகன் உள்ளார். அதன்பின்னர் பார்த்தசாரதி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்ட தாமரைச் செல்வி, அவருடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குறிப்பாக பிக் பாஸ் ஜோடிகள் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்களிலும் இருவரும் இணைந்து புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர்.

56
அரசியல், சோஷியல் மீடியா என பிஸியாக இருந்த தாமரை!
Image Credit : our own

அரசியல், சோஷியல் மீடியா என பிஸியாக இருந்த தாமரை!

சின்னத்திரை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து அரசியலிலும் தாமரைச் செல்வி ஆர்வம் காட்டினார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அவர், தேர்தல் காலத்தில் அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். மறுபுறம், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தனது கணவர் பார்த்தசாரதியுடன் இணைந்து விளம்பர நிகழ்ச்சிகள், பிராண்ட் புரமோஷன்கள், கொலாபரேஷன்கள் மற்றும் எக்ஸ்போ நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார். இப்படி இருவரும் ஒன்றாகப் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த நிலையில், தற்போது பார்த்தசாரதி வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

66
தாமரையைப் பிரிவதாக அறிவித்த பார்த்தசாரதி!
Image Credit : our own

தாமரையைப் பிரிவதாக அறிவித்த பார்த்தசாரதி!

பார்த்தசாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த முடிவு இருவரது பரஸ்பர சம்மதத்துடன் எடுக்கப்பட்டதாகவும், தங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் முடிவுகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, பார்த்தசாரதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கெனவே தாமரைச் செல்வியுடன் இணைந்து பதிவிடப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே உண்மையிலேயே பிரிவு ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பார்த்தசாரதி தனது பிரிவு தொடர்பான பதிவில் தாமரைச் செல்வியின் இன்ஸ்டாகிராம் கணக்கை டேக் செய்யவில்லை என்பதுதான். அதேபோன்று, தாமரைச் செல்வியும் இதுவரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரிவு குறித்து எந்தவிதமான அறிவிப்பையோ விளக்கத்தையோ வெளியிடவில்லை. மேலும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் பார்த்தசாரதியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

ஒருபுறம் பார்த்தசாரதி பிரிவை அறிவித்துள்ள நிலையில், மறுபுறம் தாமரைச் செல்வி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் உண்மையாகவே பிரிந்துவிட்டார்களா அல்லது இந்த அறிவிப்புக்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

View this post on Instagram

A post shared by Parthasarathy Kondal (@parthu_sarathi_official)

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : ரெட் டீமில் இருந்துகொண்டே ப்ளூ டீமுக்கு சப்போர்ட்.. ஜேசனின் டபுள் கேமால் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த பஞ்சாயத்து!
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் சர்வைவல் டாஸ்க்கில் செம ட்விஸ்ட்.. பலம் வாய்ந்த ரெட் டீமுக்கு தண்ணி காட்டும் ப்ளூ டீம்!
Recommended image3
Bigg Boss 10 : ரெட் டீமுக்கு ஆப்பு வைத்த ப்ளூ டீம்.. கிச்சனுக்கு பூட்டு! பிக்பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த யுத்தம்!
Related Stories
Recommended image1
மகனை காப்பாத்த தான் இங்க வந்தேன்! கதறிய அழுத தாமரை செல்வி..!
Recommended image2
சீரியலில் கொட்டும் பணம்! புதிய கார் வாங்கிய தாமரை செல்வி - எத்தனை லட்சம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved