MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பார்த்திபன் இப்படி சொல்லிட்டாரே... முட்டாள்தனமான பேச்சு என திரிஷா பதிலடி

பார்த்திபன் இப்படி சொல்லிட்டாரே... முட்டாள்தனமான பேச்சு என திரிஷா பதிலடி

ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு நடிகை திரிஷா பதிலடி கொடுத்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 09 2026, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Trisha Befitting Reply to Parthiban
Image Credit : X

Trisha Befitting Reply to Parthiban

ஒரு தமிழ் ஊடகத்தின் திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகை திரிஷாவை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் பார்த்திபன் பேசியது செய்தியாகவும், சர்ச்சையாகவும் மாறியது. தற்போது, இதற்கு திரிஷா பதிலடி கொடுத்துள்ளார். பார்த்திபனின் பெயரையோ அல்லது அவர் பேசிய மேடையின் பெயரையோ குறிப்பிடவில்லை என்றாலும், இந்த சம்பவம் பற்றி அறிந்தவர்களுக்கு புரியும் வகையில் திரிஷாவின் பதிவு அமைந்துள்ளது. சமூக வலைதளமான எக்ஸ் மூலம் திரிஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் போட்டுள்ள பதிவு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

24
சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்
Image Credit : Asianet News

சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்

மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, தொகுப்பாளர்கள் ஒவ்வொரு நட்சத்திரங்களைப் பற்றியும், அவர்களின் கதாபாத்திரங்கள் குறித்தும் பார்த்திபனிடம் கருத்து கேட்டனர். அப்போது, 'பொன்னியின் செல்வன்' படத்தில் திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதே சமயம், பின்னணியில் உள்ள திரையில் திரிஷாவின் படமும் காட்டப்பட்டது. இதற்கு பார்த்திபன் அளித்த பதில்தான் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Related Articles

Related image1
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Related image2
ரகசிய சிநேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவால் வெடித்த சர்ச்சை
34
பார்த்திபன் சொன்னதென்ன?
Image Credit : Google

பார்த்திபன் சொன்னதென்ன?

"குந்தவையை வீட்டிற்குள் இருக்கச் சொல்வது நல்லது. அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் நல்லது. அது (வெளியே வருவது) பல பிரச்சனைகளை உருவாக்குகிறது" என்று பார்த்திபன் கூறினார். சமீபத்தில் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக கலந்துகொண்டனர். இதை குறிப்பிடும் வகையிலேயே பார்த்திபனின் பேச்சு இருந்ததாக விமர்சனம் எழுந்தது. ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, விஜய்யின் மனைவி சங்கீதா, தளபதிக்கு எதிராக விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்த பிறகு, விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக திருமண வரவேற்பில் கலந்துகொண்டனர். சங்கீதா மனுவில் குறிப்பிடும் நடிகை திரிஷாதான் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.

Seriously. Is this right ? How’s this man allowed to get away by this and what rights have the organisers got to exhibit this on stage ? @khushsundar@realradikaa@sandhyaravishan@TheBluePen25@KasthuriShankarpic.twitter.com/0OjB9sTkj0

— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) March 8, 2026

44
திரிஷாவின் பதிலடி
Image Credit : X

திரிஷாவின் பதிலடி

பார்த்திபனின் கருத்துக்கு திரிஷா பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளதாவது : "சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஒரு நபரின் உதவியாளர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே எனது பெயரும், படமும் பயன்படுத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் கூறினார்கள். மைக்கில் பேசுவதால் ஒரு கருத்து புத்திசாலித்தனமாகவோ, சுவாரஸ்யமாகவோ ஆகிவிடாது. மாறாக, அது முட்டாள்தனத்தை உரக்கச் சொல்வது போலாகும். பண்பற்ற வார்த்தைகள் யாரை நோக்கியதோ, அவரை விட, அதைச் சொல்பவரைப் பற்றித்தான் அதிகம் வெளிப்படுத்துகின்றன" என்று திரிஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பார்த்திபன் தனது இந்த பேச்சுக்காக திரிஷாவிடம் வருத்தம் தெரிவித்து ஆடியோ வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
மனோஜின் முட்டாள்தனமான பிளான்... சல்லி சல்லியாய் உடைக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
தலைவா பட ‘டைம் டூ லீடு’ டேக் லைன் நான் போடல... அது அவரோட ஐடியா - ஏ.எல்.விஜய் பகிர்ந்த சீக்ரெட்
Recommended image3
அடேங்கப்பா... ஒரு நாளைக்கு 15 கோடி சம்பளமா? காஸ்ட்லி வில்லனாக உருவெடுத்த கமல்ஹாசன்
Related Stories
Recommended image1
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Recommended image2
ரகசிய சிநேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவால் வெடித்த சர்ச்சை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved