- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : ரோகிணியை மீண்டும் ஏமாற்றும் மனோஜ்... சத்யா-ரேகாவை பிரிக்க சிந்தாமணி போட்ட மாஸ்டர் பிளான்!
Siragadikka Aasai : ரோகிணியை மீண்டும் ஏமாற்றும் மனோஜ்... சத்யா-ரேகாவை பிரிக்க சிந்தாமணி போட்ட மாஸ்டர் பிளான்!
Siragadikka Aasai Serial 05 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் ஷோரூமிற்கு செல்லும் ரோகிணி அவருக்கு பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜ் கடைக்கு ரோகிணி வருகிறார். ஏற்கனவே ரோகிணியிடம் இருந்து பெற்றிருந்த 5 லட்ச ரூபாயில் இன்னும் பணம் இருக்கும் என கணித்த ஜோசியக்காரர், அதிலிருந்து சிறிது தொகையை வாங்கி தொழிலாளர்களின் நிலுவை சம்பளத்தை வழங்குமாறு மனோஜிடம் ஆலோசனை கூறுகிறார். இரண்டு மாதங்களாக ஜீவா மற்றும் சந்தோஷுக்கு சம்பளம் வழங்கப்படாததால், தயக்கத்துடன் மனோஜ், ரோகிணியிடம் 50 ஆயிரம் ரூபாய் கேட்கிறார். மனோஜை முழுமையாக நம்பும் ரோகிணியும் எந்த சந்தேகமும் இல்லாமல் பணம் கொடுக்க சம்மதிக்கிறார். இதனால் ரோகிணியின் நம்பிக்கையை மனோஜ் தொடர்ந்து பயன்படுத்தி வருவது தெளிவாகிறது.
சிந்தாமணியின் டிராமா சக்சஸ்
மறுபுறம், சத்யா மற்றும் ரேகா சிந்தாமணியின் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு சிந்தாமணியும் அவரது கணவரும் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பது போல நாடகமாடுகின்றனர். அதை பார்த்து ரேகா உணர்ச்சிவசப்படுகிறார். பின்னர், "இனி உங்களைப் பிரிக்க நினைப்பதில்லை, சந்தோஷமாக வாழுங்கள்" என்று கூறி சிந்தாமணி குடும்பத்தினர் திடீரென மனம் மாறியவர்கள் போல நடிக்கிறார்கள். ஆனால் இதற்குப் பின்னால் வேறு திட்டம் இருப்பது தெரியவருகிறது. ரேகாவை தனது தந்தையுடன் சில நாட்கள் வீட்டிலேயே தங்க வைக்க வேண்டும் என்பதே அவர்களின் உண்மையான நோக்கம்.
பிரியும் சத்யா - ரேகா
சூழ்நிலையை புரிந்துகொண்ட சத்யாவும் பெருந்தன்மையுடன் ரேகா தந்தையுடன் இருக்க சம்மதித்து அங்கிருந்து கிளம்புகிறார். இதன் மூலம் சிந்தாமணியின் திட்டம் தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையில், முத்து புதிய வீட்டின் பூமி பூஜைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார். முதல் செங்கல்லை விஜயாவே எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும் என மீனா விருப்பம் தெரிவிக்கிறார். ஆனால் விஜயா கீழே இருப்பதால் அவரை எப்படி அழைத்து வருவது என்ற குழப்பம் ஏற்படுகிறது. அப்போது ஸ்ருதி ஒரு யோசனையுடன் களமிறங்குகிறார்.
Siragadikka Aasai : சவால்விட்ட ரோகிணிக்கு சவுக்கடி கொடுத்த விஜயா... மனோஜை மிரட்டிய கனகாவின் அம்மா!
விஜயாவை ஏமாற்றிய ஸ்ருதி
முந்தைய வீடியோ சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றதாகவும், இந்த பூமி பூஜை வீடியோவும் வைரலாகும் என்றும் கூறி விஜயாவை சம்மதிக்க வைக்கிறார். அதை நம்பிய விஜயாவும் மாடிக்குச் சென்று, "இந்த வீட்டுக்கான முதல் செங்கல்லை நான்தான் வைப்பேன்" என்று உரிமையுடன் முன்வருகிறார். விஜயாவின் இந்த திடீர் முடிவால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். விஜயாவின் இந்த செயலால் குடும்பத்தில் புதிய பிரச்சனை உருவாகுமா? சிந்தாமணியின் திட்டம் தொடர்ந்து வெற்றி பெறுமா? என்பதற்கான பதில் அடுத்த எபிசோடில் தெரியவரும்.
Siragadikka Aasai : ஆபரேஷன் தியேட்டரில் மீனா... விஜயாவிடம் உண்மையை போட்டுடைத்த ரோகிணி!

