'விடாமுயற்சி'யை முடித்த கையேடு 'குட் பேட் அக்லீ' படத்தின் அடுத்த கட்ட பணியில் இறங்கிய அஜித்!
தல அஜித், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள, 'குட் பேட் அக்லீ' படத்தின் அடுத்த கட்ட பணிகளில் கவனம் செலுத்தும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Ajith Kumar Pongal Release Movies
அஜித் நடிப்பில் இந்த ஆண்டு ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை என்றாலும், அடுத்தாண்டு துவக்கத்திலேயே ரசிகர்களுக்கு மிரட்டல் ஆன விருந்து வைக்க காத்திருக்கிறார் அஜித். அதை போல் அஜித்தின் இரண்டு படங்கள் 2025-ஆம் ஆண்டில் வெளியாக உள்ளது.
அதன்படி அஜித்தின் 62-வது திரைப்படமாக உருவாகி உள்ள விடாமுயற்சி திரைப்படம், 2025-ஆம் ஆண்டு பொங்கலை குறிவைத்து வெளியாகிறது. இந்த படத்தை 2010 ஆம் ஆண்டு வெளியான 'முன் தினம் பார்த்தேனே' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். இதற்கு முன் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான 'தடையரை தாக்க', 'மீகாமன்', 'தடம்', கலகத் தலைவன்', போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை தன்னுடைய ஆறாவது திரைப்படமாக இயக்கி உள்ளார்.
Magizh Thirumeni Movies
இயக்குனர் என்பதை தாண்டி டெடி, யாதும் ஊரே யாவரும் கேளிர், போன்ற திரைப்படங்களில் மகிழ் திருமேனி நடித்துள்ளார். அதேபோல் காக்க காக்க திரைப்படத்தில் கமிஷனர் வேடத்தில் நடித்தவருக்கு டப்பிங் செய்துள்ள மகிழ் திருமேனி, இமைக்கா நொடிகள், திரைப்படத்தில் அனுராக் காஷ்யப் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார்.
அஜித்தை வைத்து இவர் இயக்கியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நிறைவடையாமல் இருந்ததாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், கடந்த வாரம் தாய்லாந்தில் மீதமான பாடல் காட்சியின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டது. இது குறித்த சில புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டு இருந்த நிலையில் அவை படு வைரலாக பார்க்கப்பட்டன. 'விடாமுயற்சி' திரைப்படம் 1997 ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜோனாதன் மாஸ்க்டோவ் என்பவர் இயக்கத்தில் வெளியான பிரேக் டவுன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாக்கியுள்ளது. ஒரே இரவில் நடக்கும் கிரைம் திரில்லர் திரைப்படமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இது பிக் பாஸ் வீடா இல்ல சினிமா தியேட்டரா? அமரனை தொடர்ந்து ஒளிபரப்பப்பட்ட புதுப்படம்
Vidamuyarchi Movie Last Schedule photos
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் சர்ஜா, ஆரவ், ரெஜினா கசண்டா, ரம்யா சுப்ரமணியன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகளை இப்போதே தயாரிப்பு நிறுவனமான லைக்கா துவங்கிவிட்டது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான சவுடீக்கா நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், என் பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். வேதாளம் படத்திற்கு பின்னர் அஜித்தின் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.
Good Bad Ugly movie
இந்த படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்துள்ள அஜித் 'குட் பேட் அக்லீ' படத்தின் அடுத்த கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் டப்பிங் பணிகளை அஜித் மேற்கொள்ளும் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
வரதட்சணை கொடுத்து ரம்யா பாண்டியனை திருமணம் செய்துகொண்ட லவல் தவான் - காரணம் என்ன?
Trisha Pair With Ajith
பொங்கலுக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரூ. 225 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை, மைத்ரின் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் த்ரிஷா தான் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே ஸ்டைலிஷ் ஆன அஜித்தை மட்டுமே ரசிகர்கள் பார்த்து வந்த நிலையில், இந்த படத்தில் கலக்கலான கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். குறிப்பாக இவருடைய ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது, இவர் கையில் இருந்த டாட்டூஸ், கழுத்தில் போட்டு இருந்த நகைகள், கலர் கலரான உடைகள் மற்றும் அவர் முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் போன்றவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியது.
Ajith Good Bad Ugly Dubbing Work
மேலும் இந்த படத்தில் பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேலு குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது இவர் இயக்கியுள்ள குட் பேட் அக்லீ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு எகிறி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது டப்பிங் பணிகளில் அஜித் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இவருடைய லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.