- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தேவசகாயத்திற்கு விபூதியடித்துவிட்டு எஸ்கேப் ஆகும் ஜனனி.. தொக்கா மாட்டும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது
தேவசகாயத்திற்கு விபூதியடித்துவிட்டு எஸ்கேப் ஆகும் ஜனனி.. தொக்கா மாட்டும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை கொடைக்கானலில் வைத்து ரவுண்டுகட்டிய தேவசகாயம் அவரை தீர்த்துக்கட்ட பிளான் போட்டிருந்தார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கொடைக்கானல் போன கேப்பில் அவருக்கு எதிராக வீட்டில் ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் ஆதி குணசேகரன். அந்த பூஜையில் சக்தி மற்றும் ஜனனி இருவரும் இருந்தால் தான் நாங்கள் பங்கேற்போம் என விசாலாட்சி, ரேணுகா, நந்தினி ஆகியோர் ஒற்றைக்காலில் நி்ற்கிறார்கள். மறுபுறம் அறிவுக்கரசியும் ஆதி குணசேகரனிடம் தன்னுடைய தங்கச்சிக்கு ஒரு நியாயம் கிடைக்காமல் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என கூறிவிட்டு இங்கேயே டேரா போட்டு இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஊருக்கு கிளம்பும் சக்தி - ஜனனி
கொடைக்கானலில் உள்ள சக்தி மற்றும் ஜனனி இருவரும் தாங்கள் தங்கி இருப்பது தேவசகாயத்தில் கெஸ்ட் ஹவுஸ் என்பது தெரியாமல் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தளங்களை சுற்றிப் பார்த்து வரும் நேரத்தில் அவர்களுக்கு நந்தினி போன் போட்டு, வீட்டில் ஆதி குணசேகரன் பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கும் விஷயத்தை சொல்கிறார். அதில் கலந்துகொள்ள அவர்கள் இருவரையும் உடனே கிளம்பி வரச் சொல்கிறார். அப்போது சக்தி கிளம்பலாம் என சொல்ல, ஜனனி, கொஞ்ச நேரம் உட்கார்த்துவிட்டு செல்லலாம் என கூறுகிறார்.
தேவசகாயத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி
பின்னர் இருவரும் எந்த முடிவை எடுக்கலாம் என டாஸ் போட்டு பார்க்க, கிளம்பிச் செல்லலாம் என சக்திக்கு சாதகமாக டாஸ் அமைகிறது. பின்னர் காரில் இருவரும் கிளம்புகிறார்கள். அவர்களை நடு வழியிலேயே மடக்கிப் பிடிக்க, தேவசகாயம் காத்திருக்கிறார். அவர்கள் வந்த கார் கலரை வைத்து அவர்களை பிடிக்க பிளான் போடுகிறார். ஆனால் ஜனனியும், சக்தியும் வந்த கார் பாதியிலேயே பஞ்சர் ஆகிறது. அதனால் வேறு ஒரு காரில் கிளம்பிச் செல்கிறார்கள். அவர்கள் கார் மாறி வரும் விஷயம் தெரியாமல் தேவசகாயம், வெகுநேரம் காத்திருக்கிறார். ஆனால் அவர்கள் ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்.
அறிவுக்கரசியிடம் சத்தியம் செய்த கதிர்
மறுபுறம் வீட்டில் ஆதி குணசேகரனிடம் பிரச்சனை பண்ணிய அறிவுக்கரசியை வீட்டை விட்டு வெளிய போ என துரத்திவிட்ட கதிர், பின்னர் அவரிடம் வந்து சமாதானமாக பேசுகிறார். நான் அப்படி பேசுனாலும், உன்னை அப்படியே ஒதுக்கிவிட மாட்டேன். என்னை நம்பு என சத்தியம் பண்ணுகிறார் கதிர். பின்னர் சமாதானம் ஆகி வீட்டுக்குள் செல்கிறார் அறிவுக்கரசி. இதைப்பார்த்து ஷாக் ஆன நந்தினி, நேத்து அவளைப்போட்டு அந்த ஆத்து ஆத்துனாங்க, இன்னைக்கு ரெண்டு பேரும் ஒன்னா நின்னுக்கிட்டு இருக்காங்க. இதுல ஏதோ தப்பா இருக்கே என சந்தேகப்படுகிறார்.
சிக்கினாரா அறிவுக்கரசி?
இதையடுத்து பெண்கள் எல்லாம் கிச்சனில் இருக்கும் நேரம் பார்த்து மாடிக்கு செல்லும் அறிவுக்கரசி, ஜனனியின் ரூமில் ஏதேனும் ஆதாரம் சிக்குகிறதா என்பதை தேடிப் பார்க்கிறார். அவருக்காக கதிர் மற்றும் ஞானம் காவலுக்கு நிற்கிறார்கள். அந்த நேரம் பார்த்து தர்ஷினி மற்றும் பார்கவி இருவரும் மாடிக்கு வருகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது. இதையடுத்து தர்ஷினி, அறிவுக்கரசியை மடக்கிப்பிடித்தாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

