MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : சிந்தாமணியின் நாடகத்தால் பிரியப் போகும் ரேகா-சத்யா... முத்துவை அவமானப்படுத்திய விஜயா..!

Siragadikka Aasai : சிந்தாமணியின் நாடகத்தால் பிரியப் போகும் ரேகா-சத்யா... முத்துவை அவமானப்படுத்திய விஜயா..!

Siragadikka Aasai Serial 04 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி போட்ட டிராமாவை நம்பி ரேகா அவருடன் சென்றுள்ளார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 04 2026, 09:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : Jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், முத்துவும் மீனாவும் வீட்டின் மேல்தளத்தில் புதிய அறை கட்டும் பணிக்காக மேஸ்திரியிடம் செலவு விவரங்களை கேட்டறிந்து, அதற்கான பட்ஜெட்டையும் தயார் செய்கிறார்கள். வேலை தொடங்கும் முன் அட்வான்ஸ் தொகையை கொடுக்க வேண்டும் என்பதால், அந்த பணத்தை குடும்பத்தின் பெரியவரான விஜயா கையால் கொடுக்க வேண்டும் என்று முத்து விருப்பம் தெரிவிக்கிறார். தனது தந்தை இருந்திருந்தால் அவர் கையாலேயே கொடுத்திருப்பார் என்றும், இப்போது அந்த இடத்தில் அம்மாவே இருக்கிறார் என்றும் உணர்ச்சியுடன் கூறுகிறார்.

Karthigai Deepam : ரேவதி காட்டிய வீடியோவால் கொந்தளித்த சந்திரகலா... கார்த்தி - ரேவதியை பிரிக்க புதிய சதி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
திமிர் காட்டும் விஜயா
Image Credit : Jiohotstar

திமிர் காட்டும் விஜயா

ஆனால், முத்துவின் வேண்டுகோளை விஜயா நேரடியாக நிராகரிக்கிறார். "நீ கட்டும் அறைக்காக நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும்?" என்று கூறிவிட்டு அங்கிருந்து கோபமாக வெளியேறுகிறார். இதனால் முத்துவும் மீனாவும் மிகுந்த வருத்தமடைகிறார்கள். அப்போது களமிறங்கும் ஸ்ருதி, ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை வகுக்கிறார். விஜயா பணம் கொடுத்தால் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறி ஆசை காட்டுகிறார்.

OTT Releases : இதயம் முரளி முதல் வதந்தி 2 வரை... இந்த வாரம் ஓடிடியில் தூள் கிளப்ப வரும் படங்கள் & வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

Related Articles

Related image1
Siragadikka Aasai : முத்து உடைத்த ரகசியம்... அம்பலமான ரோகிணியின் சீக்ரெட் பிளான், அதிர்ந்துபோன விஜயா...!
Related image2
Siragadikka Aasai : சவால்விட்ட ரோகிணிக்கு சவுக்கடி கொடுத்த விஜயா... மனோஜை மிரட்டிய கனகாவின் அம்மா!
35
ஸ்ருதியின் ஸ்மார்ட் ஐடியா
Image Credit : Jiohotstar

ஸ்ருதியின் ஸ்மார்ட் ஐடியா

இதைக் கேட்ட விஜயா மனம் மாறி, தானாகவே பணத்தை எடுத்து கொடுப்பதோடு, மீனாவைப் பற்றியும் பாராட்டி பேசுகிறார். இந்த முழு சம்பவத்தையும் ஸ்ருதி வீடியோவாக பதிவு செய்கிறார். இதைப் பார்த்த ஸ்வேதாவுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் குழப்பமாகிறது. இதற்கிடையில், முத்து மற்றும் மீனா, மீனாவின் தாய் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு குடும்பத்தினர் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் சூழலில் ரேகாவும் இருக்கிறார். அந்த நேரத்தில் சிந்தாமணியும் அவரது கணவரும் தங்கள் திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்.

45
சிந்தாமணி போடும் டிராமா
Image Credit : Jiohotstar

சிந்தாமணி போடும் டிராமா

ரேகாவையும் சத்யாவையும் தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, சிந்தாமணி தனது கணவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறி கண்ணீர் மல்க நாடகம் ஆடுகிறார். அவரது பேச்சை நம்பிய ரேகாவும் சத்யாவும் உடனடியாக அவர்களுடன் கிளம்பிச் செல்கிறார்கள். இந்த சம்பவம் முத்துவுக்கு சிறிய சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், கணவர் உடல்நிலை குறித்து ஒரு மனைவி பொய் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையால் அவர் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

55
சிக்குவாரா மனோஜ்?
Image Credit : Jiohotstar

சிக்குவாரா மனோஜ்?

மறுபுறம், மனோஜ் குழப்பத்தில் இருக்கும் நிலையில், ரோகிணி அவரை மருத்துவ பரிசோதனைக்கு தன்னுடன் வருமாறு வலியுறுத்துகிறார். "இந்தக் குழந்தைக்கு நீதான் அப்பா, அதனால் ஒவ்வொரு செக்கப்புக்கும் நீயும் வர வேண்டும்" என்று கூறுவதால் மனோஜ் அதிர்ச்சியடைகிறார். இந்நிலையில், ரோகிணியின் இந்த முடிவு மனோஜை புதிய சிக்கல்களில் சிக்க வைக்குமா? சிந்தாமணியின் திட்டத்தின் உண்மை வெளிச்சத்துக்கு வருமா? முத்து-மீனா வாழ்க்கையில் இனி என்ன திருப்பங்கள் காத்திருக்கின்றன என்பது அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியவரும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Karthigai Deepam : ரேவதி காட்டிய வீடியோவால் கொந்தளித்த சந்திரகலா... கார்த்தி - ரேவதியை பிரிக்க புதிய சதி!
Recommended image2
Siragadikka Aasai : முத்து உடைத்த ரகசியம்... அம்பலமான ரோகிணியின் சீக்ரெட் பிளான், அதிர்ந்துபோன விஜயா...!
Recommended image3
Karthigai Deepam : சிவனாண்டியின் ஆட்டம் ஓவர்... கோவில் நகை திருட்டில் கார்த்திக் வைத்த செக்...!
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : முத்து உடைத்த ரகசியம்... அம்பலமான ரோகிணியின் சீக்ரெட் பிளான், அதிர்ந்துபோன விஜயா...!
Recommended image2
Siragadikka Aasai : சவால்விட்ட ரோகிணிக்கு சவுக்கடி கொடுத்த விஜயா... மனோஜை மிரட்டிய கனகாவின் அம்மா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved