MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அம்பலமான ஆதி குணசேகரனின் சதித் திட்டம்.. பூஜையை தடுத்து நிறுத்திய விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

அம்பலமான ஆதி குணசேகரனின் சதித் திட்டம்.. பூஜையை தடுத்து நிறுத்திய விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு எதிராக ஆதி குணசேகரன் பூஜை நடத்தும் விஷயத்தை சாமியாடி அனைவர் முன்னிலையிலும் போட்டுடைத்து உள்ளார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 17 2026, 09:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனும், அவரது தம்பிகளும் ஜனனி வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு பூஜை ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த பூஜையில் ஜனனி மற்றும் சக்தி இருவரும் கலந்துகொள்ள வேண்டும் என விசாலாட்சி திட்டவட்டமாக கூறினாலும் அவர்களை போனில் அழைக்க முடியாததால், வேறுவழியின்றி அந்த பூஜையை செய்து முடிக்க ஒத்துக் கொள்கிறார்கள். அந்த பூஜையே ஜனனியை தீர்த்துக்கட்ட தான் நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்தது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

25
ஜனனிக்கு எதிரான பூஜை
Image Credit : youtube/suntv

ஜனனிக்கு எதிரான பூஜை

இந்த பூஜைக்காக ஜனனி சம்பந்தப்பட்ட பொருள் ஒன்று தேவைப்படுவதால், அதை வீட்டில் உள்ள பெண்களுக்கு தெரியாமல் எடுத்து வருமாறு அறிவுக்கரசியிடம் கதிர் கூற, அவரும் இவர்களின் பிளானுக்கு ஓகே சொல்லி ஜனனி ரூமுக்குள் சென்று தேடிக் கொண்டிருக்கும்போது தர்ஷினி அங்கு வருகிறார். அப்போது ரூமுக்குள் போன் சார்ஜ் போடுவது போல் நடித்து எஸ்கேப் ஆகிறார். பின்னர் தர்ஷினி கீழே சென்ற பின்னர் ஜனனியின் ஆடை ஒன்றை எடுத்துக் கொடுக்கிறார் அறிவு. அந்த ஆடையை தீயிட்டு கொளுத்த வேண்டும் என நம்பூதிரி சொல்லி இருந்ததால், அதை முதலில் செய்கிறார்கள்.

Related Articles

Related image1
தேவசகாயத்திற்கு விபூதியடித்துவிட்டு எஸ்கேப் ஆகும் ஜனனி.. தொக்கா மாட்டும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது
Related image2
கனிகா அவுட்! எதிர்நீச்சல் 2 சீரியலில் இனி ஈஸ்வரியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
35
பூஜை ஆரம்பம்
Image Credit : youtube/suntv

பூஜை ஆரம்பம்

பின்னர் வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்க, அனைவரும் அதில் கலந்துகொள்கிறார். அந்த நம்பூதிரி பூஜையை ஆரம்பிக்கும் போது அங்கு விசாலாட்சியின் அண்ணன் சாமியாடி வருகிறார். அவரும் இந்த பூஜையில் கலந்துகொள்கிறார். பூஜை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே சாமியாடிக்கு சாமி வருகிறது. அவர் இது தப்பான பூஜை, இந்த பூஜை நடந்தா உன் குலத்துக்கே ஆபத்து என சொல்லி எச்சரிக்கிறார். அதுமட்டுமின்றி இந்த பூஜை இந்த வீட்டில் நடக்கக் கூடாது என சொல்லி தடுத்து நிறுத்துகிறார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆதி குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார்.

45
தடுத்து நிறுத்தும் சாமியாடி
Image Credit : youtube/suntv

தடுத்து நிறுத்தும் சாமியாடி

அப்போது அங்கிருந்த கதிர், இந்த சாமியாடி சும்மா எதையாச்சும் சொல்லிக்கிட்டு இருப்பாரு, நம்ம இந்த பூஜையை ஆரம்பிக்கலாம் என சொல்ல, அதை தடுத்து நிறுத்தும் விசாலாட்சி, வாய் இருக்குனு எது வேணாலும் பேசக் கூடாது. பேசாம அடங்கி நின்றதால் தான் இதுவரைக்கும் வந்து நிக்குது. இந்த பூஜை நடத்த வேண்டாம் என ஒரே போடாக போடுகிறார் விசாலாட்சி. இதைக்கேட்ட ஆதி குணசேகரன் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். சாமியாடியால் அந்த பூஜையை நிறுத்த சொல்கிறார்கள் பெண்கள். ஆனால் அதை ஆதி குணசேகரனும் அவரது தம்பிகளும் ஏற்க மறுக்கிறார்கள்.

55
எஸ்கேப் ஆனாரா ஜனனி?
Image Credit : youtube/suntv

எஸ்கேப் ஆனாரா ஜனனி?

மறுபுறம் ஜனனியின் காரை மடக்கிப்பிடிக்க காத்திருந்த தேவசகாயம், அவர்களின் காருக்காக காத்திருக்க, அவர்களோ வரும் வழியில் கார் பஞ்சர் ஆனதால், வேறு ஒரு காரில் கிளம்பி கீழே செல்கிறார்கள். அவர்கள் சென்ற காரை தேவசகாயத்தில் கார் டிரைவர் தடுத்து நிறுத்துகிறார். இதன்பின் என்ன ஆனது? தேவசகாயத்திடம் சிக்கினாரா ஜனனி? ஆதி குணசேகரன் ஏற்பாடு செய்த பூஜை என்ன ஆனது? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.
Latest Videos
Recommended Stories
Recommended image1
சிந்தாமணியின் பிளானை கேட்டு ஆடிப்போன விஜயா... மனோஜை டேமேஜ் பண்ணிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
தாலியை கழட்டி கொடுத்த சந்திரகலா! நிலைகுலைந்து போன சிவனாண்டி! கார்த்திகை தீபம் சீரியலில் உச்சக்கட்ட அதிர்ச்சி
Recommended image3
மாமனார் அட்வைஸ்; அப்பா போட்ட ரூல்ஸ்; ரூ.10 லட்சத்துக்கு லஞ்சமா? செந்திலின் திட்டம் என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Related Stories
Recommended image1
தேவசகாயத்திற்கு விபூதியடித்துவிட்டு எஸ்கேப் ஆகும் ஜனனி.. தொக்கா மாட்டும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
கனிகா அவுட்! எதிர்நீச்சல் 2 சீரியலில் இனி ஈஸ்வரியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved