- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Bigg Boss Common Man : ஆட்டோ டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்... பிக் பாஸ் காமன்மேன் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்
Bigg Boss Common Man : ஆட்டோ டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்... பிக் பாஸ் காமன்மேன் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்
Bigg Boss The Common Man Today Episode : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் ஆட்டோ டிரைவர் ஒருவர் அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Bigg Boss The Common Man Today Episode
பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடு விறுவிறுப்பாக அமைந்தது. 41 முதல் 50-வது போட்டியாளர்கள் வரை மேடையேறி தங்களது திறமைகளை நிரூபிக்க முயன்ற நிலையில், சிலர் நடுவர்களின் கவனத்தை ஈர்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். சிலரின் செயல்பாடு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் அவர்களின் பிக்பாஸ் பயணம் முடிவுக்கு வந்தது.
சுந்தர பாண்டிக்கு ஏமாற்றம்
41-வது போட்டியாளராக களமிறங்கிய ஜோதிடர் சுந்தர பாண்டி, ராஜலட்சுமியுடன் விவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டாலும், சுந்தர பாண்டியின் ஒட்டுமொத்த செயல்பாடு நடுவர்களை கவரவில்லை. இதனால் அவர் ரிஜெக்ட் செய்யப்பட்டார்.
42-வது போட்டியாளரான ராஜலட்சுமி, மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்த குங்ஃபூ மாஸ்டர். சுந்தர பாண்டியுடன் நடந்த விவாதத்தில் பங்கேற்ற அவர், தனது கருத்துகளை முன்வைத்தார். இருந்தாலும் அவரது பிரசன்டேஷன் போதுமான அளவு சுவாரஸ்யமாக இல்லை என நடுவர்கள் கருதியதால் ரிஜெக்ட் என அறிவிக்கப்பட்டது.
செலக்ட் ஆன ஷேர் ஆட்டோ டிரைவர்
43-வது போட்டியாளரான ரியானா ராஜு, திருநங்கை சமூகத்தின் உரிமைகள் மற்றும் முன்னேற்றம் குறித்து தனது கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்தார். குறிப்பாக வேலைவாய்ப்பைப் பெறுவதில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து பேசிய அவர், தங்கள் சமூகத்தில் உள்ள திறமையாளர்களுக்கு பிரதான தளங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரது கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்த நடுவர்கள், ரியானாவை ஹோல்டு பட்டியலில் வைத்தனர்.
44-வது போட்டியாளராக வந்த கலீல் பாஷா, ஷேர் ஆட்டோ ஓட்டுநராக இருப்பதுடன் கானா பாடகராகவும் திகழ்கிறார். தனது பாடல் திறமையை மேடையில் வெளிப்படுத்திய அவர், தனது எனர்ஜியால் நடுவர்களை கவர்ந்தார். மேலும், ரியானாவுடன் ஷோவுக்கான தகுதி குறித்து சூடான விவாதத்திலும் ஈடுபட்டார். அவரது தன்னம்பிக்கையும் தனித்துவமான அணுகுமுறையும் நடுவர்களுக்கு பிடித்ததால் செலக்ட் என அறிவிக்கப்பட்டார்.
எனர்ஜியான ஷாமாவுக்கு கிரீன் சிக்னல்!
45-வது போட்டியாளரான சுப்ரமணி, டேட்டா சயின்டிஸ்ட்டாக பணியாற்றி வருவதுடன், கடந்த சில ஆண்டுகளாக மீடியா துறையில் தனது ஆர்வத்தை வளர்த்து வருவதாக தெரிவித்தார். ஆனால் ஆடிஷனுக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது அவருக்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்தது. இதனால் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இருந்தாலும், இறுதியில் ரிஜெக்ட் செய்யப்பட்டார்.
46-வது போட்டியாளரான ஷாமா, வாழ்க்கையில் புதிதாக பல விஷயங்களை முயற்சி செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை பகிர்ந்துகொண்டார். அவரது உற்சாகமான செயல்பாடும் கலகலப்பான அணுகுமுறையும் நடுவர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து ஷாமா செலக்ட் செய்யப்பட்டார்.
நடுவர்களையே கலாய்த்த சுகுமார்!
47-வது போட்டியாளரான ஆங்கர் சுகுமார், ராப் பாடலுடன் தனது ஆடிஷனை தொடங்கினார். அதுமட்டுமின்றி நான்கு நடுவர்களைப் பற்றிய தனது நேரடியான கருத்துகளையும் வெளிப்படையாக கூறினார். பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதாகவும், ஆண்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் கூறிய கருத்து மாயாவுடன் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான விவாதத்துக்குப் பிறகு சுகுமார் ஹோல்டு செய்யப்பட்டார்.
48-வது போட்டியாளரான மாயா நடாஷன், தனது குடும்பத்தில் தன்னை வேறு பெயரில் அழைப்பதாகவும், மாடலிங் துறைக்காக “மாயா” என்ற பெயரை பயன்படுத்தியதாகவும் கூறினார். ஆனால் அவர் அளித்த பிரசன்டேஷன் நடுவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் மாயா ரிஜெக்ட் செய்யப்பட்டார்.
நடிப்பு டாஸ்க்கில் தடுமாறிய நர்மதா
49-வது போட்டியாளரான பிரியங்கா பால், சுமார் பத்து ஆண்டுகளாக மீடியா துறையில் வாய்ப்பு தேடி வருவதாக கூறினார். ஆங்கரிங் உள்ளிட்ட துறைகளிலும் முயற்சி செய்துள்ள அவர், மேடையில் நம்பிக்கையுடன் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
நல்ல எனர்ஜியுடன் பேசியதோடு, நடுவர்களின் கேள்விகளையும் திறம்பட எதிர்கொண்டார். அவரது அணுகுமுறை நடுவர்களுக்கு பிடித்திருந்தாலும், இறுதியில் ஹோல்டு பட்டியலில் வைக்கப்பட்டார். மேடையை விட்டு வெளியேறும் முன் நடுவர்களுடன் அவர் நடத்திய ஜாலியான வாக்குவாதமும் கவனம் பெற்றது.
50-வது மற்றும் இந்த எபிசோட்டின் கடைசி போட்டியாளராக நர்மதா களமிறங்கினார். CA-வான இவர், நீண்ட காலமாக மீடியா துறையில் நுழைய வேண்டும் என்ற ஆசையுடன் இருப்பதாக தெரிவித்தார். அவருக்கு நடிப்பு தொடர்பான டாஸ்க் வழங்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அதை வெளிப்படுத்த முடியாததால், நர்மதா ரிஜெக்ட் செய்யப்பட்டார்.

