MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • “நான் ஒரு நாயுடு பையன்” பட விழாவில் சாதி பெருமை பேசிய பார்த்திபன்... வெடிக்கும் சர்ச்சை!

“நான் ஒரு நாயுடு பையன்” பட விழாவில் சாதி பெருமை பேசிய பார்த்திபன்... வெடிக்கும் சர்ச்சை!

தெலுங்கு படமான 'உஸ்தாத் பகத் சிங்' புரமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் பார்த்திபன் தனது சாதியைப் பற்றி பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 17 2026, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Parthiban Caste Controversy
Image Credit : Today Stars

Parthiban Caste Controversy

நடிகர் பார்த்திபன், நடித்த ஒரு தெலுங்கு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் தனது சாதியைச் சொல்லி தன்னை அறிமுகப்படுத்தியதால், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் 'உஸ்தாத் பகத் சிங்' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் பார்த்திபன் பேசியதுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவர் தன்னை ஒரு 'நாயுடு' என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார்.

தமிழ்நாட்டில் இருக்கும்போது திராவிட அடையாளம் பேசி, சாதிக்கு எதிராகப் பேசுபவர்கள், தமிழ்நாடு விட்டு வெளியே சென்றதும் சாதிப் பெருமை பேசுவது இரட்டை வேடம் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பார்த்திபன் பேசியது என்ன?
Image Credit : Google

பார்த்திபன் பேசியது என்ன?

மேடையில் பேச அழைக்கப்பட்டபோது, "முதலில் என்னைப்பற்றி ஒரு சின்ன அறிமுகம்" என்று பார்த்திபன் தொடங்கினார். "நான் பார்த்திபன். ராதாகிருஷ்ணன் பார்த்திபன். ஒரு நாயுடு பையன். ஆமாம், ஒரு நாயுடு பையன்தான். ஆனால், சென்னையில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு தெரியாது. தமிழ்தான் எனக்கு இயல்பாக வரும் மொழி. ஆனால், அடுத்த முறை நாம் சந்திக்கும்போது, அது இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் நடக்கும், அப்போது நான் முழுமையாக தெலுங்கில் பேசுவேன் என்று இந்த மூர்த்தி உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மூர்த்திதான் எனது உண்மையான பெயர்," என்று பார்த்திபன் பேசினார். இதில் அவர் தனது சாதியைக் குறிப்பிட்டதுதான் சர்ச்சைக்குக் காரணம்.

34
விளாசும் நெட்டிசன்கள்
Image Credit : Radhakrishnan Parthiban, X

விளாசும் நெட்டிசன்கள்

இது ஒரு சந்தர்ப்பவாத நிலைப்பாடு என்று, தமிழ்நாட்டில் வேறு ஒரு மேடையில் பார்த்திபன் சாதிக்கு எதிராகப் பேசியதைச் சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய இந்த பேச்சின்போது, தமிழர்களைப் பற்றி மரியாதைக் குறைவாகப் பேசியதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. "இந்த இரட்டை வேடம்தான் நிஜம் என்றால், நாம் என்ன மாதிரியான முற்போக்கு சிந்தனையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்?" என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். பார்த்திபன் தனது சாதியைப் பற்றி பேசும் வீடியோ பகுதி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

I am a Telugu person, from Naidu caste. This is my Real Identity, but I’m born & brought up in Chennai. I don’t know Telugu much. In the Success event, I will speak in Telugu & make all happy

— #Parthiban at #UstaadBhagatSingh Pre release event 👀 pic.twitter.com/dLgsKdU6yZ

— VCD (@VCDtweets) March 17, 2026

44
சர்ச்சை
Image Credit : X, Trend Talks

சர்ச்சை

சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாகப் பேசியதற்காகவும் பார்த்திபன் செய்திகளில் இடம்பிடித்திருந்தார். நடிகர் விஜய்யுடன் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்துகொண்டதைச் சுட்டிக்காட்டி பார்த்திபன் கருத்து தெரிவித்திருந்தார். "குந்தவை (பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம்) வீட்டில் இருப்பதுதான் நல்லது. வெளியே வந்தால் பல பிரச்சனைகள் வரும்" என்று ஒரு விருது வழங்கும் விழாவில் பார்த்திபன் பேசியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... அவருக்கு பதில் இவரா?
Recommended image2
90களில் டாப் ஹீரோயின்களாக கொடிகட்டிப் பறந்தவர்கள்... திடீரென சினிமாவை விட்டு காணாமல் போன டாப் 5 நடிகைகள் லிஸ்ட் இதோ
Recommended image3
Indian 3 : வெயிட்டிங் லிஸ்டில் இருந்த இந்தியன் 3... மீண்டும் தூசிதட்டி எடுத்த ஷங்கர் - எப்போ ரிலீஸ் தெரியுமா?
Related Stories
Recommended image1
பார்த்திபன் இப்படி சொல்லிட்டாரே... முட்டாள்தனமான பேச்சு என திரிஷா பதிலடி
Recommended image2
மூன்றாவது மனுஷியோட மூன்றாம் தர ட்வீட்... நான் மன்னிப்பு கேட்டிருக்கக் கூடாது - த்ரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved