சீரியலில் கொட்டும் பணம்! புதிய கார் வாங்கிய தாமரை செல்வி - எத்தனை லட்சம் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், பிரபலமான கூத்து கலைஞரான தாமரை செல்வி சீரியலில் நடித்து வருகிறார். தற்போது இவர் வாங்கியுள்ள புதிய கார் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தெருக்கூத்து கலைஞரான தாமரைச்செல்வியை பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய தாமரைச்செல்வி, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் தமிழரசி கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார் தாமரை. இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யாரும் சற்றும் எதிர்பாராத போட்டியாளராக இருந்த தாமரை செல்வி, தன்னுடைய வீட்டில் டிவி கூட கிடையாது. அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்தது கூட இல்லை என கூறினார். ஆனால் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவியை தனதாக்கி கொண்ட தாமரை, பிக்பாஸ் வீட்டில் உள்ள சொகுசை பார்த்து, நான் இப்படி ஒரு வீட்டில் இதுவரை வாழ்ந்தது இல்லை. பிக்பாஸ் சொன்னால் இங்கேயே இருந்து விடுவேன் என அப்பாவி தனமாக இவர் பேசியது பிக்பாஸ் ரசிகர்களை கவர்ந்தது. இவர் நடிக்கிறாரா? என்கிற ஒரு சந்தேகம் ரசிகர்கள் மனதில் இருந்தாலும்... இவரின் விளையாட்டை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்தது. இறுதி வரை வந்தாலும், டைட்டிலை தவற விட்டார்.
இதை தொடர்ந்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மேலும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டு நடன திறமையை வெளிப்படுத்தி வியக்க வைத்தார். விஜய் டிவியின் மெடீரியலாகவே மாறிவிட்ட தாமரை செல்வி, அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வருகிறார். அதன்படி, பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க துவங்கிய இவர், இதை தொடர்ந்து, தற்போது விஜய் டிவியில் நல்ல வரவேற்பை பெற்று வரும், சின்ன மருமகள் தொடரிலும் நடித்து வருகிறார். சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, கல்லா கட்டி வருகிறார்.
'விடாமுயற்சி'யை முடித்த கையேடு 'குட் பேட் அக்லீ' படத்தின் அடுத்த கட்ட பணியில் இறங்கிய அஜித்!
அடிக்கடி, தன்னுடைய குடும்பத்துடன் வெளி ஊருக்கு அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ள தாமரை செல்வி, இப்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து இந்த தகவல் வெளியாகி இருந்தாலும், தாமரை செல்வி இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிடவில்லை. இவர் வாங்கியுள்ள காரின் விலை சுமார் 7 முதல் 8 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
வாய்ப்பு கிடைத்தால், அடிமட்டத்தில் இருப்பவர் கூட... நல்ல நிலைமைக்கு வர முடியும் என்பதை தாமரை செல்வி நிரூபித்துள்ளார். அதே போல் தன்னுடைய முதல் திருமணத்தில் மூலம் பிறந்த மகன் தன்னிடம் வந்து விட வேண்டும், அவனுக்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என தாமரை தெரிவித்தார். இவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக தாமரையின் முதல் மகன் சிவாவும் இவருடனே வந்து சேர்ந்து விட்டார்.
ஹோட்டல் அறையில் இறந்த கிடந்த நடிகர்! 2 நாட்களாக உள்ளே நடந்தது என்ன?
தாமரை செல்வி, நடிப்பை தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் சமையல் வீடியோ உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தாமரை செல்வியின் பெற்றோர்... தங்குவதற்க்கு சரியான வீடு கூட இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உட்பட தாமரை செல்வியின் ரசிகர்கள் கிரவுண்ட் ஃபண்டு மூலம் வீடு கட்டி கொடுத்தனர். கடந்த ஆண்டு இந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நடந்த நிலையில், இதுகுறித்த புகைப்படத்தையும் தாமரை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.