MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Bigg Boss Common Man : காமன்மேன் நிகழ்ச்சியில் செம ட்விஸ்ட்... பிக் பாஸே பார்க்காத பெண்ணுக்கு அடித்தது ஜாக்பாட்..!

Bigg Boss Common Man : காமன்மேன் நிகழ்ச்சியில் செம ட்விஸ்ட்... பிக் பாஸே பார்க்காத பெண்ணுக்கு அடித்தது ஜாக்பாட்..!

Bigg Boss Common Man Today Episode : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் ஏராளமான போட்டியாளர்களுக்கு நடந்த ஆடிஷனில் ஒரே ஒரு பெண் மட்டுமே நேரடியாக செலக்ட் ஆகி உள்ளார்.

3 Min read
Author : Ganesh A
Published : Aug 19 2026, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Common Man Today Episode
Image Credit : jiohotstar

Bigg Boss Common Man Today Episode

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை போட்டியாளர்களாக இருந்தவர்களுக்கு மாறாக, இந்த முறை காமன் மேன் ஆடிஷன் மூலம் பலரும் வாய்ப்புக்காக களமிறங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்று வெளியான நான்காவது எபிசோடில் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஜட்ஜ்கள் முன்பு தங்களது திறமையை நிரூபிக்க முயன்றனர். இதில் சிலர் நிராகரிக்கப்பட்ட நிலையில், சிலர் ஹோல்டில் வைக்கப்பட்டதுடன், ஒருவருக்கு மட்டும் செலக்ஷன் கிடைத்தது.

முதலில் மலேசியாவில் இருந்து பர்வீன் பானு என்ற போட்டியாளர் ஆடிஷனுக்கு வந்தார். அவரது பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பர்வீன் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். தன்னை டெப்யூட் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், ஊடகத் துறையில் சாதிக்க வேண்டும் என்றும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகளைத் தாண்டி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வாய்ப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், அவரது பேச்சு ஜட்ஜ்களை பெரிதாக கவராததால் அவர் நிராகரிக்கப்பட்டார்.

Bigg Boss Common Man : ச்சீ... இதெல்லாம் ஒரு டாஸ்கா? முதல் எபிசோடிலேயே சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் காமன்மேன்..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஹோல்டில் வைக்கப்பட்ட போட்டியாளர்கள்
Image Credit : jiohotstar

ஹோல்டில் வைக்கப்பட்ட போட்டியாளர்கள்

அடுத்ததாக வெங்கடேஷ் என்ற சுமார் 40 வயது மதிக்கத்தக்க திருமணமான நபர் காமன் மேன் போட்டியாளராக வந்தார். தனது வாழ்க்கையில் இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பதாக கூறிய அவர், திருமணமே தனது மிகப்பெரிய சாதனை என்று கூறி ஜட்ஜ்களை ஆச்சரியப்படுத்தினார். மனைவியைப் பற்றிய கேள்விகளுக்கும் நகைச்சுவையாக பதிலளித்த அவர், கோபம் வந்தால் அழத் தொடங்கிவிடுவேன் என்றும் வெளிப்படையாகப் பகிர்ந்தார்.

அவருக்கு வழங்கப்பட்ட சிறிய டாஸ்க்கில், குறிப்பிட்ட நேரத்திற்குள் பல பேப்பர்களில் இருந்து பிக் பாஸ் தொடர்பான டயலாக்கள் இடம்பெற்றிருந்த பேப்பர்களை தேர்வு செய்ய வேண்டும். அதில் சிலவற்றை சரியாக எடுத்த அவர், தன்னுடைய உயரம் குறித்த கிண்டல்களை உடைத்து தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்ற ஆசையையும் தெரிவித்தார். இதையடுத்து அவர் ஹோல்டில் வைக்கப்பட்டார்.

அதன் பின்னர் ஹைட் கார்த்தி மற்றும் யோயோ ராஜேஷ் ஆகிய இருவர் ஆடிஷனில் பங்கேற்றனர். சென்னையைச் சேர்ந்த ஹைட் கார்த்தி இசை கற்றுக்கொண்டு வருவதாகவும், யோயோ ராஜேஷ் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கேம்ஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சிகளில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தனர். இருவருக்கும் இடையிலான உரையாடலில் ஹைட் கார்த்தி சிறப்பாக செயல்பட்டார். குறைவாக பேசிய யோயோ ராஜேஷ் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஹைட் கார்த்தி ஹோல்டில் வைக்கப்பட்டார்.

Related Articles

Related image1
Bigg Boss Common Man : ச்சீ... இதெல்லாம் ஒரு டாஸ்கா? முதல் எபிசோடிலேயே சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் காமன்மேன்..!
Related image2
Bigg Boss Common Man : ஒருத்தர் கூட ரிஜெக்ட் ஆகல... பிக் பாஸ் காமன்மேன் இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட்..!
34
ரிஜெக்ட் ஆனது யார்?
Image Credit : jiohotstar

ரிஜெக்ட் ஆனது யார்?

இதைத்தொடர்ந்து கரிஷ்மா என்ற போட்டியாளர் களமிறங்கினார். கல்லூரியில் சேராமல், தொழில்முனைவோராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறிய அவர், தனது முக்கிய திறமை நன்றாகப் பேசுவதுதான் என தெரிவித்தார். ஆனால், தன்னிடம் ஏற்கனவே பல விஷயங்கள் இருப்பதால் இந்த வாய்ப்பு ஏன் தேவை என ஜட்ஜ்கள் கேள்வி எழுப்பினர். குடும்ப சூழல் மற்றும் தாய்க்காக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை கரிஷ்மா விளக்கினார்.

அவரது திறனை சோதிக்க பிச்சை எடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. தயக்கமின்றி அந்த டாஸ்க்கை செய்த கரிஷ்மா, பின்னர் ஜட்ஜ்களுடன் தனது வாய்ப்பு குறித்து விவாதித்தார். அனுபவம் குறைவாக இருப்பதாக ஜட்ஜ்கள் கூறியபோது, வாய்ப்பு கொடுத்தால்தான் தன்னை நிரூபிக்க முடியும் என்று அவர் பதிலளித்தார். இதற்கிடையில் ராஜுவுக்கும் கரிஷ்மாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இறுதியில் கரிஷ்மாவும் ஹோல்டில் வைக்கப்பட்டார்.

அடுத்ததாக பெங்களூருவைச் சேர்ந்த புகழேந்தி ஆடிஷனுக்கு வந்தார். தன்னை கராத்தே மற்றும் கிக் பாக்ஸிங் சாம்பியன் என்றும், மேஜிக் கற்றுக் கொடுப்பவர் என்றும் அறிமுகப்படுத்திய அவர், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு டாஸ்க்கை செய்தார். பின்னர் அவர் முழுமையாக தனது திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும், ஜட்ஜ்களின் மாறுபட்ட கருத்துகளால் அவரும் ஹோல்டில் வைக்கப்பட்டார்.

இதன்பின் சென்னையைச் சேர்ந்த சீனியர் மேனேஜரும் சாப்ட்வேர் இன்ஜினியரிங் துறையில் பணியாற்றுபவருமான ஸ்ரீ நாகநித்யா பங்கேற்றார். 45 வயதிலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார். அவருடன் அரவிந்த் உமாபதியும் ஆடிஷனில் பங்கேற்றார். இருவருக்கும் இடையே தகுதி குறித்து விவாதம் நடந்த நிலையில், சிறப்பாக டிபேட் செய்த அரவிந்த் உமாபதி ஹோல்டில் வைக்கப்பட்டார். ஸ்ரீ நாகநித்யா நிராகரிக்கப்பட்டார்.

44
செலக்ட் ஆன பெண்
Image Credit : jiohotstar

செலக்ட் ஆன பெண்

கடைசியாக கவின் நிலவன் மற்றும் திவ்யா ஆகியோர் ஆடிஷனுக்கு வந்தனர். திவ்யா இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்றும், மக்களுடன் ஒரே வீட்டில் வசித்தால் தன்னுடைய அனுபவம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளும் ஒரு பரிசோதனையாகவே இந்த வாய்ப்பை பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.

மறுபுறம் கவின் தன்னை எம்சி மற்றும் என்டர்டெய்னராக அறிமுகப்படுத்திக் கொண்டார். நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்விப்பதில் நீண்ட கால அனுபவம் இருப்பதாகவும் கூறினார். அவருக்கு வழங்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் தயக்கமின்றி செயல்பட்டார். ஆனால், அந்த டாஸ்க்கை தன்னுடைய தனிப்பட்ட மதிப்புகளுக்கு எதிரானதாக கருதிய திவ்யா முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அது ஒரு டாஸ்க் மட்டுமே என்பதை புரிந்துகொண்டு அதில் பங்கேற்றார்.

ஆச்சரியமாக, இறுதியில் திவ்யா தேர்வு செய்யப்பட்டார். இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த அனுபவமே இல்லாத ஒருவர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கவின் தனது செயல்பாடுகளால் கவனம் ஈர்த்திருந்தாலும், இறுதி தேர்வில் திவ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒட்டுமொத்தமாக இந்த எபிசோடில் மூன்று பேர் நிராகரிக்கப்பட்டனர். ஆறு பேர் ஹோல்டில் வைக்கப்பட்ட நிலையில், ஒருவருக்கு மட்டும் நேரடியாக செலக்ஷன் கிடைத்துள்ளது. அடுத்தடுத்த ரவுண்டுகளில் ஹோல்டில் உள்ள போட்டியாளர்களில் யாருக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதே தற்போது எதிர்பார்ப்பாக உள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Common Man : ஒருத்தர் கூட ரிஜெக்ட் ஆகல... பிக் பாஸ் காமன்மேன் இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட்..!
Recommended image2
Bigg Boss Common Man : ச்சீ... இதெல்லாம் ஒரு டாஸ்கா? முதல் எபிசோடிலேயே சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் காமன்மேன்..!
Recommended image3
Karthigai Deepam : ரேவதியின் அதிரடி முடிவால் ஆடிப்போன குடும்பம்... கார்த்திக்காக காத்திருக்கும் புதிய சிக்கல்!
Related Stories
Recommended image1
Bigg Boss Common Man : ச்சீ... இதெல்லாம் ஒரு டாஸ்கா? முதல் எபிசோடிலேயே சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் காமன்மேன்..!
Recommended image2
Bigg Boss Common Man : ஒருத்தர் கூட ரிஜெக்ட் ஆகல... பிக் பாஸ் காமன்மேன் இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved