MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!

Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!

Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி எப்போ தொடங்குகிறது என்பது குறித்த அறிவிப்பை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 24 2026, 09:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Tamil Season 10
Image Credit : X

Bigg Boss Tamil Season 10

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இதன் காரணமாகவே இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் செம மவுசு இருந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் வெற்றிகரமாக 9 சீசன்கள் நிறைவடைந்து தற்போது 10வது சீசனுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி தான், இந்த 10வது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதமே வெளியானது.

Bigg Boss Common Man : கரிஷ்மாவுக்கு ரெட் ஸ்டார்... கில்லி போல் சொல்லி அடித்த முனியம்மா; மெர்சலான ஆரி..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பிக் பாஸ் காமன்மேன்
Image Credit : youtube

பிக் பாஸ் காமன்மேன்

ஆனால் இந்த முறை புதிய முயற்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்து அவர்களை போட்டியாளராக களமிறக்க திட்டமிட்டு, அதற்காக பிக் பாஸ் காமன்மேன் என்கிற ஆடிஷன் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இதில் கலந்துகொள்ள ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் இருந்து 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு விதமான டாஸ்குகளை கொடுத்து, அதில் இருந்து இறுதியாக தேர்வாகவும், ஒருவரையோ அல்லது இருவரையோ பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப திட்டமிட்டு உள்ளனர்.

Bigg Boss Common Man : ஆட்டோ டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்... பிக் பாஸ் காமன்மேன் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்

Related Articles

Related image1
Bigg Boss Common Man : ச்சீ... இதெல்லாம் ஒரு டாஸ்கா? முதல் எபிசோடிலேயே சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் காமன்மேன்..!
Related image2
Bigg Boss சீசன் 10-ல் காமன்மேனுக்கு விஜய் சேதுபதி கொடுத்த கோல்டன் சான்ஸ் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
34
பிக் பாஸ் சீசன் 10 எப்போ ஆரம்பம்?
Image Credit : youtube

பிக் பாஸ் சீசன் 10 எப்போ ஆரம்பம்?

இந்த பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியை மாயா தொகுத்து வழங்குகிறார். ஆரி, ஓவ்யா, ராஜு ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்நிகழ்ச்சி கடந்த வாரத்தில் இருந்து ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் லாஞ்ச் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 06ந் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இனி தினந்தோறும் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது.

Bigg Boss Common Man : நைட்டியால் வெடித்த சர்ச்சை... பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் நடுவர்களை அலறவிட்ட பெண்...!

44
முதன்முறை
Image Credit : Jio Hot Star

முதன்முறை

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தான் தொடங்கப்படும். அக்டோபரில் தொடங்கினால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வரை நடைபெறும். ஆனால் இம்முறை முதன்முறையாக தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் பொதுமக்களில் இருந்து ஒருவரும் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதால் இந்த சீசன் செம விறுவிறுப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது.

Bigg Boss Common Man : காமன்மேன் நிகழ்ச்சியில் செம ட்விஸ்ட்... பிக் பாஸே பார்க்காத பெண்ணுக்கு அடித்தது ஜாக்பாட்..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Common Man : கரிஷ்மாவுக்கு ரெட் ஸ்டார்... கில்லி போல் சொல்லி அடித்த முனியம்மா; மெர்சலான ஆரி..!
Recommended image2
Sun TV : படம் முதல் சீரியல் வரை... இனி எல்லாமே ஷார்ட்ஸ் தான்! ஜென் ஸி-யை கவர சன் டிவி-யின் புதிய அதிரடி
Related Stories
Recommended image1
Bigg Boss Common Man : ச்சீ... இதெல்லாம் ஒரு டாஸ்கா? முதல் எபிசோடிலேயே சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் காமன்மேன்..!
Recommended image2
Bigg Boss சீசன் 10-ல் காமன்மேனுக்கு விஜய் சேதுபதி கொடுத்த கோல்டன் சான்ஸ் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved